காங்., தலைவர் பதவிக்கு ராகுலுக்கு எதிராக யாரும் போட்டியில்லை: மகனிடம் பொறுப்பை ஒப்படைக்க சோனியா தயார் Dinamalar
பதிவு செய்த நாள் :
போட்டியில்லை!
காங்., தலைவர் பதவிக்கு ராகுலுக்கு எதிராக யாரும்...
மகனிடம் பொறுப்பை ஒப்படைக்க சோனியா தயார்

புதுடில்லி: காங்., கட்சித் தலைவர் பதவிக்கு, அதன் துணைத் தலைவர், ராகுல், 47, நேற்று, வேட்பு மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், காங்., தலைவராக, ராகுல், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Congress,Sonia Gandhi,காங்கிரஸ்,சோனியா,சோனியா காந்தி

காங்., கட்சித் தலைவராக சோனியா உள்ளார். சமீப காலமாக, அவரது உடல்நிலை அடிக்கடி பாதித்து வருவதால், அவரது மகனும், துணைத் தலைவருமான, ராகுலை, கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், காங்., கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட, ராகுல், நேற்று முறைப்படி, டில்லியில் உள்ள காங்., தலைமையகத்தில், வேட்பு மனு தாக்கல் செய்தார்.அப்போது, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் உட்பட, காங்., மூத்த தலைவர்கள் ராகுலுடன் சென்றனர். சோனியா, ராகுலுடன், நேற்று செல்லவில்லை.

காங்., கட்சித் தலைவர் தேர்தலில், ராகுலுக்கு போட்டியாக யாரும், மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, அவர் போட்டியின்றி, கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தகவல்கள் கூறுகின்றன.
ராகுல், வேட்பு மனு தாக்கல் செய்த பின், டில்லி, காங்., தலைமையகத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:காங்., தலைவராக, ராகுல் பதவி ஏற்க வேண்டும் என்பதே, கட்சியில் அனைவரது விருப்பம். ராகுலின் தாயார், சோனியா, காங்., தலைவராக, 19 ஆண்டுகள் சேவையாற்றி உள்ளார். அதன் மூலம், நாட்டுக்கும், 19 ஆண்டு சேவை புரிந்துள்ளார்.அதே திசையில், ராகுலும் பயணிக்க உள்ளார். காங்., கட்சியின் மகத்தான பாரம்பரியத்தை ராகுல் காப் பாற்றுவார். காங்கிரசின், 'டார்லிங்'காக ராகுல் திகழ்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.ராகுல், வேட்பு மனு தாக்கல் செய்ய, நேற்று காலை, 10:30 மணிக்கு, காங்.,தலைமையகத்துக்கு வந்தார். 11:00 மணிக்கு, மனு தாக்கல் செய்தார். அவர் சார்பாக, ஐந்து

மனுக்களை, காங்., தலைவர்கள் தாக்கல் செய்தனர்.
முதல் மனுவில், ராகுலின் பெயரை, சோனியா, மோதிலால் வோரா, அஹமது படேல், மோஷினா கித்வாய், கமல்நாத், அசோக் கெலாட், முகுல் வாஸ்னிக், ஷீலா தீட்சித், தருண் கோகோய், புதுச்சேரி முதல்வர், நாராயணசாமி ஆகியோர் முன்மொழிந்திருந்தனர்.இரண்டாவது மனுவில், முன்னாள் பிரதமர் மன்மோகன் உள்ளிட்ட தலைவர்கள், ராகுலின் பெயரைமுன்மொழிந்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்ய, நேற்றே, கடைசி நாள். நேற்று வரை, வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால், காங்., தலைவராக, ராகுல் தேர்ந்தெடுக்கப்படுவதுஉறுதியாகியுள்ளது.

தலைமை பொறுப்பில் வாரிசுகள்

கடந்த, 1885ல் துவங்கி, 132 ஆண்டு வரலாறு படைத்த, காங்., கட்சியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, ஆறாவது தலைவராக, ராகுல் உருவெடுத்துள்ளார். 1919ல், மோதிலால் நேரு, காங்., தலைவராக பதவி ஏற்றார். அவரே, 1928லும்,தலைவராக பொறுப்பேற்றார்.
மோதிலால் நேருவின் மகன், ஜவஹர்லால் நேரு, 1929ல், காங்., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின், 1936லும், அவர், தலைவர் பதவி வகித்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின், முதல் பிரதமராக பதவி வகித்த ஜவஹர்லால் நேரு, 1951 - 1954ம் ஆண்டுகளில், காங்., தலைவராக பதவி வகித்தார்.ஐந்தாண்டுகளுக்கு பின், 1959ல், அவரது மகள் இந்திரா, காங்., தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
பின், 1978 - 85ம் ஆண்டுகளில், காங்., தலைவராக, இந்திரா செயல்பட்டார். 1985ல், இந்திரா படுகொலை செய்யப்பட்ட பின், அதே ஆண்டு, இந்திராவின் மகன், ராஜிவ், காங்., தலைவராக பதவியேற்றார். 1991 வரை, காங்., தலைவராக செயல்பட்ட ராஜிவ், தமிழகத்தில் விடுதலை புலிகள் அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டார்.
கடந்த, 1998ல், ராஜிவின் மனைவி சோனியா, காங்., தலைமைப் பொறுப்பை ஏற்றார். 19 ஆண்டுகளுக்கு பின், காங்., தலைவராக, தற்போது, ராகுல் பொறுப்பேற்கஉள்ளார்.
ராகுலுக்கு காத்திருக்கும் சவால்கள்காங்., கட்சியின் தலைவர்களாக, இதற்கு முன் பதவி வகித்த, ஜவஹர்லால் நேரு, இந்திரா உள்ளிட்ட தலைவர்கள், பல்வேறு சவால்களை சாமர்த்தியமாக சந்தித்து, கட்சியை வெற்றிப்பாதையில் வழி நடத்திச் சென்றுள்ளனர். அதேபோன்ற வெற்றிகளை, ராகுலால் பெற முடியுமா என்பதை

Advertisement

பொறுத்திருந்தே பார்க்க முடியும்.
தற்போது, பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, மேகாலயா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில், காங்., ஆட்சி நடக்கிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், காங்., ஆட்சியே உள்ளது.
இந்நிலையில், காங்., தலைவராக பொறுப்பேற்க உள்ள ராகுலுக்கு முதல் சவாலாக, குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் உள்ளது. லோக்சபாவில், முன்னெப்போதும் இல்லாத வகையில், மிகக் குறைந்த உறுப்பினர்கள், காங்.,கிற்கு உள்ள நிலையில், ராகுலுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது.
ராஜ்யசபாவிலும், தன் ஆதிக்கத்தை, காங்., இழந்துள்ளது. தற்போதைய நிலையில், கர்நாடகாவில், காங்., ஆட்சியை தக்க வைப்பதும், ம.பி., சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், பா.ஜ.,வை, சட்டசபைத் தேர்தல்களில் தோற்கடிப்பதும், அதற்கடுத்த பிரமாண்ட சவாலாக, 2019, லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதும், ராகுலின் முன், விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றன.
உ.பி., பீஹார், ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், காங்., பெரியளவில் செல்வாக்கை இழந்து தவிக்கிறது. இந்த மாநிலங்களில், இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவது, அத்தனை எளிதான விஷயம் அல்ல.
காங்., துணைத்தலைவராக, இதுவரை பதவி வகித்து வரும் ராகுலின் செயல்பாடுகள், பெரியளவில் குறிப்பிடும்படியாக இல்லை. பொருளாதாரம், வெளியுறவு விவகாரங்கள், விஷயங்கள் குறித்த, பார்லிமென்ட் விவாதங்களில், ராகுல், தொடர்ச்சியாக பங்கேற்க வேண்டுமென, அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
காங்., கட்சியின், அவுரங்கசீப் ராஜ்யத்திற்கு வாழ்த்துகள்; யார் அரசராக உள்ளாரோ, அவர் மகன், அடுத்ததாக அரியணையில் ஏறுவது தெரிந்த விஷயம். ஆனால், நமக்கு, 125 கோடி மக்களின் நலனே முக்கியம். நமக்கு, நாட்டு மக்களே அதிகாரம் படைத்தவர்கள்.-நரேந்திர மோடி, பிரதமர்


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rags - dmr188330,இந்தியா
15-டிச-201712:56:16 IST Report Abuse

Ragsகாங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டி இடலாம்.ஆனல் யாருக்கும் அனுமதி இல்லை.ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் வளர உழைக்க போவதாக ஆரம்பத்தில் பேசினார். ஆனால் இப்போது நடப்பது வேறு.வாழ்க ஜனநாயகம்

Rate this:
தாமரை - பழநி,இந்தியா
10-டிச-201713:43:30 IST Report Abuse

தாமரை பந்தய மைதானத்தில் ராகுலைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. வரலாறுகாணாத வெற்றியை ராகுல் அடையப்போவது உறுதி. இனி பா ஜ க வினர் மூஞ்சியை எங்கு கொண்டுபோய் வைத்துக்கொள்வார்களோ? இனிமேல் யாரும் ராஹுலை போன இடமெல்லாம் தோற்றார் என்று சொல்ல முடியாது.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
05-டிச-201722:27:11 IST Report Abuse

Pugazh VThis is in all parties. பிஜேபியில் கூட அமித் ஷாவை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. சங்பரிவார் கை காட்டுபவர் தான் தலைவர், செயலாளர்...Etc. தெரியித மாதிரி எழுதறாங்க

Rate this:
தாமரை - பழநி,இந்தியா
10-டிச-201720:00:19 IST Report Abuse

தாமரை அமித்ஷா வுடைய அப்பா ப ஜ க தலைவரல்ல. இவரைத் தேர்ந்தெடுத்தமுறைக்குப் பெயர் ஒருமனதாக என்பது. ராகுலைத் தேர்ந்தெடுத்த முறை பரம்பரை பரம்பரையாக என்று சொல்வது. இரண்டு தேர்வுகளுக்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் போல....

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
05-டிச-201718:49:35 IST Report Abuse

Pugazh Vராகுல் பத்தி நியூஸ். பிஜேபியின் ஆசாமிகள் வந்து அநாகரிகமாக ஒப்பாரி வெச்சுகிட்டு இருப்பாங்க..விடுங்கள்

Rate this:
Indian - Bangalore,இந்தியா
05-டிச-201719:46:50 IST Report Abuse

Indianஆனாலும் அப்துல் கலாம் நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்தார்னு விட்டீங்களே ஒரு பொய். அதற்கு ஈடாகுமா?...

Rate this:
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
05-டிச-201718:20:22 IST Report Abuse

Nakkal Nadhamuniஇதுவரை நீங்கள் பெற்ற வெற்றிகள் போல மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

Rate this:
Kkarthikeyan Kkarthik - Chennai,இந்தியா
05-டிச-201717:11:31 IST Report Abuse

Kkarthikeyan Kkarthikயாருமே ஓடாத பந்தயத்துல யார ஜெயிச்சி தலைவராவ போற - ராகுல் / நேரு காங்கிரஸ்

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
05-டிச-201715:54:48 IST Report Abuse

Malick Rajaஉலகம் சுழலுவதில் காங்கிரஸ் இப்போது இறக்கத்தில் அதே சுழற்சியில் பிஜேபி மறைந்து காங்கிரஸ் வரும் .. ஆட்சிகள் யாருக்கும் நிரந்தரமாக பட்டா போட்டு கொடுக்க முடியாத ஒன்று .. மேலும் கீழும் என அணைத்து திசைகளிலும் சுழலும் உலகில் நிரந்தரமாக நினைப்பவன் கோமாளி அதற்க்கு துணை போனவன் அறிவிலி ..

Rate this:
Bava Husain - riyad,சவுதி அரேபியா
05-டிச-201715:33:22 IST Report Abuse

Bava Husainஉண்மையை சொல்ல வேண்டுமானால், சமீப காலம்வரை, எனக்கும் ராகுல் மேல் பெரிய நம்பிக்கையெல்லாம் இருந்ததில்லை... ராகுல் கட்சி தலைமைக்கு சரியான ஆளு கிடையாது, அவர் விளையாட்டுப்பிள்ளை, இரண்டு ஏழைகளின் வீட்டில் போய் கொஞ்சம் கஞ்சி குடித்தால் மட்டும் போதுமா? அரசியலில் கொஞ்சம் முதிர்ச்சி வேண்டும் என நான் என் நண்பர்களிடம் கூட அடிக்கடி கூறுவதுண்டு, ஆனால் இப்போது அவர் வளர்கிறார் என்றே தோன்றுகிறது அல்லது வளர்த்து விடுகிறார்கள் என்று தோன்றுகிறது....ஏனென்றால் பிஜேபியின் ராகுலை பற்றியுள்ள விமர்சனங்கள்.... பப்பு, ராகுல் ஹிந்துவல்ல, தன் ஆட்சியைப் பற்றியுள்ள சில விமர்சனங்கள் மக்களை சென்றடையாமல் இருக்க, ராகுலைப் பற்றியும், அவரின் மதத்தை பற்றியும் பூதாகரமாக கிளம்பிவிட அதெல்லாம் ராகுலுக்கு சாதகமாகவே முடிகிறது...இந்த வசைப்பாட்டுக்களையெல்லாம் கேட்டு கேட்டு , ராகுலின் அணுகுமுறையில் தற்போது தெரிகிறது....ஆகவே ராகுல் ஒரு நல்ல தலைவராக உருவெடுத்தால் அதற்கு காரணம் பிஜேபியும், அவர்களின் செயல்பாடுகளும், அவர்களின் விமர்சனங்களுமாகத்தான் இருக்கும்.....

Rate this:
தாமரை - பழநி,இந்தியா
10-டிச-201720:01:51 IST Report Abuse

தாமரை பாவா ஹுசைன் இந்தப் பாவ்லாதான் வேண்டாமென்பது ......

Rate this:
Shree Ramachandran - chennai,இந்தியா
05-டிச-201715:16:51 IST Report Abuse

Shree Ramachandranகாங்கிரசில் ஜிஹாதிஸ்ட்டுகள் அனைவரும் அடக்கப்பட்டு "எதிர்ப்பில்லை. ஏகமனதாக தேர்வு" என்ற மாயையை தோற்றுவைத்துள்ளனர். ராகுல் என்ற பால்மணம் மாற பையனை விட திறமைவாய்ந்த பைலட், சிந்தியா, ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் உள்ளனர். இது காங்கிரசின் மேலும் வீழ்ச்சிக்கு ஒரு கெட்ட சகுனம்.

Rate this:
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
05-டிச-201714:32:48 IST Report Abuse

GB.ரிஸ்வான் திமுக அழிவின் விளிம்பில் வந்த பிறகு..... கட்டுமரம்.. ... ஐயோ எனக்கு உடல் நலம் சரியில்லை... அப்போ கூட நான் தான் தலைவர் என்கிறார்.... சுடலை வலு கட்டாயமாக... தன்னை தானே செயல் தலைவராக்கிக்கொண்டார் ... அதே போல இந்த திமுகவால் காங்கிரஸ் அழிவின் விளிம்பில் வந்துவிட்ட பிறகு ராகுல் தலைவர்.... பரிதாபமான வாழ்த்துக்கள் சுடலைக்கு ராகுலுக்கும்

Rate this:
மேலும் 46 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement