ஜூலி ஜாலி - ராய் லட்சுமி| Dinamalar

ஜூலி ஜாலி - ராய் லட்சுமி

Added : டிச 03, 2017
Advertisement
ஜூலி ஜாலி - ராய் லட்சுமி

கிளர்ச்சி கிளப்பும் கிளாமர் கண்கள்... தேகக் கடலில் துள்ளும் இளமை மீன்கள்... ஒடியும் இடையில் நெளியும் நளினம், வெண்மைகள் மோதி செய்த மெல்லின பெண்மையாய் 'ஜூலி 2' படத்தில் நடிப்பில் கலக்கிய நடிகை ராய் லட்சுமி, ஜாலியாக பேசிய நிமிடங்கள்...
* ஜூலி 2 என்ன ஸ்பெஷல்?இது என்னுடைய 50வது படம். நான் 'பாலிவுட்'டில் அறிமுகமான முதல் படம், இதுவே ஸ்பெஷல் தான்.
* கதை ?ஒரு நடிகை சினிமாவிற்குள் வந்து நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் போராடும் கதை. இதில், நான் நடிகையாக நடித்தேன் என்று சொல்வதை விட வாழ்ந்தேன் என்று சொல்லலாம்.
* 'பிகினி' உடையில் நடித்தது பற்றி?'பிகினி'யில் நடிக்க வேண்டும் என்பதற்காக உடல் எடையை 9 கிலோ வரை குறைத்தேன். இந்த உடையில் நடிக்க நிறைய கஷ்டப்பட்டேன்.
* 50வது படம் என்பதால் 'பாலிவுட்டா' ?இதற்கு முன் பாலிவுட்டில் நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால், எந்த படமும் நான் எதிர்பார்த்த அளவு இல்லை. இப்போது எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பு, வாழ்வில் மறக்க முடியாத ஒன்று.
* சினிமா அனுபவம் ?இன்னும் சினிமாவில் கற்று கொண்டு தான் இருக்கிறேன். நான் அறிமுகமான பின், முதல் நான்கு ஆண்டுகள் நல்ல கதைகள் கிடைக்க வேண்டும் என நிறைய சவால்களை சந்தித்தேன். இப்போது, நல்ல கதைகள் கிடைப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
* ஏன் இந்த இடைவெளி?இனி தொடர்ந்து தமிழில் நடிப்பேன், இப்போது 'யார்' என்று ஒரு படம் முடிந்துள்ளது. அடுத்து பாம்பு கதையில் நடித்து கொண்டு இருக்கிறேன், மலையாள படத்திலும் நடிக்கிறேன்.
* தனி விமானத்தில் பயணம் செய்தீர்களாமேதனி விமானத்தில் நான் பயணிக்கவில்லை, அந்த வதந்தியை நம்ப வேண்டாம்., அப்படி ஒரு கனவு நிஜமாகட்டும்.
* ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது ?இன்று போல் என்றும் ஆதரவு கொடுங்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை