இனி தான் இருக்கு மிக கனமழை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இனி தான் இருக்கு மிக கனமழை

Updated : டிச 01, 2017 | Added : டிச 01, 2017 | கருத்துகள் (5)
Advertisement
தமிழ்நாடு வெதர்மேன்,Tamil Nadu Weatherman, கனமழை,heavy rain, ஒக்கி புயல், Oki storm, பாபநாசம் அணை, Papanasam dam, வங்கடல்,Bengal sea,   கன்னியாகுமரி, Kanyakumari, தூத்துக்குடி , Thoothukudi, நெல்லை ,Nellai,  மணிமுத்தாறு அணை, Manimuthar dam,லட்சத்தீவு,Lakshadweep, பெரியாறு அணை, Periyar dam,

சென்னை : கன்னியாகுமரி அருகே வங்கடல் பகுதியில் உருவான ஒக்கி புயல் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ளது. ஆனால் இதுவரை பெய்தது சாதாரண தான். இனி தான் மிக கடுமையான மழை இருக்கு என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இனி தான் இருக்கு மிக கனமழை :


இனிதான் கனமழை: வெதர்மேன் கணிப்பு

மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் இன்று காலை (9 மணியளவில்) புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அதில் அவர் கூறியிருப்பதாவது : இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில், மிக அதிகபட்சமாக மணிமுத்தாறு அணைப்பகுதியில் 451 மி.மீ., மழை பெய்துள்ளது. 1992 ம் ஆண்டிற்கு பிறகு பெய்த மிக அதிகபட்ச மழைப்பொழிவு இது என்றே கூறலாம்.
புயல் சின்னம் லட்சத்தீவு நோக்கி நகர்ந்து சென்று விட்டது. விருதுநகர், தூத்துக்குடி, திண்டுக்கல் என ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது. மீண்டும் ஒரு கனமழை உள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடியில் இன்னும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. பிற்பகலுக்கு பிறகு இதை விட இன்னும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மக்கள் கவனமாக இருக்கவும். சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.


பாபநாசம் அணை நிரம்பும் :

ஒக்கி புயல் கடந்து சென்று விட்டாலும் அதன் தாக்கம் காரணமாக இன்று பிற்பகலுக்கு பிறகு மற்றொரு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு மாவட்டங்களான திண்டுக்கல், தேனியிலும் அதிக மழை பெய்யும். தேனியில் பெரியாறு அணை பகுதியில் கனமழை பெய்யும். பாபநாசம், மணிமுத்தாறு, மாஞ்சோலை, கோதையாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மிக மிக கனமழை பெய்யலாம்.

இந்த மிக மிக கனமழை பெய்யும் என்பதால் பாபநாசம் அணை நிரம்ப வாய்ப்புள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவும் அதிகமாகும். காரைக்கால், கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் புயலின் தாக்கத்தால் கனமழை பெய்யலாம். திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
01-டிச-201717:12:20 IST Report Abuse
mindum vasantham Kumari has got very good rains,usually they get good rains,nellai and thoothukudi has got decent rains this season,but madurai,theni ,sivagangai ,virudhunagar,trichy nesds more rains one way to get it is a cyclone should cross pamban are not kumari
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
01-டிச-201715:54:25 IST Report Abuse
ganapati sb அரசின் அதிகாரப்பூர்வமான வானிலை ஆராய்ச்சி மைய கருத்துகளையும் அதோடு பின்னர் இந்த அமெச்சூர் வெதர்மென் கருத்தையும் வெளியிடுங்கள்
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
01-டிச-201715:11:12 IST Report Abuse
மலரின் மகள் இவ்வளவு பெரிய மழை பொழிவை சாதாரண மழை தான் என்று சொல்வது சரிதானா. அரசின் மையங்களுக்கு என்று சில விதிகள் உண்டு அதை ஒட்டியே வார்த்தை பிரயோகம் செய்து எச்சரிக்கை தருவார்கள். அவர்களின் பங்களிப்பை குறை சொல்லமுடியாது. அவர்களும் தொடர்ந்து மேம்படுத்தி கொண்டே இருக்கிறார்கள். நேரடியாக சாட்டலைட் தகவல்கள், மற்றும் ஆங்காங்கே நிலத்தில் நிறுவ பட்டிருக்கின்ற கருவிகளையும், பழைய நிகழ்வுகளையெல்லாம் வைத்து தான் கணித்து தருகிறார்கள். அண்டை நாடுகளுடனான தகவல் தொடர்புகளையும் பெற்றே கணிக்கிறார்கள். வெறும் இன்டர்நெட் தகவல்களை வைத்து புரிந்து கொண்டு சொல்லும் தனியர்களை முழுதும் நம்ப கூடாது. அரசு மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்னும் போது இவர் மழை இல்லை சென்னைக்கு என்று கணித்தார். மழை பொழிந்தது. இவர் போன்றோருக்கு அரசின் தகவல்கள் பொய்த்து தான் கணிக்கும் தகவல் சரியாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் வந்து விடுவதாக தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
01-டிச-201713:53:52 IST Report Abuse
VELAVANKUMAR இராமநாதபுரத்தில் மழை பெய்ய வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Ram Babu - Trivandrum,இந்தியா
01-டிச-201713:05:31 IST Report Abuse
Ram Babu புளியங்குடி ஏரியாவில் கன மழை பெய்யவில்லை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை