24 ஆண்டுக்கு பின் உருவான, 'ஒக்கி!' அரிதான புயல் என ஆய்வாளர்கள் கருத்து Dinamalar
பதிவு செய்த நாள் :
24 ஆண்டுக்கு பின் உருவான, 'ஒக்கி!'
அரிதான புயல் என ஆய்வாளர்கள் கருத்து

இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு பின், கன்னியாகுமரி கடல் பகுதியில், 'ஒக்கி' புயல் உருவாகியுள்ளது. 'ஒக்கி' புயல் உருவானது குறித்து, புவி மற்றும் கடலியல் ஆய்வாளர்கள், ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.

 24 ஆண்டுக்கு பின், உருவான, 'ஒக்கி!',  அரிதான, புயல் என ஆய்வாளர்கள் ,கருத்து

இந்திய பெருங்கடலில் உருவான, 'ஒக்கி' புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் இருந்து, மிக விரைவாக, 10 மணி நேரத்திற்குள், புயலாக வலுப்பெற்றுள்ளது.

அரிதான நிகழ்வு


இது, இந்திய பெருங்கடலில் கன்னியா குமரியில் இருந்து, 360 கி.மீ., துாரத்தில், பூமத்திய ரேகைக்கு மேல், 7 டிகிரி தொலை வில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின், புயலாகவும்மாறியது.பொதுவாக, பூமத்திய ரேகை பகுதியில், புயல் உருவாவது என்பது, மிகவும் அரிதான நிகழ்வு என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மைய, ஓய்வு பெற்ற துணை பொது இயக்குனர், ஒய்.இ.ஏ.ராஜ் கூறியதாவது: பூமத்திய ரேகைபகுதியில், 5 டிகிரி துாரத்திற்கு கீழ், காற்ற ழுத்த தாழ்வு பகுதிஉருவானால், அது, புயலாக மாறுவது மிகவும் அரிது.அந்த பகுதியில் உள்ள நில அமைப்புப்படி, புயல் சுழல்வதற்கு சாதகமான சூழல் கிடைக்காது.அதனால்தான், துாத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில், எப்போதும் புயல் தாக்கம் இருப்பதில்லை.ஆனால், இந்த ஒக்கி புயல், பூமத்திய ரேகையில் இருந்து, வடக்கு பகுதியில் உருவாகியுள்ளது.

மிதமான பாதிப்பு


மிக விரைவாக புயல் உருவாகி, அது, மேலும் வடக்கு நோக்கி நகர்ந்ததால், புயல் வலுவடைந்து உள்ளது. புயலின் கண் எனப்படும் மையப் பகுதி, கடல் வழியே மட்டுமே பயணிக்கிறது.அதன் மழை மேக சுவர்கள் மட்டுமே, நிலப்பகுதியை ஒட்டி சென்றுள்ளதால், மிதமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1961ம் ஆண்டுக்கு பிந்தைய ஆவணங்களை ஆய்வு செய்ததில், 1964ல், தனுஷ்கோடியை அழித்த, புயலுக்கு பின், 1993ல், இப்பகுதியில் ஒரு புயல் ஏற்பட்டது.

அந்த புயல்உருவான இடத்தின் அருகில் தான், தற்போது, 'ஒக்கி' புயலும் உருவாகியுள்ளது. 1993ல், புயல் பயணித்த, அதே பாதையில் தான், தற்போதைய புயலும் சுழல்கிறது. இந்த புயல், கடல் மற்றும் புவியியல் ரீதியாக,அரிதாக

Advertisement

பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர்
கூறினார்.

முக்கடலில் பயணம்: வங்கக் கடலில், பெரும்பாலும் அந்தமான் அருகே, காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டு, புயலாக மாறும். சில நேரங்களில், தென் சீனக்கடலில் உருவாகி, வங்கக் கடலுக்குள் நுழையும். பெரும்பாலான புயல்கள், வங்கக் கடல் கரையில், சென்னை, நெல்லுார், விசாகப்பட்டினம், பாரதீப், கோல்கட்டா ஆகிய இடங்களில், கரையை கடந்து வலுவிழக்கும்.

'வர்தா, சபாலா' போன்ற சில புயல்கள், அரபிக் கடலில் கரை சேர்ந்துள்ளன. ஆனால், நேற்று குமரி கடல் பகுதியில் உரு வான புயல், முதலில் வங்கக் கடலில் காற்ற ழுத்த தாழ்வு பகுதியாகி, முக்கடல் சங்கமிக்கும் இந்திய பெருங்கடலில் புயலாகி, அரபிக் கடலுக்குள் நகர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement