பாம்பு பிடித்து அசத்தும் பெண்| Dinamalar

பாம்பு பிடித்து அசத்தும் பெண்

Added : டிச 02, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 பெண்,Women,  கேரளா,Kerala, வனத்துறை,Forests, நாகம்,
Cobra, ராஜி, Raji,   மலைப்பாம்பு ,Python, திருவனந்தபுரம், Trivandrum,பாம்பு ,Snake,

திருவனந்தபுரம் : கேரளாவில், நாகம் உட்பட, கொடிய விஷமுடைய எல்லா வகை பாம்புகளையும், சாமர்த்தியமாக பிடிப்பதில் வல்லவராக, 33 வயது பெண் திகழ்கிறார்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள, பலோட் பகுதியைச் சேர்ந்த பெண், ராஜி, 33. இவர், வனப்பகுதிகளில் சுற்றித்திரிந்து வளர்ந்ததால், அங்குள்ள பாம்புகளை எளிதில் பிடித்து அசத்துகிறார். ஒன்பது மாதங்களில் மட்டும், திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களில், வீடுகளில் புகுந்த, 119 பாம்புகளை பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்து உள்ளார். கொடிய விஷமுடைய நாகம், மலைப்பாம்பு உள்ளிட்ட, அனைத்து வகை பாம்புகளையும் சாதுரியமாக பிடிக்கிறார்.

இது குறித்து, ராஜி, நிருபர்களிடம் கூறியதாவது: சிறு வயதில் இருந்தே, வனப்பகுதிகளில் வசித்து வருவதால், ஏராளமான பாம்புகளை பார்த்துள்ளேன். ஆர்வ மிகுதியால், பாம்புகளை பிடிக்க துவங்கினேன். தற்போது, அக்கம்பக்கத்தில் உள்ளோர் வீடுகளில் பாம்பு புகுந்தால், அவற்றை மீட்கும் பணியை செய்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இரு பெண் குழந்தைகளுக்கு தாயான ராஜி, பாம்பு பிடிக்க, ஸ்கூட்டரில் செல்கிறார். இரவில், பாம்பு பிடிக்க அழைப்பு வந்தால், தன் கணவருடன் செல்கிறார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kasiviswanathan - tuticorin,இந்தியா
02-டிச-201708:08:18 IST Report Abuse
kasiviswanathan என்னக்கு கற்றுக்கொடுங்கள் ப்ளீஸ்
Rate this:
Share this comment
Cancel
kasiviswanathan - tuticorin,இந்தியா
02-டிச-201708:03:16 IST Report Abuse
kasiviswanathan என்னக்கு கற்றுக்கொடுங்க அம்மா. நானும் உங்களைப்போல் சேவை பண்ணனும் இயன்றவரை. போன் 9488338514
Rate this:
Share this comment
சென்னை பாலன் - Chennai,இந்தியா
02-டிச-201708:31:19 IST Report Abuse
சென்னை பாலன் தங்களின் ஆர்வம் பாராட்டத்தக்கது . முயற்சி செய்து பாருங்கள். கட்டாயம் தமிழ்நாட்டிலும் நிறைய வாய்ப்புக்கள் உள்ளன . ஒரு விசயம் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் , ராஜீ அவர்கள் சிறுவயது முதல் பயிற்சி எடுத்துகொண்டு உள்ளர்....
Rate this:
Share this comment
Cancel
சென்னை பாலன் - Chennai,இந்தியா
02-டிச-201706:49:40 IST Report Abuse
சென்னை பாலன் பாராட்டுக்கள் . கேரளாவில் இருக்கும் மனித ரூபா விஷப்பாம்புகளை யார் பிடிக்கப்போகிறார்கள்? . கும்பல்கும்பலா RSS ஆதரவாளர்கள் வீட்டின் முன்பு சென்று , கத்தி கூப்பாடு போடு , கற்கள் எரிந்து அவர்களின் வீடுகளை சேதப்படுத்ததால் , RSS ஆதரவாளர்கள் தனியாக சிக்கினால் கத்தியால் குத்தி கொலைசெய்தல் . இதுதான் இன்றைய கேரளா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை