தேர்தல் களத்தில் விஷால்: பதவி விலக நடிகர்கள் போர்க்கொடி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தேர்தல் களத்தில் விஷால்
பதவி விலக நடிகர்கள் போர்க்கொடி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், நடிகர் விஷால் போட்டியிடுவதால், அவர், நடிகர் சங்க பொதுச்செயலர் பதவியில் இருந்து விலக வேண்டும் என, கோலிவுட்டில் போர்க்கொடி உயர்ந்துள்ளது.

தேர்தல் களத்தில், விஷால்,பதவி விலக ,நடிகர்கள் ,போர்க்கொடி


சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், நடிகர் விஷால் போட்டியிட, இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

ஆதி தெலுங்கு மக்கள்அதிகமுள்ள, ஆர்.கே. நகரில், விஷாலை, தெலுங்கில் பேச வைத்து, ஆளுங்கட்சிக்கு விழ வேண்டிய, கணிசமான ஓட்டுகளை பிரித்தால், தி.மு.க., வெற்றி பெறும் என்ற தேர்தல் கணக்கை, தினகரன் வகுத்து, விஷாலை திரைமறைவில், களம் இறக்குவதாகவும் கூறப்படுகிறது.

தேர்தலில் போட்டி என்ற விஷாலின் முடிவு, நடிகர் சங்கத் தலைவர் நாசர் உள்ளிட்ட நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
விஷாலுக்கு ஆதரவாக, இயக்குனர் சுசீந்திரன் பிரசாரம் செய்வதாக அறிவித்துள்ளார்.

ஆனால், நாசர், கார்த்தி போன்ற முக்கிய நிர்வாகிகள், பிரசாரம் குறித்து வாய் திறக்க வில்லை.'தேர்தலில் போட்டியிடும் விஷால், நடிகர் சங்கபொதுச்செயலர் பதவியை, ராஜினாமா செய்ய வேண்டும்' என, நடிகர்


சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளின் ஆதரவு உறுப்பினர்கள் சிலர், போர்க்கொடி துாக்கி உள்ளனர்.
இது குறித்து, கோலிவுட் வட்டாரங்கள் கூறிய தாவது:சமீபத்தில், விஷாலின் தங்கை திருமணம் சென்னையில் நடந்தது. இந்த விழாவிற்கு வருமாறு, தினகரனை வீடு தேடிச்சென்று, விஷால் அழைப்பிதழ்கொடுத்தார்.

திருமணத்தன்று, தினகரன் வெளியூர் விழாவுக்கு சென்றதால், பங்கேற்கவில்லை; பின், விஷால் வீட்டிற்கு சென்று, மணமக்களை வாழ்த்தினார். இருவரும், இரண்டு முறை தனியாக சந்தித்து
பேசியுள்ளனர்.

தன் அலுவலகத்தில், வருமான வரித்துறை சோதனை நடந்ததால், மத்திய அரசு மீது, விஷால் அதிருப்தியில் உள்ளார். சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அமைச்சர்கள் மீது விஷால் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

நடிகர் சங்க பொதுச்செயலர் பதவியில், விஷால் போட்டியிடும் முன், பஞ்ச பாண்டவர் அணியை உருவாக்கினார்.

அப்போது, 'அரசியல் அமைப்புகளில் உள்ளோரால், நடிகர் சங்கத்தின் வளர்ச்சி பணிகள் மீது அக்கறை காட்ட முடியாது' என்ற கருத்தை முன்வைத்து, நடிகர் சங்க உறுப்பினர்களிடம், ஓட்டு சேகரித்தார். நடிகர்கள் சரத்குமார், ராதாரவி போன்றவர்களை எதிர்க்கும் வகையில், இப்படி பேசி வந்தார்.

தற்போது,விஷால்தேர்தலில் குதிப்பது
மட்டும் அரசியல் பணி இல்லையா என, நடிகர் சங்க உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். நடிகர் சங்க பொதுச்செயலர் பதவியை, விஷால் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற போர்க் குரல் எழுந்துள்ளது.இவ்வாறு கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


'யாருக்கு பாதிப்பு'''நடிகர் விஷால் தேர்தலில் போட்டியிடுவதால், அவருக்குத்தான் பாதிப்பு ஏற்படும்,'' என, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

கரூரில், நேற்று அவர் அளித்த பேட்டி:
அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட பிளவால், முடக்கப் பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்டு, மருங்காபுரி இடைத்தேர்தலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெற்றி கண்டார். அதுபோல், இரட்டை இலை சின்னத்தை மீட்டு, ஆர்.கே.நகர் தேர்தலிலும் வெற்றி பெறுவோம்.

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் இணைந்து, நன்றாக செயல்படு கின்றனர். நடிகர் விஷால், ஆர்.கே.நகரில் போட்டியிடுவதால், அவருக்குத்தான் பாதிப்பு ஏற்படும். அ.தி.மு.க., கொடியை பயன்படுத்தி, தினகரன் பிரசாரம் செய்தால், அது எங்களுக்கு தான் சாதகமாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) கட்சி பதவி, எம். எல். ஏ பதவி மற்றும் முதல்வர் பதவி ஆகியவற்றில் இதற்க்கு முன்னர் இருந்த அரசியல் வாதிகளை ஏன் பதவி விலக வலியுறுத்தவில்லை? பயமா?

Rate this:
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
05-டிச-201700:00:01 IST Report Abuse

Raghuraman Narayananஇவருக்கு சில நூறு ஓட்டுக்கள் மட்டுமே கிடைக்கும். திரு தினகரனுக்கு சில ஆயிரங்கள். உண்மையான போட்டி DMK Vs AIADMK தான்

Rate this:
ranjit - cleveland,யூ.எஸ்.ஏ
04-டிச-201723:33:41 IST Report Abuse

ranjitவிஷால் ஜெயிக்கிறாரோ இல்லையோ...பிஜேபி விஷாலிடம் கண்டிப்பாக தோற்கும் ...டூமில் பதிலுக்காக காத்திருக்கும் உண்மையான ரசிகன்....:)

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-டிச-201723:00:54 IST Report Abuse

Pugazh V@சென்னை குமார்... எத்தனை மாடு மேய்க்கறீங்க..? குவைத் நண்பர் மேல பொறாமை...கூடுவாஞ்சேரிய தாண்டக்கூட குமாருக்கு வக்கில்ல..அறிவுரை சொல்ல வந்துட்டார்...

Rate this:
s t rajan - chennai,இந்தியா
04-டிச-201721:48:39 IST Report Abuse

s t rajanவிஷால் யாருக்காக விட்டில் (பூச்சி) யாகப் போறாரோ ?

Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
04-டிச-201721:02:49 IST Report Abuse

A.George AlphonseIf Mr.Vishal Reddy wins in this R.K.Nagar byelection he will definitely resign his post from the Nadigar Sangam now why he should resign before it.In case if he resigns his post from Nadigar Sanger before winning R.K.Nagar he can not get his post again if he looses in this byelection. "Ulladhum Pochuda Nollakanna" like he has to cry later.He is very clever and do according his convenient time.

Rate this:
Babu Desikan - Bangalore,இந்தியா
04-டிச-201719:04:46 IST Report Abuse

Babu Desikanஎத்தனையோ நகைச்சுவை காட்சிகள் நித்தம் அரங்கேறுகின்றன..அதில் ஒன்று விஷால் போட்டியிடுவது.. .மக்களாகிய நாம் ரசித்து சிறிது அனுபவிக்க வேண்டியது.

Rate this:
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
04-டிச-201722:50:58 IST Report Abuse

Bebetoவிஷால், TTV யின் பினாமி என்று நன்றாக தெரிகிறது....

Rate this:
திராவிடன் - chennai ,இந்தியா
04-டிச-201717:36:05 IST Report Abuse

திராவிடன்நடிகர் சங்கத்துக்கு சங்கு தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு சங்கு சூப்பர் இப்போ ராதாகிருஷ்ணன் நகர் நுறு வாக்கு வாங்கினால் சந்தோஷம் கனவு தொழிற்ச்சாலையில் இருந்து வருபவர்கள் எல்லாம் நன்றாக கனவு காண்கிறார்கள்

Rate this:
Suresh - Nagercoil,இந்தியா
04-டிச-201717:20:34 IST Report Abuse

Sureshஇருந்த பதவியும் போச்சா, ஏற்கனவே தமிழனை ஆள்வதற்கு இன்னொருவரா என தமிழக இசைக்கலைஞர்கள் குமுறிக்கொண்டிருந்த வேளையில் வசமா மாட்டிகிட்டாரு...தினகரன் சொல்லுவதை கேட்டால் இது தான் நிலமை...

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
04-டிச-201716:08:23 IST Report Abuse

Endrum Indianஒருவருக்கு ஒரு அரசு/சட்டம் சார்ந்த பதவி தான் அவர் எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் சினிமா சங்க பதவியை துறக்க வேண்டும், இந்த தேர்தலில் தோற்றால் அந்த பதவியில் தொடரலாம்.

Rate this:
மேலும் 58 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement