மத தலைவர்கள் பிரசாரமா? காத்திருக்கு 7 ஆண்டு சிறை Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
மத தலைவர்கள் பிரசாரமா?
காத்திருக்கு 7 ஆண்டு சிறை

புதுடில்லி: ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது தலைவருக்கு ஓட்டு போடும்படி கூறும் மதத் தலைவர்களுக்கு, ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் தனிநபர் மசோதா, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர், வரும், 15ல் துவங்க உள்ளது; இதில், ஹரியானாவைச் சேர்ந்த இந்திய தேசிய லோக் தளத்தின், எம்.பி., துஷ்யந்த் சவுதாலா கொண்டு வந்துஉள்ள தனிநபர் மசோதா, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

மத தலைவர்கள் பிரசாரமா? காத்திருக்கு 7 ஆண்டு சிறை

மத அமைப்புகள் சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில், இந்த மசோதாவை அவர் கொண்டு வந்துள்ளார். அதன்படி, தேர்தல்களில் ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது தலைவருக்கு ஓட்டு போடும்படி கூறும் மதத் தலைவர்களுக்கு, ஏழாண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

Advertisement

மேலும், 1 - 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வேண்டும் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
04-டிச-201720:17:51 IST Report Abuse

Krishnamurthy Venkatesanvice versa அதாவது அரசியல் கட்சி தலைவர்கள்/ அரசியல்வாதிகள் மதங்களை பற்றி பேசக்கூடாது.

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
04-டிச-201722:29:39 IST Report Abuse

K.Sugavanamமிக நல்ல கருத்து ..மத தலைவர்களுக்கு உண்டான தண்டனை மதத்தை வைத்து மக்களை பிரிக்க நினைக்கும் அரசியல் வியாதிகளுக்கும் பொருந்தும்.....

Rate this:
VIJAIANC -  ( Posted via: Dinamalar Android App )
04-டிச-201720:00:01 IST Report Abuse

VIJAIANCDuring last assembly election delhi jamma masjid maulana openly asked all muslims to vote for congress,inspite of that congress was humiliated in election

Rate this:
Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா
04-டிச-201719:06:09 IST Report Abuse

Matha, Jathi Saarpattra Thesapakthanநேரு இதுபோல ஒரு சட்டம் கொண்டுவந்து வெள்ளைக்காரனுக்கு கூஜா தூக்கி நாட்டை காட்டிக் கொடுத்தவர்களை ,சுதந்திரத்தை எதிர்த்தவர்களை எல்லாம் உள்ளே புடித்து போட்டிருந்தால் அன்றைக்கே RSS க்கு பால் ஊற்றப்பட்டிருக்கும். நாடு அமைதி பூங்காவாக மாறியிருக்கும்.

Rate this:
Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா
04-டிச-201719:01:52 IST Report Abuse

Matha, Jathi Saarpattra Thesapakthanஅப்பா யோகிக்கு கலிதானா?

Rate this:
Solvathellam Unmai - Chennai,இந்தியா
04-டிச-201718:15:16 IST Report Abuse

Solvathellam Unmaiகாவிகள் அனைவரும் இனி கப்சிப்

Rate this:
hasan - tamilnadu,இந்தியா
04-டிச-201717:37:32 IST Report Abuse

hasanr s s , v h p போன்ற மதவாத அமைப்புக்களுக்கும் பொருந்துமா , ஏன்னா அவங்க தான் ஹிந்துக்கள் அனைவரும் ஏதோ சிறுபான்மையினர்களின் அச்சுறுத்தலில் உள்ளது போல் பேசி போலி ஒற்றுமை என்ற பெயரில் விஷ கருத்துக்களை தெரிவிப்பார்கள் , இவர்களை தண்டித்தாலே நாடு சுபிட்சமாகும் அமைதி நிலவும் . செய்வார்களா

Rate this:
Kumz - trichy,இந்தியா
04-டிச-201717:30:26 IST Report Abuse

Kumz மதப்பிரச்சாரம் அனேகமாக மாஸ்க்குகளிலும் சர்ச்சுகளில் தான் அதை என்னனு கண்காணிக்க போகுறீர்கள்

Rate this:
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
04-டிச-201716:45:00 IST Report Abuse

GB.ரிஸ்வான் அப்போ காவி யோகியை உள்ளே தள்ளலாமா?

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
04-டிச-201715:59:49 IST Report Abuse

Endrum Indianஇது எல்லாம் பாஸ் ஆகாது இந்தியாவில், ஏனென்றால் காங்கிரஸும் மற்ற கட்சிகளும் இதை பசியோடு இருக்கும் வல்லூறு போல பார்த்துக்கொண்டே இருக்கின்றது, உடனே பி.ஜெ.பி. மதத்தலைவர்கள் கொண்ட கட்சி, உத்தரபிரதேச முதல்வர் இந்து மதத்தலைவர் என்று எல்லாம் டாம் டாம் என்று முரசு கொட்டி வேடிக்கை பார்க்கின்றது. உடனே சொல்லும் இந்த கூமுட்டை காங்கிரஸ் முதல் முஸ்லீம் லீக் வரை இது மதவாதம், இது சரியில்லை என்று. இப்போ என்ன நடக்குது 70 வருடமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முஸ்லிம்கள் கூடும் மாஸ்க்கில், ஞாயிற்றுக்கிழமை கிறித்துவர்கள் கூடும் சர்ச்சில் இந்துக்களால் உங்களுக்கு இடைஞ்சல் வந்து கொண்டே இருக்கின்றது, உங்கள் மதத்தை அவர்கள் இழிவு படுத்துகின்றனர், அவர்களுக்கு ஒட்டு போடாதீர்கள், அவர்களை நீங்கள் எல்லாம் எதிர்க்க வேண்டும், இல்லையென்றால் அல்லா/ஏசு கிறிஸ்து உங்களை மன்னிக்க மாட்டார் என்று. ஒரு கோவிலில் ஒரு பூஜாரி/பண்டிட் இப்படி சொல்கின்றாரா? இல்லையே ஏன்? பின் மாஸ்க், சர்ச் என்பது கோவில் மாதிரி புனிதம் இல்லையா, இல்லை அங்கு இவர்கள் கும்பிடும் கடவுள் இல்லையா. இவர்கள் எல்லாம் மாஸ்க்குக்கு, சர்ச்சுக்கு போவது இறைவனுக்கு தொழுகை நடத்தத்தானே, அங்கு இருக்கும் மதத்தலைவர்கள் கடவுள் அருளை காட்டத்தானே இருக்கின்றார்கள்??? அஃதன்றி இப்படி உளறுவது இந்த முஸ்லீம்/கிறித்துவ மக்களுக்கு புரியவில்லையா? இல்லையா புரிந்தும் இது தான் சரி என்கிறார்களா? முஸ்லிம்களே, கிறித்துவர்கள் உண்மையை உணருங்கள், கோவில் என்பது புனித இடம், அங்கு யாரும் அரசியல் பண்ணக்கூடாது.

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
04-டிச-201713:44:51 IST Report Abuse

தங்கை ராஜாயோகி ஆதித்யநாத் பக்த பரிவார் யாரும் மத தலைவர்கள் இல்லையாம். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமென்றால் இவர்கள் அனைவரும் போலி மதவாதிகளா..........

Rate this:
மேலும் 49 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement