'மெகா' கூட்டணி: கை கழுவ மாயாவதி முடிவு - உ.பி., உள்ளாட்சி தேர்தல் முடிவு எதிரொலி Dinamalar
பதிவு செய்த நாள் :
'மெகா' கூட்டணி: கை கழுவ மாயாவதி முடிவு -
உ.பி., உள்ளாட்சி தேர்தல் முடிவு எதிரொலி

லக்னோ : உ.பி.,யில், சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், இரண்டு மேயர் பதவிகளை கைப்பற்றியதால், பகுஜன் சமாஜ் கட்சி புத்துயிர் பெற்று வருவதாக, அதன் தலைவர், மாயாவதி கருதுகிறார்.

'மெகா' கூட்டணி,கை கழுவ, மாயாவதி ,முடிவு

இதனால், 2019, லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிரான, 'மெகா' கூட்டணி யோசனையை, அவர் கைவிடுவார் என கூறப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தல் உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக
உள்ளார்.இம்மாநிலத்தில், சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், முன்னாள் முதல்வர், மாயாவதி தலைமையிலான,

பகுஜன் சமாஜ் கட்சி, யாரும் எதிர்பாராத வகையில், இரண்டு மேயர் பதவிகளை கைப்பற்றியது.

கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலிலும், இந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலிலும், பகுஜன் சமாஜ் கட்சி படுதோல்வியை சந்தித்ததால், கவலையில் இருந்த மாயாவதிக்கு, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளன.

இந்த முடிவுகள், உ.பி.,யில், பா.ஜ.,வுக்கு மாற்றாக, மக்கள் மத்தியில், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவு அதிகரித்திருப்பதை உணர்த்துவதாக, மாயாவதி கருதுகிறார்.வரும், 2019ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், காங்., அல்லது சமாஜ்வாதி கட்சியுடன் சேர்ந்து, மெகா கூட்டணி அமைக்கும் எண்ணத்தில், மாயாவதி இருந்ததாக தெரிகிறது.உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அடுத்து, அந்த எண்ணத்தை, மாயாவதி மாற்றியுள்ள தாக, தகவல்கள் கூறுகின்றன.

சந்தேகம் தான்


இதுகுறித்து,பகுஜன்சமாஜ் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:உள்ளாட்சித் தேர்தலில், பிற முக்கிய

Advertisement

கட்சிகளான, சமாஜ்வாதியும்,காங்.,கும் பெரியளவில் வெற்றிகளை பெற முடியாமல் போனது. அதேசமயம், பல நகராட்சிகளையும், இரண்டு மேயர் பதவிகளையும், பகுஜன் சமாஜ் கைப்பற்றி உள்ளது.

இதனால், பகுஜன் சமாஜ் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துள்ளது தெளிவாகி உள்ளது. இச்சூழ்நிலையில், 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக, மாயாவதி, மெகா கூட்டணி அமைப்பது சந்தேகமே. இவ்வாறு அவர்கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kadhiravan - thiruvaroor,இந்தியா
04-டிச-201721:48:32 IST Report Abuse

kadhiravanஅந்த அம்மா அப்படி நினைக்கல..,இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு..,நம்ம இப்படி சொன்ன பா.ஜ.க நம்ம மேல பொய் கேசுபோடாது..,பாராளுமன்ற தேர்தலின் போது கூட்டணி வச்சுக்கலாம் என்று நினைக்கிறது..,சாணி சங்கிகளுக்கு இது தெரிய வாய்ப்பில்லை..,வருங்கால மத்திய பாதுகாப்பு அமைச்சர் மாயாவதிக்கு ஜே ..,ஜே ..ஜே..,வருங்கால இந்திய பிரதமர் ராகுல் ஜி ..,ஜே ..ஜே ..ஜே

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
04-டிச-201721:18:16 IST Report Abuse

தேச நேசன்There is a strong suspicion on EC that EVM is favoring BJP parties like setting up the EVM (for example) to vote BJP for last 10 - 15 votes from every 100 hundred votes polled irrespective of buttons pressed for any parties. Thereby out of 1000 votes, 100 - 150 votes will be polled in favor of BJP so that there won't be much doubts on EVM . if any one want to check the EVM, it might work properly upto certain limit like upto 85 votes as in this case, or EC may setup upto 1000 votes to poll up properly. In most of developed European countries, the ballet paper is used for election, why EC of India is hesitant to change the tem to ballet paper election ? All are corrupted,

Rate this:
Solvathellam Unmai - Chennai,இந்தியா
04-டிச-201718:21:17 IST Report Abuse

Solvathellam Unmaiசில மேயர் பதவிகளை பெற்ற காவி- தேர்தல் கமிஷன் கூட்டணி பெரிதாக சாதிக்கவில்லையாம்... உள்ளாட்சிகளில் எதிர் கட்சிகள் அதிக இடங்களை பிடித்ததால் சாமியார் மடத்தை தேடி கொண்டுள்ளாராம்...

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X