நடிகர் விஷாலின், 'காமெடி' அரசியல் : ஆர்.கே.நகரில் நேற்று முதல் ஆரம்பம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நடிகர் விஷாலின், 'காமெடி' அரசியல்
ஆர்.கே.நகரில் நேற்று முதல் ஆரம்பம்

ஓட்டுகளை அள்ளுவதற்காக, ஆர்.கே.நகர் மக்களுக்காக போட்டியிடுவதாக கூறியுள்ள, நடிகர் விஷால், காமராஜர், எம்.ஜி.ஆர்., - ஜெ., ஆகியோர் நினைவிடங்களில் வணங்கி, தன், 'காமெடி' அரசியலை துவங்கியுள்ளார்.

நடிகர் ,விஷால், 'காமெடி' அரசியல்


மனு தாக்கல் செய்வதற்கு முன், அவர், நேற்று காலை, சென்னை, ராமாவரம், எம்.ஜி.ஆர்., தோட்டத்திற்கு சென்று, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தார்.
அதன்பின், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., - ஜெ., நினைவிடம் சென்று, அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து, தன் ரசிகர்களுடன், மனு தாக்கல் செய்ய கிளம்பினார். ராயபுரத்தில் இருந்து, இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றார். காசிமேட்டில் உள்ள, சிங்காரவேலர் சிலைக்கு, மாலை அணிவித்தார். பகல், 1:50 மணிக்கு, வேட்புமனு தாக்கல் நடந்த, தண்டையார்பேட்டையில் உள்ள, மாநகராட்சி மண்டல அலுவலகம் வந்தார். அவர் நேரடியாக உள்ளே சென்று,

மனு தாக்கல் செய்ய, சுயேச்சைகள் எதிர்ப்பு தெரிவித்ததால், காத்திருந்து மனு தாக்கல் செய்தார்.
நடிகர் விஷால் மனு தாக்கல் செய்ய வந்தபோது, அவரை காண, மக்கள் திரண்டனர். மண்டல அலுவலகம் உள்ளே, மனுதாக்கல் செய்ய காத்திருந்தபோது, மாநகராட்சி ஊழியர்கள், அவருக்கு கை கொடுத்தனர். பலர் அவருடன், 'செல்பி' எடுத்துக் கொண்டனர்.

நடிகர் விஷால் கூறியதாவது: ஜனநாயக ரீதியாக, இளைஞர்கள் தேர்தலில் நின்று, மக்களுக்கு நல்லது செய்ய ஆசைப்படுவது தவறல்ல. நான் மக்கள் பிரதிநிதியாக, தேர்தலை சந்திக்கப் போகிறேன். மக்களின் கொள்கைகளை முன்வைத்து, பிரசாரம் செய்வேன்.

மக்கள் பிரச்னைகளை தீர்ப்பது, அரசின் கடமை. ஆர்.கே.நகர் தொகுதி மக்கள், அடிப்படை வசதிகளை கேட்கின்றனர். மழை பெய்யும்போது தண்ணீர் தேங்குகிறது; வீட்டிற்குள் கழிவு நீர் தேங்குகிறது; இதை தடுக்க வேண்டும். அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்ய, மக்கள் பிரதிநிதி தேவை. அதற்காக, நான் போட்டியிடுகிறேன். மக்களை சந்திக்கும்போது, அவர்களின் பிரச்னைகளை கேட்டு, அதற்கு தீர்வு காண்பேன். மக்கள் ஒற்றுமையாக இருந்து ஓட்டளித்தால்,

Advertisement

அவர்களின் முக்கியத்துவம், அவர்களுக்கு தெரிய வரும். ஓட்டு போட்டுவிட்டு, ஐந்து ஆண்டுகள் கழித்து, நல்லது நடக்கும் என காத்திருக்காமல், கேள்வி கேட்க வேண்டும்.
ஆர்.கே.நகர் மக்கள் ஒற்றுமை, நேர்மை, இந்த தேர்தலில் வெளிப்படும். கட்சியில் சேர்ந்து தான், நல்லது செய்ய வேண்டும் என்றில்லை. கட்சி ஆரம்பிக்கவோ, அரசியல் வாழ்க்கைக்கோ போட்டியிடவில்லை. ஆர்.கே.நகர் மக்களுக்காக போட்டியிடுகிறேன்; நானும் அவர்கள் பிரதிநிதி தான். இவ்வாறு விஷால் தெரிவித்தார். இதைக் கேட்ட மக்கள், 'இத்தனை நாட்களாக, இந்தப் பக்கமே எட்டிப் பார்த்தில்லை. இவர் வீடு, அண்ணாநகரில் இருக்கிறது. இங்கு ஓட்டுக்காக வந்து, என்னமா பேசுகிறார் பாருங்கள்' என, சிரித்தபடி சென்றனர்.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (90)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
05-டிச-201722:35:57 IST Report Abuse

Pugazh Vகாமெடி பீஸாக ஆனது இவரை எதிர்க்கிறவர்களும் தேர்தல் கமிஷனும் தான். பரிதாபம். விஷால் அப்படி என்ன காமெடி பண்ணிட்டார்??? ஊல் அரசு என்று இபிஎஸ் அரசுபற்றி கவர்னரிடம் மனு கொடுத்து விட்டு அதே ஆரசில் துணை முதல்வரா இருக்கும் ஓபிஎஸ் செய்யறது காமடி இல்லை யா? கம்பராமாயணம் தந்த சேக்கிழார் என்று முதல்வர் சொன்னது காமெடி இல்லையா?

Rate this:
ஈரோடுசிவா - erode ,இந்தியா
05-டிச-201721:21:44 IST Report Abuse

 ஈரோடுசிவாஆல்இண்டியாவுக்கு ஒரு பப்பு ... தமிழகத்துக்கு இந்த விஷால் ... இவங்க பேசுரதக் கேக்குறதே நல்ல டைம்பாஸ் தான் ...

Rate this:
vimalvimal55 - coimbatore,இந்தியா
05-டிச-201719:21:44 IST Report Abuse

vimalvimal55இது நல்ல எடுத்துக்காட்டு , இது போல் பல இளைஞர்கள் வர வேணும்,....

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
05-டிச-201718:51:55 IST Report Abuse

Pugazh V@திருச்சி சங்கர், இதுல எதுக்கு ஸ்டாலினை இழுக்கறீங்க. இந்த நிமிடம் வரை விஷாலை அவர் விமர்சிக்கவே இல்லையே.

Rate this:
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
05-டிச-201718:33:07 IST Report Abuse

Nakkal Nadhamuniதமிழகம்தான் உண்மையான ஜனநாயக திராவிட நாடு.. தமிழ் காமராஜர், கேரளா MGR , கன்னட ஜெயா, அடுத்து தெலுகு விஷால்...

Rate this:
mrsethuraman - Bangalore,இந்தியா
05-டிச-201718:09:23 IST Report Abuse

mrsethuraman  Mahatma Gandhis Quote : First they ignore you .Then they laugh at you .Then they fight you .then you win .

Rate this:
sundaram - Kuwait,குவைத்
05-டிச-201717:37:42 IST Report Abuse

sundaramஎனக்கென்னவோ தினமலர்தான் தேவையில்லாமல் விஷாலை காமெடியனாக வர்ணிக்கின்றது. அவர் என்ன ஆர் கே நகர் மக்கள் அனைவரும் என் கடவுள்கள் என்றா சொல்லிவிட்டார்? அப்படி சொல்லாதவரை அவர் காமெடியன் இல்லை.

Rate this:
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
05-டிச-201716:37:15 IST Report Abuse

Jeyaseelanமோடியை தவிர எல்லோருமே காமெடிதான் தினமலருக்கு....? 2019 முதல் தினமலர் காமெடி மலர் ஆக மாறும்

Rate this:
Dhivya - chennai,இந்தியா
05-டிச-201715:34:40 IST Report Abuse

Dhivyaஇவனுக்கு யாரும் ஓட்டு போடாதீங்க .. மத்த ஸ்டேட் ல போய் இப்படி உங்களால தேர்தல் ல நிக்கமுடியுமா? ஏன் தமிழ்நாடு மட்டும் இளிச்சவாய ? வந்தாரை வாழ வச்சதெல்லாம் போதும். தமிழர்களையும் கொஞ்சம் வாழ விடுங்க.. ஏன் திமுக, அதிமுக தவிர வேற கட்சி இல்லையா வேட்பாளர்கள் இல்லையா? சீமான் கட்சி கு போட்டா என்ன தப்பு?

Rate this:
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
05-டிச-201717:43:03 IST Report Abuse

பஞ்ச்மணிஆமா என்ன தப்பு யாரது உங்கள தடுத்து நிறுத்தியது நீங்க விருப்பபட்டா உங்க விருப்பம் போல செய்யலாம் இதுக்கு எதுக்கு மத்தவங்கள கேள்வி கேட்டுட்டு...

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
05-டிச-201714:58:46 IST Report Abuse

Pugazh Vvi காந்தம் சரத் குமாரும் அரசியலுக்கு வந்த போதும் சரி, குண்டு கல்யாணம், சிங்க முத்து போன்றோர் அரசியலுக்கு வந்த போதும் சரி, இந்த அறிவாளிகள் வாயை மூடிக்கிட்டு ருந்தாங்க. இப்போ ஏன் விஷாலைப் பார்த்து பயம், பேடி?? இவர்களின் பினாமி மதுசூதனன் தோற்றுவிடுவார் என்கிற பயமும், இவர்களின் பிஜேபி க்குகிடைக்கக் கூடிய மூன்று இழக்க வோட்டுக்களைக் கூட இரட்டை இலக்கமாக ஆக்கிடுவாரோ என்கிற பேடி போலிருக்கிறது .

Rate this:
sankar - trichy,இந்தியா
05-டிச-201718:06:50 IST Report Abuse

sankarவிஷால் ஏன் பயம் ஸ்டாலினிடம் கேளுங்க விளக்கம் சொல்லுவாரு .நடுங்கிறதேய அவரு தான்...

Rate this:
மேலும் 78 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement