வேன் - லாரி மோதல்: 10 பேர் படுகாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேன் - லாரி மோதல்: 10 பேர் படுகாயம்

Added : டிச 02, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே, பழுதாகி நின்ற வேன் மீது, லாரி மோதியதில், திருவண்ணாமலைக்கு சென்ற பக்தர்கள், 10 பேர் படுகாயம்அடைந்தனர்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த, 12 பேர், திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்காக, ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு, பெரம்பலூர் அருகே சென்ற போது, வேன் திடீரென பழுதாகி நின்றது. சாலையோரத்தில் வேனை நிறுத்தி, டிரைவர் பழுது பார்த்துக் கொண்டிருந்தார். இதனால், வேனில் பயணம் செய்தவர்கள் கீழே இறங்கி, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது, நாமக்கல்லில் இருந்து, சென்னைக்கு சிமென்ட் லோடு ஏற்றிச் சென்ற லாரி, வேனின் பின்புறத்தில் மோதியது. இதில், வேனுக்கு முன்னால் நின்றிருந்த, 10 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள், பெரம்பலூர் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து, மங்கலமேடு போலீசார் வழக்கு பதிந்து, லாரி டிரைவரை கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை