ஸ்கேன் செய்தால் டாக்டர்களுக்கு கமிஷன் ; கோடி கணக்கில் பணம் புழங்கியது அம்பலம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஸ்கேன் செய்தால் டாக்டர்களுக்கு கமிஷன் ; கோடி கணக்கில் பணம் புழங்கியது அம்பலம்

Added : டிச 03, 2017 | கருத்துகள் (86)
Advertisement
ஸ்கேன் செய்தால் டாக்டர்களுக்கு கமிஷன் ; கோடி கணக்கில் பணம் புழங்கியது அம்பலம்

பெங்களூரு: நோயாளிகளுக்கு ஸ்கேன், ரத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளை செய்ய டாக்டர்கள் பரிந்துரை செய்ததால் அவர்களுக்கு கமிஷன் அளிக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் உள்ள சில டாக்டர்கள் மற்றும் ரத்த பரிசோதனை மையங்களில் ஐ.டி., அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இதில் டாக்டர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனை, எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி.ஸ்கேன், உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்ய பரிந்துரைத்தால் அதில் வரும் வருமானத்தில் இருந்து டாக்டர்களுக்கு கமிஷன் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐ.டி.ரெய்டில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறுகையில் :‛‛ஒவ்வொரு பரிசோதனை மையமும் வெவ்வேறு சதவீத பணத்தை கமிஷனாக டாக்டர்களுக்ககு வழங்கியுள்ளனர். குறிப்பாக எம்.ஆர்.ஐ., ஸ்கேன்களுக்கு 35 சதவீதமும், சி.டி.ஸ்கேன்களுக்கு 20 சதவீதமும் வழங்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு ஒரு முறை பணம் பட்டு வாடா செய்யப்பட்டுள்ளது.

அந்த பணம் பரிசோதனை மையங்களில் வந்து டாக்டர்கள் பணி செய்ததற்காக வழங்கப்பட்டதாக பதிவு செய்துள்ளனர். சில பரிசோதனை மையங்கள் டாக்டர்களுக்கு நோயாளிகள் பற்றிய தகவல் அனுப்பவும், பணம் அனுப்பவும் ஆட்களையே பணிக்கு வைத்துள்ளனர். இது வரையில் சுமார் ரூ 200 கோடி மதிப்பிலான பணம் கமிஷனாக வழங்கப்பட்டிருக்கலாம் என கணித்துள்ளோம்.

ரெய்டின் போது ரூ 1.4 கோடி பணம், 3.5 கிலோ தங்க நகைகள் மற்றும் வெளிநாட்டு வங்கி கணக்கு ஆவணங்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.'' இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil Mozhi - salem,இந்தியா
05-டிச-201700:23:23 IST Report Abuse
Tamil Mozhi ஹலோ இங்க கருத்து தெரிவிக்கும் எல்லா நண்பருக்கும் வணக்கம். நான் ஒரு மருத்துவன் .நான்எந்த ஸ்கேனுக்கும் பிளட் டெஸ்டுக்கும் கமீஸின் வாங்க வில்லை வாங்க போவதும் இல்லை.எல்லா மருத்துவர்களையும் ஒரே கண்ணோட்டத்தோது பார்ப்பது மிகவும் தவறானது ...
Rate this:
Share this comment
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
04-டிச-201722:56:21 IST Report Abuse
Nakkal Nadhamuni இது ரொம்ப காலமா நடக்கற ஒரு தப்பு, இவர்களை கண்டுபுடித்து உள்ளே போடணும்... இவர்களாவது அதிக காசை வாங்கிக்கொண்டு வைத்தியம் பார்க்கிறார்கள்... இதை விட பெரிய தப்பு போலி மருத்துவர்களும், போலி மருந்துகளும்... அது உயிரையே பாதிக்கற விஷயம்... தண்டனைகள் தீவிரமாக இருந்தால்தான் இவையெல்லாம் குறையும்...
Rate this:
Share this comment
Cancel
Palich Venkat - salem,இந்தியா
04-டிச-201714:25:28 IST Report Abuse
Palich Venkat பெரிய சுனாமி வந்து இந்த உலகம் அழியறத பாத்து நான் சந்தோசமா சாவேன் ... மொதல்ல இந்தியா ..... பாக்கிஸ்தான்..
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Jvl - Chennai,இந்தியா
04-டிச-201713:07:44 IST Report Abuse
Ramakrishnan Jvl மெர்சல் படத்தின் வசனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த டாக்டர்கள் எங்கே ? மருத்துவர்களை இழிவு படுத்திவிட்டார்கள் என்று கூவிய மருத்துவர்கள் எங்கே ?
Rate this:
Share this comment
Cancel
Viswanathan Meenakshisundaram - karaikudi,இந்தியா
04-டிச-201711:04:42 IST Report Abuse
Viswanathan Meenakshisundaram இவையெல்லாம் பாஜக அருண் ஜெட்லிக்கும், அவர் தலைமைக்கும் தெரியுமா, ஏழைகளுக்கான அரசு அல்லவா இது
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
04-டிச-201710:53:08 IST Report Abuse
Syed Syed இதனை வருடங்களை கே தூங்கிட்டு இருந்திக்கலா. இப்போதான் ஞ்யானம் வந்ததோ உங்களுக்கு. கந்து வடியைவிட மோசமானது . உயிர் பிரிந்தாலும் பணம் புடுங்கும் மருத்துவர்கள் இவ்விரக்கமில்லாதவர்கள்..
Rate this:
Share this comment
Cancel
SakthiBahrain - Manama,பஹ்ரைன்
04-டிச-201710:28:52 IST Report Abuse
SakthiBahrain அட பாவிகளா...இதை இப்ப தான் கண்டு பிடிக்கிறீங்களா.... இந்த பிசினஸ் ஆரம்பிச்சு....பல வருஷம் ஆச்சு...
Rate this:
Share this comment
Cancel
Krishna Prasad - Chennai,இந்தியா
04-டிச-201710:21:48 IST Report Abuse
Krishna Prasad இது இன்று நடக்க வில்லையே நடந்து கொண்டே தானே இருக்கிறது ஒன்றும் புதுசு இல்லை
Rate this:
Share this comment
Cancel
Satheesh - mangalore,இந்தியா
04-டிச-201710:08:26 IST Report Abuse
Satheesh this is not a new information , this is happening even in the small labs with most of the doctors with most of the towns .
Rate this:
Share this comment
Cancel
Ram Babu - Trivandrum,இந்தியா
04-டிச-201710:06:18 IST Report Abuse
Ram Babu இது காலம் காலமாக நடந்து வருகிற ஒன்று தான். எதோ புதுசா கண்டுபிடிச்ச மாதிரி நியூஸ் போட்டால் என்ன அர்த்தம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை