9 - 12ல் சென்னை மிதக்கும் - ஆற்காடு ஜோதிடர் கணிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

9 - 12ல் சென்னை மிதக்கும் - ஆற்காடு ஜோதிடர் கணிப்பு

Updated : டிச 03, 2017 | Added : டிச 02, 2017 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
9 - 12ல் சென்னை மிதக்கும் - ஆற்காடு ஜோதிடர் கணிப்பு

கார்த்திகை மாதத்தில், கன்னியாகுமரி, மழையால் பாதிக்கும் என்பதை, துல்லியமாக கணித்த ஆற்காடு ஜோதிடர் நாராயணமூர்த்தி, வரும், 9 முதல், 12ம் தேதி வரை, நான்கு நாட்கள், சென்னை வெள்ளத்தில் மிதக்கும் எனவும், கணித்துள்ளார்.

வேலுார் மாவட்டம், ஆற்காட்டைச் சேர்ந்த ஜோதிடர் நாராயணமூர்த்தி என்பவர், கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கத்தை வெளியிட்டு வருகிறார். இதில், 'இந்த ஆண்டு தமிழகத்தில் அதிகமான மழை பெய்து, ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழியும்; ஆறுகளில் வெள்ளம் ஏற்படும்' என, கணிக்கப்பட்டு இருந்தது.

மேலும், கார்த்திகை மாதத்தில், கன்னியாகுமரி மழையால் பாதிக்கும்; அந்தமானில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்படும் எனவும், அந்த பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதேபோல், தற்போது கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும், புயல், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், புதிய புயல் உருவாகி கடலுார், ராமேஸ்வரம் பாதிக்கும் எனவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'இந்த ஆண்டு உறை பனி வீசும்; முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆபத்து ஏற்படும், விமான விபத்து ஏற்படும்; சென்னை இருளில் மூழ்கும்' எனவும், சீதாராமய்யர் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஜோதிடர் நாராயணமூர்த்தி கூறுகையில், ''வரும், 9 முதல், 12ம் தேதி வரை, நான்கு நாட்கள், சென்னையில் பலத்த மழை பெய்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். சென்னை நகரம் வெள்ளத்தில் மிதக்கும்; மின்சாரம் இருக்காது,'' என்றார்.
- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paranthaman - kadappa,இந்தியா
04-டிச-201703:36:32 IST Report Abuse
Paranthaman மிஸ்டர் சீர் பாலையா ஜோதிடர்களின் மீது சீறாதீர்கள். கால ஓட்டத்தில் பூமியின் சுழற்சி மந்தமாகி வருகிறது. பூமி மீது வழக்கமாக பாயும் மற்ற கிரக சக்திகளின் போக்கில் மாறுபாடுகள் நேரிடுகின்றன. அதனால் தான் இத்தகைய இயற்கை பேரிடர்கள் வந்து நம்மை தாக்குகின்றன. பூமியின் மந்த சுழற்சி மனித குல பெருக்கத்தாலும் கட்டடங்கள் தரும் அதிக அழுத்தத்தாலும் ஏற்படுகின்றன. சுழற்றி விடப்படும் பொம்பரம் எவ்வளவு நேரம் சுழலும்.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
09-டிச-201705:15:47 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்உங்க விஞ்ஞான அறிவை பார்த்து அப்படியே ஆடி போயிட்டேன். உங்களுக்கு இந்த வருட எல்லா நோபல் பரிசும் தரணும்ன்னு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கபோறேன்....
Rate this:
Share this comment
Cancel
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) அப்படி நடந்தால் அவர் சொல்லுவதை நம்பலாம் ...எதற்கும் சென்னை வாசிகள் முன் எச்சரிக்கையுடன் இருப்பது மற்றும் சமாளிக்க தயார் நிலையில் இருப்பது நல்லது ...
Rate this:
Share this comment
Cancel
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
03-டிச-201721:12:08 IST Report Abuse
Nagan Srinivasan வேலுார் மாவட்டம், ஆற்காட்டைச் சேர்ந்த ஜோதிடர் நாராயணமூர்த்தி இவரை weather channelukku அனுப்பினால் நன்று
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
03-டிச-201720:09:30 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இந்த ஜோதிடம் பொய்த்து விடும். இது என்னுடைய ஜோதிடம்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramamoorthy - Chennai,இந்தியா
03-டிச-201718:54:05 IST Report Abuse
Natarajan Ramamoorthy தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை
Rate this:
Share this comment
Cancel
03-டிச-201718:30:09 IST Report Abuse
a.thirumalai உண்மையா இல்லையா தெரியாது. ஆனால் ஓட்டுக்கு பணம் வாங்கிய இந்த மக்கள் மட்டும் பாதிக்கபடுவது உண்மையாக இருக்கும். இந்த கருத்து சரியா தவறா சொல்லுங்கள். தயவு செய்து நம்ம வரிப்பணம் என்று நியாயம் கற்பிக்காதீர்
Rate this:
Share this comment
Cancel
Balan Palaniappan - Chennai,இந்தியா
03-டிச-201717:15:49 IST Report Abuse
Balan Palaniappan எங்கள் ஊரில் மழை பெய்து 25 வருடங்களாகிறது. இந்த ஜோதிடர் வல்லவரென்றால் எப்பொழுது மழை பெய்யும் இரு கணிக்கட்டும். மழை காலத்தில் மழை பெய்யும் என்பதை, அதுவும் தமிழ் நாடு முழுவதும் என்பதற்கு, ஒரு ஜோதிடரும் வேண்டியதில்லை ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டியதில்லை.
Rate this:
Share this comment
தாமரை - பழநி,இந்தியா
03-டிச-201719:46:13 IST Report Abuse
தாமரை வானிலை மையம் சொல்வது தான் பொய்க்கும். ஆனால் சரியாக திறமையுள்ள கணித மேதைகள் கணிக்கும் பஞ்சாங்கம் பொய்ச்சொல்லாது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் கணிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் கிரகணங்கள் பேரழிவு பற்றியெல்லாம் துல்லியமாகக் கணிக்கப்பட்டு நடந்து வருகிறது. சும்மா எதையும் விட்டேத்தியாக கேலியாக மறுக்கலாம். அது பெரிய விஷயமில்லை. ஒழுங்காக அந்த பஞ்சாங்கத்தை வாங்கிப் படித்துப் பாருங்கள் அதிலுள்ளபடி நடக்கிறதா இல்லையா என்று.சும்மா நக்கல் பேசுவது எழுத்து. நீங்களே சென்னை என்று தான் குறிப்பிட்டுள்ளீர்கள். அங்கே இந்த வருடமும் போன வருடமும் அதற்கு முன்னும் பல முறை கனமழை பெய்துள்ளது. மொட்டையாக எங்கள் ஊர் என்று குறிப்பிடுவது வெறும் விதண்டாவாதத்துக்கு. 25 வருடங்களாக மழையில்லாத ஊர் எது சொல்லுங்கள்?...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
03-டிச-201715:26:04 IST Report Abuse
K.Sugavanam தனுஷ்கோடியை சுற்றுலா மய்யம் ஆக்குதல் கூட ஜோசியத்தின் மூலம் கணிக்க முடிகிறது.. சூப்பர்..பாராட்டுக்கள்..
Rate this:
Share this comment
Cancel
Natarajan - Hyderabad,இந்தியா
03-டிச-201714:32:24 IST Report Abuse
Natarajan இந்த பகுத்தறிவு கும்பலுவுக்கு TAASMAC தான் தெரியும் . குடிச்சு குடிச்சு சாவட்டும். புதிய தலைமுறை மலரட்டும்
Rate this:
Share this comment
Raj Pu - mumbai,இந்தியா
05-டிச-201719:36:18 IST Report Abuse
Raj Puஉங்கள் ஊரில் ஹைதராபாதில் டாஸ்மாக் இல்லை ஆனால் வேறு பெயரில் மதுக்கடைகள் இல்லையா, நீங்கள் மதுவே நுகர்ந்து போல கூறுகிறீர்களே...
Rate this:
Share this comment
Cancel
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
03-டிச-201714:24:59 IST Report Abuse
மஸ்தான் கனி துல்லியமாக கணித்த ஆற்காடு ஜோதிடர் நாராயணமூர்த்தி, KK நகரின் தேர்தல் பாதிப்பை துல்லியமாக சொன்னா பணவிரயம் மிச்சமாகும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை