காங்கிரசை துடைத்தெறிய பிரதமர் மோடி...சபதம்! Dinamalar
பதிவு செய்த நாள் :
சபதம்!
காங்கிரசை துடைத்தெறிய பிரதமர் மோடி...
பிரித்தாளும் அரசியல் நடத்துவதாக குற்றச்சாட்டு
குஜராத்தில் 48 மணி நேர சூறாவளி பிரசாரம்

ஆமதாபாத் : குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, 48 மணி நேர சூறாவளி பிரசாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டுள்ளார். காங்., கட்சி, பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள மோடி, அக்கட்சியை நாட்டிலிருந்து துடைத்தெறிய சபதம் செய்துள்ளார்.

 காங்கிரசை ,துடைத்தெறிய, பிரதமர் ,மோடி...சபதம்!

குஜராத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். இம்மாநில சட்டசபைக்கு, வரும், 9, 14ம் தேதிகளில், இரு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலையொட்டி, குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களில், பிரதமர் நரேந்திர மோடி, 48 மணி நேர சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிரித்தாளும் சூழ்ச்சி பரூச் நகரில் நேற்று நடந்த பிரமாண்ட கூட்டத்தில், மோடி பேசியதாவது:
காங்., கட்சி, நாட்டு மக்களை பிரித்தாளும்
சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த கட்சியை, தேசிய அரசியலில் இருந்து துடைத்தெறிவேன்.
ஆமதாபாத் - மும்பை நகரங்களை இணைக்கும் வகையில், 1.1 லட்சம் கோடி ரூபாய் செலவில், புல்லட் ரயில் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு, காங்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதே திட்டத்தை நிறைவேற்ற, காங்.,கும் முயற்சித்தது. ஆனால், தோல்வி அடைந்ததால், தற்போது, எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
புல்லட் ரயில் திட்டத்தை எதிர்ப்பவர்கள், மாட்டு வண்டியில் செல்லலாம். அதுபற்றி எனக்கு கவலை இல்லை. புல்லட் ரயில் திட்டத்தால், குஜராத்தில், பெரியளவில்
வேலை வாய்ப்புகள் உருவாகும்.

புல்லட் ரயில் திட்டத்துக்கு தேவைப்படும், சிமென்ட், இரும்பு போன்ற பொருட்கள், இந்தியாவில் இருந்து வாங்கப்படும். இந்த திட்டத்தை நிறைவேற்றும் பணியில், இந்திய

தொழிலாளர்கள் ஈடுபடுவர். இதனால்,சிமென்ட், இரும்பு போன்றவற்றை, இந்தியாவிடம் இருந்து, ஜப்பான் வாங்கும்; இது, இந்தியாவுக்கு பெரிய லாபம் இல்லையா?எதுவும் செய்யவில்லை

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக, காங்., தலைவர்கள் கூறிக் கொள்கின்றனர். குஜராத் மாநில நன்மைக்கு, அவர்கள் என்ன செய்தனர்.தாங்கள் ஆட்சியில் இருந்த சமயத்தில்,கிராமங்களையும், நகரங்களையும், மாநிலங்களையும்,மக்களையும் பிரித்ததை தவிர, காங்., தலைவர்கள் எதுவும் செய்யவில்லை. மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைந்தது முதல், அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. குஜராத் முதல்வராக நான் இருந்தபோது, குஜராத்துக்கு எதிராக, காங்., தலைவர்கள் பாயாத நாளே இல்லை.


குஜராத்தில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக
உள்ள, கட்ச், பரூச் மாவட்டங்கள், பா.ஜ., ஆட்சியில் அதிகளவு வளர்ச்சி அடைந்துள்ளன.சர்தார் வல்லபாய் படேல் சிலை, உலகின் மிக உயரமான சிலையாக நிறுவப்படுகிறது. ஒருமைப்பாட்டு சிலையாக கருதப்படும் இது, எண்ணற்ற வெளிநாட்டு சுற்றுலா பயணியரை ஈர்க்கும்.

குஜராத்தின் கடல் எல்லையில் உள்ள, 1,300 சிறு தீவுகளை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இவற்றில் பல தீவுகள், சிங்கப்பூரை விட பெரியவை. இந்த தீவுகள், சிங்கப்பூரை போன்று வளர்ச்சி பெறுவதை கற்பனை செய்து பாருங்கள். எனவே, பரூச் பகுதிக்கு, சிறப்பான எதிர்காலம் ஏற்பட, பா.ஜ.,வுக்கு ஓட்டளியுங்கள். இவ்வாறு அவர்
பேசினார்.

காங்., வேட்பாளர்கள் கைதுகுஜராத் முதல்வர் விஜய் ரூபானியின், ராஜ்கோட் வீடருகே, பா.ஜ., தொண்டர்களுடன் ஏற்பட்ட மோதலில், காங்., வேட்பாளர், இந்திராணில் ராஜ்யகுருவின் சகோதரர் காயமடைந்தார். இதையடுத்து, அங்கு, காங்.,கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் திரண்டனர்.
அப்போது வன்முறை ஏற்பட்டதை அடுத்து, காங்., வேட்பாளர்கள், ராஜ்யகுரு, மிதுல் தோங்கா உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். கூட்டத்தினரை கலைக்க, போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவம் நடந்தபோது, முதல்வர் விஜய் ரூபானி, தன் வீட்டில்இருந்தார்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை:

டுவிட்டர் சமூக வலைதளத்தில்,

Advertisement

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் கூறியுள்ளதாவது:குஜராத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; அவர்களுக்கு கல்வி அறிவு தரப்படுவதில்லை; சத்தான உணவு கிடைப்ப தில்லை. அங்கன்வாடி முதல், அனைத்து துறைகளிலும், பெண்கள் ஏமாற்றப்படு கின்றனர்.

குஜராத் மாநில பெண்களுக்கு, வாக்குறுதிகளை மட்டுமே, பா.ஜ., தலைவர்கள்அளிக்கின்றனர்; அவை,ஒருபோதும்நிறைவேற்றப்படுவ தில்லை.பெண்கள் கடத்தப்படும் விஷயத்தில்,
குஜராத் மூன்றாம் இடத்தில் உள்ளது. அவர்கள் மீது, 'ஆசிட்' வீசும் சம்பவங்களில், ஐந்தா மிடத்திலும், சிறுமியர் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதில், 10ம் இடத்திலும், குஜராத் உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எதிரெதிர் முகாமில் நெருங்கிய உறவினர்கள்குஜராத்தில், ஆளும், பா.ஜ.,வும், காங்.,கும் ஆட்சியை பிடிக்க சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, இரு நெருங்கிய உறவினர்கள், அம்ரேலி மாவட்டத்தில், இரண்டு தொகுதிகளில், எதிரெதிர் கட்சிகள் சார்பில் போட்டியிடுகின்றனர்.

அம்ரேலி மாவட்டத்தில், தாரி தொகுதியில், காங்., சார்பில், ஜெய்சுக் காகதீயா போட்டியிடுகிறார். அதே மாவட்டத்தில், சவர்குண்ட்லா சட்டசபைத் தொகுதியில், பா.ஜ., சார்பில், ஜெய்சுக்கின் மைத்துனர், கம்லேஷ் கனானி களமிறங்கி உள்ளார். காங்.,கில் ஜெய்சுக்கும், பா.ஜ.,வில் கம்லேஷும்,20 ஆண்டுகளாக தீவிர தொண்டர்களாக உள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-டிச-201722:54:18 IST Report Abuse

Pugazh Vபிஜேபியின் மூர்க்கன்களின் அநாகரிகம் தெரிகிறது தெறிக்கிறது. இவங்க மட்டுமே எதுவேணா எழுதலாம். மத்தவங்க எழுதினா அநாகரிகமாகவும் ரவுடித்தனமாகவும் அடாபுடா என்றும் எழுதுவாங்க

Rate this:
Solvathellam Unmai - Chennai,இந்தியா
04-டிச-201718:23:54 IST Report Abuse

Solvathellam Unmaiகுஜராத்தில் 48 மணி நேரத்தில் ஓகி சூறாவளி தாக்க போகிறது மட்டும் தான் உண்மை....

Rate this:
04-டிச-201715:42:56 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்மோடியின் சபதத்திற்கு ஆதரவாக கோடிக்கணக்கானோர் உள்ளனர். தற்போது கைப்புள்ளை தலைவர் பதவி ஏற்று உள்ளதால் , இன்னும் "சிறப்பாக" செய்யலாம்.

Rate this:
மேலும் 52 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X