'மேகி'யில் கலப்படம் இல்லை: நெஸ்லே நிறுவனம் உறுதி Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'மேகி'யில் கலப்படம் இல்லை
நெஸ்லே நிறுவனம் உறுதி

புதுடில்லி: 'மேகி நுாடுல்சில், எந்த விதமான கலப்படமும் செய்யவில்லை. தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றுகிறோம்' என, 'நெஸ்லே இந்தியா' நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சாம்பல் :

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின், மேகி நுாடுல்சில், ரசாயன உப்பு போன்ற பொருட்கள், அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக கலந்து உள்ளதாக கூறி, அவற்றை விற்பனை செய்ய, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு, கடந்தாண்டு தடை விதித்தது. அடுத்த சில மாதங்களிலேயே, மீண்டும் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சமீபத்தில், உ.பி.,யில் விற்பனை செய்யப்பட்ட, மேகி நுாடுல்ஸ் மாதிரிகளை சேகரித்த, சாஜஹான்பூர் மாவட்ட

நிர்வாகம், அவற்றை ஆய்வு செய்வதற்கு, ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைத்தது. இதில், மேகி நுாடுல்சில், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும், சாம்பல் போன்ற பொருட்கள் அதிகளவில் சேர்க்கப்பட்டு உள்ளது, தெரிய வந்தது.

புதிய விதிமுறை :

இதையடுத்து, நெஸ்லே இந்தியா நிறுவனம், வினியோக நிறுவனம் மற்றும் விற்பனையாளர்களுக்கு, 1.22 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று, டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற,நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தலைவர், சுரேஷ் நாராயணன் கூறியதாவது: மேகி நுாடுல்சில், சாம்பல் போன்ற எந்த பொருட்களும் கலக்கப்படவில்லை.

Advertisement

அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகமாக எந்த விதமான ரசாயன பொருட்களும் சேர்க்கப்படவில்லை. எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., யின் புதிய விதிமுறைகளை முழுமையாக பின்பற்றுகிறோம்.

உத்தரவு :

உ.பி., மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு, எங்களுக்கு கிடைத்துள்ளது. அது தொடர்பான, அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து, ஆலோசித்து முடிவு எடுப்போம்.
இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இது தொடர்பாக, வேறு எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
05-டிச-201718:42:04 IST Report Abuse

Pugazh Vமீண்டும் தேசநேசன் வழக்கம் போல கலாச்சாரமில்லாத கேவலமான வார்த்தை களை கொட்டியிருக்கார். பதஞ்சலி யை சொன்னா இவருக்கு எங்கே எதுக்கு வலிக்குது?

Rate this:
rajangam ganesan - lalgudi,இந்தியா
05-டிச-201719:02:49 IST Report Abuse

rajangam ganesanபதஞ்சலி யை சொன்னா இவருக்கு எங்கே எதுக்கு வலிக்குது? கட்டுமரம் கனி சுடலை சொன்னால் உங்களுக்கு வலிக்காதா...

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
05-டிச-201714:55:58 IST Report Abuse

Pugazh Vபதஞ்சலி நூடுல்ஸின் விற்பனையைக் கூட்டுவதற்காக பா ஜெ க அரசு செய்த தில்லாலங்கடி இது. இங்கே நூடுல்ஸ் கெடுதல் என்கிற நண்பர்களே, பதஞ்சலி நூடுல்ஸ் நல்லதா? ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும் மேகி நூடுல்ஸ் பிரபலம். ஒரு பிரச்னையும் இல்லை.

Rate this:
05-டிச-201715:57:30 IST Report Abuse

DESANESANதிமுக அழுகல் புத்தி பேசுதோ? பதஞ்சலி  ஒன்றும் தனியார் கம்பெனியல்ல. அது யோகா மற்றும் ஆயுவேதத்தைப் பரப்பும் லாபநோக்கற்ற அறக்கட்டளை. உடலுக்கு மோசமான பொருட்களை விற்றாவது லாபம் பார்க்கவேண்டிய அவசியம் அதற்கேது? இதென்ன மானாட மயிலாட போல கலைச்சேவை செய்து பிழைக்கும் மட்டமான  கேவல நிறுவனமா? தரமோ குணமோ இல்லாவிடில் பதஞ்சலியின் விற்பனை ஆண்டுக்காண்டு பன்மடங்காகுமா?   சுரண்டவென்றே   வந்திருக்கும் அந்நிய எம் என் சி நிறுவனங்கள் போல கவர்ச்சிப்பெண் மாடல்களுக்கு செலவழித்ததற்காக அநியாய விலைக்கு விற்கும் நிறுவனமல்ல. விலையிலும் தரத்திலும் திருப்திகரமாக  இருப்பது ஒன்றே அதன் உயர்வுக்கு காரணம். பாவாடைநாடா விசுவாசிகளுக்கு இது புரிந்தாலும் மோசமாகத்தான் எழுதுவர்....

Rate this:
Rajesh Rajan - bangalore,இந்தியா
05-டிச-201718:52:09 IST Report Abuse

Rajesh Rajanஅப்போ ஏன் பதஞ்சலி சோப்பில் TFM அளவு போடவில்லை.. அரசு ஆணைப்படி எல்லா சோப்பிலும் இதை குறிப்பிட வேண்டும்........

Rate this:
Raj Pu - mumbai,இந்தியா
05-டிச-201718:53:07 IST Report Abuse

Raj Puகாவியின் பொய் புளுகளோ. பதஞ்சலி சாமியாரின் நண்பரின் கம்பெனி என்று தான் செய்தி, அறக்கட்டளை என்பது வரி ஆதாயம் பெற இருக்குமோ...

Rate this:
Rajesh Rajan - bangalore,இந்தியா
05-டிச-201718:53:48 IST Report Abuse

Rajesh Rajanபதஞ்சலி தேன் சில நாட்களிலேயே உறைந்துவிடுகிறதே அப்போ இது நல்ல தேன் தானா????...

Rate this:
05-டிச-201721:11:17 IST Report Abuse

SudhakarI live in Europe here Maggi noodles is available only in Asian stores not in the multinational store chains. That too is not from India...

Rate this:
Jesudass Sathiyan - Doha,கத்தார்
05-டிச-201714:29:28 IST Report Abuse

Jesudass Sathiyanகட்டிங்.... பாஜக ஊழல் இல்லாத ஆட்சி?

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X