கழிப்பறை கட்டும் திட்டத்தில் மோசடி: புதுக்கோட்டை மக்கள் குற்றச்சாட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கழிப்பறை கட்டும் திட்டத்தில் மோசடி: புதுக்கோட்டை மக்கள் குற்றச்சாட்டு

Added : டிச 04, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

புதுக்கோட்டை: பிரதமரின் வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்பட்ட கழிப்பறை களில், மோசடி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பிரதமரின் தூய்மை இந்தியா திட்டப்படி, வீட்டிற்கு ஒரு கழிப்பறை கட்ட, மத்திய அரசு, 12 ஆயிரம் ரூபாய் நிதி வழங்குகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், அனைத்து கிராம பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான கழிப்பறைகள் கட்டியதில், பல லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இத்திட்டப்படி, ஒன்றிய அலுவலகத்தின் உதவியுடன், சில ஒப்பந்ததாரர்கள், கழிப்பறைகள் கட்டி தருகின்றனர். அதிகபட்சம், 7,000 ரூபாயில் தான் கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. இது, தரமற்றதாக இருக்கிறது என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து, கணேசன் என்பவர் கூறியதாவது: கறம்பக்குடி ஒன்றியம், மறவன்பட்டியில், 30க்கும் மேற்பட்ட நபர்களுக்கு, 12 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 3 அடி ஆழம், 3 அடி அகலத்தில், இரண்டு செப்டிக் டேங்க் அமைத்து, தரமாக கட்ட, மத்திய அரசு நிதி அளிக்கிறது. இதற்கான பணத்தை எங்களது, வங்கி கணக்கில் வரவு வைத்தால், நாங்களே நல்ல தரமான கழிப்பறைகள் கட்டுவோம். அப்படி செய்யாமல், யூனியன் அலுவலகம் மூலம் இலவச கழிப்பறைகள் கட்டப்படுவதால், அதிகாரிகள் துணையோடு, சில ஒப்பந்ததாரர்கள், 1 அடி ஆழத்தில், ஒரு செப்டிக் டேங்க் மட்டும் அமைத்து, கழிப்பறைகளை பெயரளவுக்கு கட்டி, பணத்தை மோசடி செய்கின்றனர்.இந்த கழிப்பறைகள், சில மாதங்கள் கூட பயன்படுத்த முடியாத அளவுக்கு, தரமின்றி கட்டப்பட்டுள்ளன. இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கறம்பக்குடி ஒன்றிய கமிஷனர் ஆறுமுகம் கூறுகையில், ''புகார் குறித்து, விசாரணை செய்யப்படும். தவறு நடந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X