சிறைவாசிகளுக்கு மறுவாழ்வு - மணிப்பூர் தம்பதி அசத்தல் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :

ஊட்டி: சிறைவாசிகள் மறுவாழ்வு பெற, ஊட்டியில் வசிக்கும் மணிப்பூர் தம்பதி, கலை நயமிக்க பொருட்களை தயாரித்து, சந்தைப்படுத்தி வருகின்றனர்.


மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த, பீஸ் -- அனிக் தம்பதி, ஏழு ஆண்டுகளாக, ஊட்டியில் வசித்து
வருகின்றனர். சிறைவாசிகள், அவர்களது குடும்பத்தினர் மீது அனுதாபம் கொண்ட இத்தம்பதி, அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி கொடுக்க, திட்டமிட்டனர்.

கைவினைப் பொருட்கள்



வீடுகளில் வீணாகி, வீசியெறியப்படும் பொருட்களை, கலைநயமிக்க அலங்கார கைவினைப் பொருட்களாக உருமாற்றும் தொழிலை துவக்கினர். சிறைத் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், மைசூரு மற்றும் கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளை சந்தித்து, பழைய பிளாஸ்டிக், கண்ணாடி, துணிகள், ரப்பர் டயர்கள் போன்ற பொருட்களை, அவர்களிடம் வழங்கி, பல்வேறு கைவினைப் பொருட்களை தயாரிக்க, பயிற்சி வழங்குகின்றனர்.காகிதங்கள் மூலம், டம்ளர் தாங்கிகள் தயாரிக்கப்படுகின்றன.


சிறைவாசிகளுக்கு மறுவாழ்வு - மணிப்பூர் தம்பதி அசத்தல்


துணிகளை கொண்டு, விதவிதமான பைகள், பாட்டில்களின் மீது முட்டை ஓடுகளை ஒட்டி, அதில் வர்ணம் தீட்டி, அழகிய பூந்தொட்டியாக உருமாற்றுவது, டயர்களை பயன்படுத்தி, இருக்கை, டீப்பாய் தயாரிப்பது என, தினசரி பயன்படுத்தப்படும் பல பொருட்கள் தயாரிக்கப்
படுகின்றன.

சிறைக்குள், சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் இப்பொருட்களுக்கு வர்ணம் தீட்டி, அதை மெருகேற்றி, முழு வடிவம் கொடுக்கும் பணியை, அந்த சிறைவாசிகளின் குடும்பத்தினரை வைத்து மேற்கொள்கின்றனர்.

சிறைவாசிகளின் குடும்பத்தினர் இப்பணியை செய்ய, மணிப்பூர் தம்பதி, தன் வீட்டின் ஒரு
அறையையும் ஒதுக்கி கொடுத்துள்ளது.இக்கைவினைப் பொருட்கள், ஐந்து ரூபாயில் இருந்து, 3,000 ரூபாய் வரை, சந்தையில் விற்கப்படுகிறது. வருமானத்தில், சிறைவாசிகள், அவர்களது குடும்பத்தினருக்குரிய பங்கை, பிரித்து கொடுத்து விடுகின்றனர்.

Advertisement


சுய தொழில்



மணிப்பூர் பெண் அனிக், 47, கூறுகையில், ''சிறைவாசிகளுக்கு மறுவாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் தான், ஆறு ஆண்டுகளாக, இத்தகைய பணியை செய்து வருகிறோம். 30க்கும் மேற்பட்ட சிறைவாசிகள், அவர்களது குடும்பத்தினர், எங்களின் உதவியால், சுய தொழில் செய்து, வருமானம் ஈட்டி வருகின்றனர்.

''சிறை வாசம் முடிந்து வெளியே வரும் அவர்கள், புதிய நம்பிக்கையுடன் எதிர்காலத்தை
திட்டமிடுகின்றனர். வீணாகி வீசியெறியப்படும் பொருட்களால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படு
வதும் தவிர்க்கப்படுகிறது,'' என்றார்.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
04-டிச-201715:01:18 IST Report Abuse

Rangiem N Annamalaiஅருமை. குற்றவாளிகள் திருந்ததான் சிறை தண்டனை. மறுவாழ்வு பெறுவது பெரிய விஷயம். திருச்சி சிறையில் இருந்து செல்பவர்கள் திரும்ப வருவதில்லை என ஒரு செய்தி உள்ளது .பெங்களூர் பார்ப்பன அக்கிரகார சிறையில் பேக்கரி மிக பிரசித்தம். இவர்களை ஊக்குவிக்கலாம் .இப்படி செய்வது நாட்டுக்கு நல்ல சமுதாயம் உருவாகும் .வாழ்க .

Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
04-டிச-201714:55:02 IST Report Abuse

pradeesh parthasarathyஇது தான் உண்மையான தேச பக்தியும் , தேசத்திற்கான சேவையும் ....

Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
04-டிச-201714:54:35 IST Report Abuse

pradeesh parthasarathyவாழ்த்துக்கள் சகோதரி ....

Rate this:
04-டிச-201707:48:35 IST Report Abuse

RandyRanjitVery Good.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement