88 schoolgirls in India forced to strip as punishment by teachers | பள்ளியில் 88 மாணவியரின் ஆடைகளை அகற்றி நிற்க வைத்த கொடூரம்| Dinamalar

பள்ளியில் 88 மாணவியரின் ஆடைகளை அகற்றி நிற்க வைத்த கொடூரம்

Added : டிச 01, 2017 | கருத்துகள் (44)
Advertisement
பள்ளி மாணவிகள்,school students, ஆடைகள்,clothes,  தண்டனை, punishment,அருணாச்சல பிரதேசம்,Arunachal Pradesh,  காந்தி பாலிகா வித்யாலயா , Gandhi Balika Vidyalaya,  தனியார் பள்ளி, Private School, ஆசிரியர்கள், teachers, போலீஸ் ,police, schoolgirls,அருணாச்சல், arunachal,

இடாநகர்: அருணாச்சலில் உள்ள ஒரு பள்ளியில், ஆசிரியரை தரக்குறைவாக விமர்சித்ததாக கூறி, 88 மாணவியரின் ஆடைகளை அகற்றி, அவர்களை, சக மாணவர்கள் முன், நீண்ட நேரம் நிற்க வைத்து, தண்டனை கொடுத்த கொடூரம் நடந்து உள்ளது.


விமர்சனம்:

அருணாச்சல பிரதேசத்தில், பபும் பாரே மாவட்டத்தில், சகாலி என்ற நகரத்தில், காந்தி பாலிகா வித்யாலயா என்ற, தங்கி படிக்கும் வசதியுடன் கூடிய தனியார் பள்ளி உள்ளது. சமீபத்தில், இந்த பள்ளியில், தலைமை ஆசிரியரையும், சில மாணவர்களையும் பற்றி, தரக்குறைவாக விமர்சித்து எழுதப்பட்டிருந்த ஒரு காகிதம், ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இடையில் உள்ள இடத்தில் கிடந்தது. இதைப் படித்து பார்த்த தலைமை ஆசிரியரும், மற்ற ஆசிரியர்களும், கடும் ஆத்திரம் அடைந்தனர்.


கொடூர தண்டனை:

ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இடையில் உள்ள இடத்தில் இந்த காகிதம் கிடந்ததால், அந்த வகுப்புகளில் படிக்கும் மாணவியர் தான், இதை எழுதியிருப்பர் என, ஆசிரியர்கள் சந்தேகப்பட்டனர். இதையடுத்து, அந்த இரண்டு வகுப்புகளிலும் படிக்கும், 88 மாணவியரையும் வரவழைத்து, மற்ற மாணவியர் முன் நிறுத்தினர். அவர்கள் அணிந்திருந்த ஆடைகளை அகற்றிய ஆசிரியர்கள், உள்ளாடைகளுடன், அந்த மாணவியரை நீண்ட நேரம் நிற்க வைத்தனர்.


வழக்கு பதிவு:

இதுகுறித்த தகவல், அங்குள்ள மாணவர் அமைப்பினருக்கு தெரிந்தது. அவர்கள், போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், தலைமை ஆசிரியரும், மேலும் இரண்டு ஆசிரியர்களும் தான், மாணவியருக்கு இந்த கொடூர தண்டனையை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.Guna Sekaran - Madurai,இந்தியா
06-டிச-201717:23:20 IST Report Abuse
M.Guna Sekaran சட்டம் கடுமையாக ஆக்க வேண்டுமே தவிர கட்டாயம் ஆக்க கூடாது . அரசு பதவிகளிலும் மற்றும் பொது பதவிகளிலும் இருப்பார்கள் தவறு செய்தால் அவர்களின் பதவியை பறிமுதல் செய்யா வேண்டும் , மேலும் தகுதி நீக்கமும் செய்யா வேண்டும் ,அப்படி செய்தால் தான் அடுத்தவரகில் பயப்படுவார்கள் ,மாறாக பொது பதவிகளுக்கு வருபவராகளை தவறாக நடந்து கொண்டாலும் ,இல்லை அப்படி செய்யா துடினாலும் தண்டனை இருவருக்கும் வழங்க வேண்டும் , மாறாக யாரும் யாரையும் தவறான பாதைக்கு செல்லும் மாறு பய முறுத்த கூடாது பதவிகளை பயன்படுத்தி .
Rate this:
Share this comment
Cancel
ram, nigeria - Lagos,நைஜீரியா
06-டிச-201712:11:00 IST Report Abuse
ram, nigeria பொது மக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்கவேண்டிய நேரம் வந்து விட்டது என்றே நினைக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
LoveDemocracy - Houston,யூ.எஸ்.ஏ
06-டிச-201706:38:03 IST Report Abuse
LoveDemocracy Just shut this school down and let the parents be responsible in choosing the right school and have such schools learn a lesson. Dignity and discipline is more important than education. I hate boarding schools for this one reason, since most of them treat the students as laborers not as children.
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
01-டிச-201716:09:16 IST Report Abuse
தமிழர்நீதி மாணவிகள் வருங்காலத்து தூண்கள் , தேசத்தை உலகை வழிநடத்துவோர் என்று யோசிக்காமல் கல்விக்கூடத்தில் கல்வி வாங்க வந்த அடிமைகள் நுகர்வோர் என்று கருதப்படுவதால் இப்படி கொடூரம் நடக்குது . பள்ளிகளை சூழ உயரமான மதில்கள் இருப்பதால் இப்படி பூட்டி போட்டு கொடுமை படுத்துகிறார்கள் . மத்தியில் இல்லாமல் மக்கள் கண்காணிப்பில் பள்ளி மாணவர்கள் கொண்டுவரப்படவேண்டும் . இன்னும் தமிழ்கத்தில் சிறந்த பள்ளிகள் இப்படித்தான் நேரம் கடந்துவந்தால் கொடுமை படுத்தப்படுகிறார்கள் . இன்னும் பள்ளி கேம்பஸ் உள்ளுக்குள் இருக்கும் தலைமை ஆசிரியர்கள் மனைவிகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்துகிறார்கள் ,கழிவறை சுத்தம் செய்திட சொல்கிறார்கள் ,பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுத்துகிறார்கள் . இந்தியாவின் கலாச்சரம் பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறலை வெளியில் சொல்வதில்லை. அப்படிசொன்னாலும் பள்ளி நிர்வாகம் மாணவியை குற்றம் சொல்லி எதிர்காலத்தை அழித்துவிடும் . இன்னும் சிறுமிகள் ஊர்வலம் பொதுக்கூட்டம் அனுப்பப்படுகிறார்கள் . நிர்வாகம் ஒரு மாணவிக்கு இவ்வளவு என்று வாங்கிக்கொண்டு மாடுகள் போல வண்டியில் ஏற்றி அனுப்பிவிடுகிறார் . இதுல கின்னாஸ் சாதனை , இன்னும் பல விழாக்களுக்கு , கூட்டம் சேர்க்க பல்லை மாணவிகள் தான் பயன்படுத்தப்படுகிறார்கள் . நாடு நாசமாகிக் கொண்டிருக்கு தனியார் பள்ளிகளால்.
Rate this:
Share this comment
Cancel
Amanullah - Riyadh,சவுதி அரேபியா
01-டிச-201713:05:55 IST Report Abuse
Amanullah கண்டனத்துக்குரிய செயல்... மாணவ மாணவியர் தவறு செய்திருந்தாலும் அதைத் திருத்தவேண்டியது ஆசிரியர்களின் கடமை... அவர்களே இப்படியென்றால், வெட்கக்கேடு
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
01-டிச-201713:03:06 IST Report Abuse
vnatarajan எப்படி அந்த இரண்டு வகுப்பு மாணவர்கள் மேல் சந்தேகம் எழும் . ஏன் வேறு வகுப்பு மாணவர்கள் எழுதி அந்த காகிதத்தை அந்த இடத்தில் போட்டிருக்கலாமே. அப்படியே குறிப்பிட்ட அந்த இரண்டு வகுப்பின் மேல் சந்தேகம் எழுந்தாலும் எழுதி போட்ட மாணவர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்களை மட்டும்தானே கண்டிக்கவேண்டுமேயொழிய மொத்த மாணவர்களையும் இப்படி கொடூரமாக தண்டிக்க கூடாது . இந்த தண்டனை கொடுத்த தலைமை ஆசிரியர் மற்ற இரண்டு ஆசிரியர்கள் மேல் வழக்கு பதிந்தால் மட்டும் போதாது அவர்களுடைய கீழ்தரமற்ற நாகரீகமற்ற செயல் களுக்கு தகுந்த தண்டனையை கோர்ட்டு மூலம் வாங்கிக்கொடுத்து பதவியிலிருந்து வெளியே தள்ளவேண்டும். .
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-டிச-201713:51:24 IST Report Abuse
தமிழ்வேல் ஏன் ? அப்பேற்பட்ட வாத்திகளே இதை எழுதி போட்டிருக்கக்கூடாது ?...
Rate this:
Share this comment
Cancel
01-டிச-201712:47:26 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பலர் இங்கே சொல்வது போல ஒரு ஆசிரியரை அம்மணமாக நிற்கவைத்தால் அது அந்த ஆசிரியர் தொழிலை புனிதமாக செய்து வருபவர்களுக்கு மரியாதையாக இருக்காது. உடனடியாக கைது செய்து சிறையில் அடையுங்கள். அதை பார்த்து மற்ற இதுபோன்ற கொடூர குணமுள்ள ஆசிரியர்கள் திருந்தட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
01-டிச-201712:16:38 IST Report Abuse
Sanny அண்மையில் ஒரு ஆசிரியை மாணவிகளை கொண்டு வயலில் வேலை செய்வித்தார், இன்னொருவர் கழிவறையை கைகளால் சுத்தம் பண்ணவைத்தார், இப்பொது இந்த சம்பவம், எனக்கு ஒரே ஒரு டவுட், என்ன மனநிலையில் இந்த ஆசிரியைகள் இப்படி செய்கிறார்கள், தங்கள் குழந்தைபோல தங்கள் மாணவர்களை பார்பதில்லையா? அல்லது இவர்களுக்கு அரசியல் பின்புல உதவிகள் இருக்கும் தைரியமா?
Rate this:
Share this comment
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
06-டிச-201714:06:00 IST Report Abuse
Needhiyin Pakkam Nil ஒரு மனநிலையும் கிடையாது சார், எந்த தவறு செய்தாலும் வெறும் சஸ்பெண்ட் தவிர வேற எந்த தண்டனையும் கிடையாது அதான் அந்த திமிரு இவர்களுக்கு. டிஸ்மிஸ் என்று சொல்லுங்கள் தன்னால அடங்குவார்....................
Rate this:
Share this comment
Cancel
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar - scarborough,கனடா
01-டிச-201712:00:07 IST Report Abuse
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar Is this going to be a digital India? The way of students grow from good teachers. but, the teachers weird behavior not bringing up to digital India. The BJP government should involved and stop kind of stupid idea from any school any where in India.
Rate this:
Share this comment
S Ramkumar - Tiruvarur,இந்தியா
07-டிச-201715:34:05 IST Report Abuse
S Ramkumarஹெலோ இதற்கும் டிஜிட்டல் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தமோ? புண்ணாக்கு தானமாக கருத்து கூறாதீர். பெரும்பாலான பள்ளிகள் மாநில அரசின் கீழ் வருபவை. பிஜேபி இருந்தாலும் இக் குற்றம் நடக்கும். காங்கிரஸ் ஆண்டாலும் நடக்கும்....
Rate this:
Share this comment
Cancel
Sathish Kumar - chennai,இந்தியா
01-டிச-201711:52:31 IST Report Abuse
Sathish Kumar அந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை களை நிர்வாணமாக பள்ளி முன்னாடிஓட விடவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை