'ஒக்கி'யில் குமரி மீனவர்கள் 25 பேர் பலி? முரண்பட்ட கணக்கால் நீடிக்கிறது குழப்பம் Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'ஒக்கி'யில் குமரி மீனவர்கள் 25 பேர் பலி?
முரண்பட்ட கணக்கால் நீடிக்கிறது குழப்பம்

நாகர்கோவில்: 'ஒக்கி' புயலில் சிக்கி, குமரி மாவட்ட மீனவர்கள், 25 பேர் இறந்திருக்கலாம் என, அஞ்சப்படுகிறது. மீனவர்கள் மாயம் பற்றி அரசும், மீனவர் அமைப்புகளும் கூறி வரும் மாறுபட்ட கணக்குகளால், குழப்பம் நீடிக்கிறது.

'ஒக்கி'யில் குமரி மீனவர்கள் 25 பேர் பலி? முரண்பட்ட கணக்கால் நீடிக்கிறது குழப்பம்


'ஒக்கி' புயலில் சிக்கி, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த, 2,000 மீனவர்கள் மாயமானதாக கூறப்பட்டது.ஆனால், அரசு தரப்பில், '97 மீனவர்கள் மட்டுமே மீட்கப்பட வேண்டும்' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

ஆனால், புயலுக்கு பல நாட்கள் முன்பே, குமரி மற்றும் கேரளாவின் பல்வேறு துறைமுகங்களில் இருந்து, மீன் பிடிக்க சென்ற, 2,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போனதாக, மீனவர் அமைப்புகள் தெரிவிக்கின்றன.

இதை உறுதி செய்யும் வகையில், மஹாராஷ்டிராவில், 68 படகுகள் கரை ஒதுங்கின. இதில், 956 மீனவர்கள் இருந்தனர். இது போல குஜராத், லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளில், மேலும் சில படகுகள் கரை ஒதுங்கியுள்ளன. ஆனால், எத்தனை மீனவர்கள் உள்ளனர் என, எந்த தரப்பிலும் உறுதி செய்யப்படவில்லை.

10 உடல்கள் மீட்புஇந்நிலையில், ராமன்துறையைச் சேர்ந்த, ஜெர்மியாஸ், 50, என்ற மீனவர் உடல் நேற்று மீட்கப்பட்டு, சொந்த ஊருக்கு வந்தது. கேரள கடற்கரை பகுதியில், 10 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.ஆனால், அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளன.இதனால், குமரி மாவட்ட மீனவக் கிராமங்களில், குழப்பமான சூழல் நிலவுகிறது.

இது தொடர்பாக, தெற்காசிய மீனவர் தோழமை கூட்டமைப்பு தலைவர் பங்கு தந்தை சர்ச்சில் கூறியதாவது:புயலுக்கு பின், கரை திரும்பியிருக்க வேண்டிய, 484 விசைப்படகுகளில், 352 படகுகளில், 1,600 பேர், பல்வேறு பகுதிகளில் கரை ஒதுங்கியுள்ளனர். 132 படகுகளில், 1,400 பேர் வரவேண்டும். 125 நாட்டு படகுகளில், 35 படகுகள் கரை திரும்ப வேண்டும். இதில், 115 பேர் உள்ளனர்.இதுவரை, ஆறு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. குளச்சல் பகுதியைச் சேர்ந்த, 13 பேரும், துாத்துார் பகுதியைச் சேர்ந்த, 25 பேரும் இறந்ததாக அஞ்சப்படுகிறது.

விடுமுறை


இது, கரை திரும்பிய மீனவர்கள் சொன்ன தகவலின் அடிப்படையிலான எண்ணிக்கை.இவ்வாறு அவர் கூறினார்.
'ஒக்கி' புயலால் மாவட்டம் முழுவதும், 3,750 மின் கம்பங்கள் சரிந்தன. 29ம் தேதி நள்ளிரவில், மாவட்டம் இருளில் மூழ்கியது. 30ம் தேதியும் மழை தொடர்ந்ததால், எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை.

வெளி மாவட்டங்களில் இருந்து, 2,000 தொழிலாளர்கள் வந்துள்ளதாகவும், 80 சதவீத மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு விடும் என, 2ம் தேதி, மின் துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.ஆனால், நேற்று, 4ம் தேதி ஆகியும், 30 சதவீத மின் இணைப்புகள் கூட வழங்கவில்லை.


நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகள் மந்தகதியில் நடப்பதாக, மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்கள், வீடு திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகும். இதனால், பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சவேரியார் கோவில் திருவிழாவுக்காக, நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.

அமைச்சர் உறுதி'ஒக்கி' புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை, ஆய்வு செய்த பின், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த, 100 ஆண்டுகளில் ஏற்படாத பாதிப்பு, 'ஒக்கி' புயலால், குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணியில், கடற்படைஹெலிகாப்டர்கள், விமானங்கள், கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.

இந்த புயலில், தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் காணாமல் போய் உள்ளனர். ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்று காணாமல் போனவர்கள், மஹாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில், கரை ஒதுங்கியுள்ளனர்.

அனைவரையும் தேடி கண்டுபிடிக்கும் வரை, எங்கள் பணி தொடர்ந்து நடக்கும். கன்னியாகுமரியில், கடற்படை ஹெலிகாப்டர் தளம் வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும். மின்சாரம், குடிநீர் போன்ற வசதிகளை, கடற்படை உதவியுடன் செய்ய முடியுமா என்பது பற்றி ஆராயப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

வந்தது மீனவர் உடல்


நாகை மாவட்டம், செருதுாரைச் சேர்ந்த சபீனன், 32, உட்பட, 11 மீனவர்கள், நவ., 28ல், கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டணத்தில் இருந்து, விசைப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். 'ஒக்கி' புயலில் சிக்கி, மீனவர்களின் படகு மூழ்கியது.

கடந்த, 2ம் தேதி இரவு, லட்சத்தீவு அருகே, மீனவர் சபீனன் உடல் கரை ஒதுங்கியது. அவரது உடல், கொச்சி எடுத்துச் செல்லப்பட்டு, பரிசோதனைக்கு பின், சொந்த ஊரான செருதுாருக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

உடலை பார்த்து, உறவினர்கள் கதறி அழுதனர். 'சபீனன் குடும்பத்தினருக்கு நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்' என, கிராம மக்கள் கூறினர்.

நிவாரண நிதிகன்னியாகுமரி மாவட்டத்தில், பலத்த காற்றுடன் கூடிய கன மழை காரணமாக, குழித்தட்டு விளையைச் சேர்ந்த ரத்தினசாமி, வடசேரி, வடக்கு வீதியைச் சேர்ந்த தியாகராஜன், வாழவிளை, மாத்துாரைச் சேர்ந்த அன்னம்மாள் ஆகியோர், மரம் முறிந்து விழுந்ததில் இறந்தனர்.இனையம் புத்தன்துறையைச் சேர்ந்த மீனவர்கள் சூசைய்யா, ஜெர்மியான்ஸ் ஆகியோர், புயலில் சிக்கி இறந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, தலா, 4 லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஜென்ஜெட் மூலம் மின் சப்ளை


வருவாய் துறை அமைச்சர், உதயகுமார், மதுரையில் நேற்று அளித்த பேட்டி:குமரி மாவட்டத்தில், முதல்வர் உத்தரவுப்படி, மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும், உடனடியாக வழங்கப்படுகின்றன. ஜென்ஜெட் மூலம் மின் சப்ளை செய்யப்படுகிறது.

Advertisement

சாய்ந்த மரங்கள், அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன; நீர் தேங்காமல் வெளியேற்றப்படுகிறது. மீனவர் மீட்புக்குழு மூலம் மீட்பு பணி நடக்கிறது. தொற்று நோய் பரவாமல் தடுக்க, மருத்துவக் குழுக்கள் மூலம் முகாம்கள் அமைத்து, சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

12 மீனவர்கள் மீட்புகேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பொன்னானி அருகே, கடலில் தவித்த, கன்னியாகுமரியைச் சேர்ந்த, 12 மீனவர்களை, கேரள மீன்வளத் துறை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். அவர்கள், கொச்சிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மீனவர்கள் கூறுகையில், 'மூன்று நாட்களாக, கடலுக்குள் தவித்தோம். யாரிடமும் தகவல் தொடர்பு வைக்க முடியாத அளவுக்கு புயல் வீசியது. நாங்கள் பிழைத்து வருவோமா என்பது கூட தெரியாது' என்றனர்.

ஸ்டாலின் ஆறுதல்எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நேற்று, குமரி மாவட்டத்தில், புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். நீரோடி, சின்னத்துறை, துாத்துார் கடற்கரை கிராமங்களுக்கு சென்ற போது, ஆயிரக்கணக்கான பெண்கள் கதறி அழுது, தங்கள் சோகத்தை வெளிப்படுத்தினர்.

பின், அவர்கள் மத்தியில் ஸ்டாலின் பேசியதாவது: வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையை, மீனவர்களுக்கு உரிய காலத்தில் தெரிவித்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது. உயிரிழப்பை தடுத்திருக்க முடியும். எல்லாம் முடிந்த பின், துணை முதல்வரும், அமைச்சர்களும் வந்துள்ளனர்.

மீனவர்களின் உணர்வுகளை, துயரங்களை மத்திய, மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நிவாரணம் பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொள்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.இதேபோல, தினகரன், திருமாவளவன், சீமான் ஆகியோரும், புயல் பாதிப்பு இடங்களை பார்வையிட்டனர்.

3,000 மின் ஊழியர்கள் முகாம்


'ஒக்கி' புயலால் குமரி மாவட்டம் வெள்ளத்தில் தத்தளித்தது. அங்கு, 10,482 ஏக்கர் நிலத்தில் நெற் பயிர்கள் சேதமடைந்தன. ஏராளமான மரங்கள் முறிந்தன. 2,500க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. இதனால், நவ., 30 முதல், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

குடிநீர் கிடைக்காமல் மக்கள் சிரமம் அடைகின்றனர். சர்ச்களில் ஜெனரேட்டர் மூலம், மொபைல் மற்றும் எமர்ஜென்சி விளக்குகளுக்கு இலவசமாக சார்ஜ் ஏற்றிக்கொள்ள வசதி செய்யப்பட்டது.மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி, புதிய கம்பங்கள் அமைக்கும் பணியில், மின் ஊழியர்கள் துரிதமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக, மதுரை மண்டல அளவில், 700 பேர் உட்பட, 3,000 ஊழியர்கள் மாவட்டம் முழுவதும் குடில்கள் அமைத்து சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி, 15 நாட்களுக்குள் முடித்து அனைத்து பகுதிகளிலும் சீரான மின்சாரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
05-டிச-201719:19:23 IST Report Abuse

Tamilanநாட்டில் உள்ள மண்ணை உபயோகிக்க தடை. நாட்டில் உள்ள மக்களை ஏற்றுமதி செய்ய தடையில்லை. இந்திய அரசியல் சட்டத்தின் காமடிகளில் இதுவும் ஒன்றா அல்லது வெளிநாடுகளில் இருந்து மண்ணை இறக்குமதி செய்து பிழைப்பு நடத்தவேண்டிய அளவுக்கு தமிழர்களின் நிலைமை மோசமாகிவிட்டதா?

Rate this:
மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா
05-டிச-201718:38:21 IST Report Abuse

மஸ்தான் கனிமாடு எங்கெல்லாம் போகுதுன்னு ரேடாரில் பார்க்கும் அதேநேரத்தில் மாயமான மீனவர்களை தேடுதல் தாமதமாக்குவது ஒரு ஏமாற்று வேலை

Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
05-டிச-201716:08:01 IST Report Abuse

Sanny புயலாவது, வயிற்று பிழைப்பாவது, எதை மனுஷன் பார்ப்பது. அதிக GST வாங்கும் இந்திய அரசு சீரற்ற காலநிலையால் வேலைக்கு போக முடியாதவர்களுக்கு, இடைக்கால நிவாரண நிதி வழங்குமா?

Rate this:
bairava - madurai,இந்தியா
05-டிச-201713:53:24 IST Report Abuse

bairava இது மத்திய அரசின் திட்டமிட்ட செயலே அவர்களின் வாழவதாரத்தை பறிக்க முயற்சி செய்த வேளையில் இயற்கை சீற்றத்தால் அவர்களின் எண்ணம் நிறைவேற்ற பட்டது

Rate this:
Selvamony - manama,பஹ்ரைன்
05-டிச-201711:53:38 IST Report Abuse

Selvamonyஇதுதான் டிஜிட்டல் இந்தியா . கேவலம் இந்த முன்னறிவிப்பு கூட சொல்ல முடியாத அரசு ஆனால் ஓட்டு இயந்திரத்தில் எப்படி குளறுபடி செய்து நாங்கள் தான் வெற்றி என்று சொல்லுகிற டெக்னாலஜி ஏமாற்று கில்லாடி அரசு

Rate this:
Sanghimangi - Mumbai,இந்தியா
05-டிச-201710:39:29 IST Report Abuse

Sanghimangiஅனைத்து ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் கிடைத்து வந்த அரசு நிதியை பாதியாக குறைத்ததால், சம்பளத்திற்கே திண்டாடும் நிலையில் இந்த நிறுவனங்கள் தள்ளாடி வருகின்றன. நிதி சேமிப்பிற்காக அனைத்து பணிகளும் கிட்டத்தட்ட நின்றே போய் விட்டது என்று சொல்லலாம். அதனால், நமக்கு வெவ்வேறு செயற்கைகோள்கள் மூலம் தகவல்கள் கிடைத்தாலும், அதை பகுப்பாய்வு செய்யும் பெரும்பாலான தற்காலிக ஆராய்ச்சியாளர் மற்றும் மாணவர்கள், தங்களின் வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டதால் வந்த பின்விளைவுகளில் இதுவும் ஒன்று. இது மட்டுமின்றி, இந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் தங்களது நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தால் பெரும்பாலான மாணவர்களின் கட்டணங்கள் பன்மடங்கு உயர்த்தப்பட்டு விட்டது. இதனால் இங்கு இருந்த ஒரு சில மாணவர்களும் இந்த ஆராய்ச்சி நிலையங்களை விட்டு ஓட்டம் பிடிக்க வேண்டிய நிலையில் இருக்கும் அவல நிலை நீடிக்கிறது. ஆகவே ஆராய்ச்சி பணியாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முன்பு இருந்தது போல நிதி வசதியை தொடர்ந்து அளித்தால் மட்டுமே ஒரு சிறப்பான எதிர்காலம் நமக்கு கிடைக்கும்..

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
05-டிச-201708:02:06 IST Report Abuse

தேச நேசன் வசதிகளே இல்லாத சிறு படகுகளில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்வதன் ஆபத்தை இனியாவது உணரட்டும் அதற்கு சற்று பெரிய கப்பல்கள் மட்டுமே லாயக்கு

Rate this:
Raj Pu - mumbai,இந்தியா
05-டிச-201718:59:43 IST Report Abuse

Raj Puஉங்கள் பொன்னார் எங்கப்பா அவர் முனகலே கேட்கவில்லையே...

Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
05-டிச-201706:05:39 IST Report Abuse

Sanny அது எதுக்கு பாதுகாப்பு அமைச்சர் வீரர்களுக்கு கைகுலுக்கும்போது குறுக்கால கதிரைகள் வைத்திருக்கு, ஏதாவது கட்டிப்புடி வைத்தியம் நடந்திடும் என்ற பயமா?

Rate this:
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
05-டிச-201702:42:14 IST Report Abuse

கும்புடுறேன் சாமிஎதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டது கொஞ்சமாவது ஆறுதலை அளிக்கிறது

Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
05-டிச-201706:06:18 IST Report Abuse

Sanny அப்போ அப்படியே உங்க ஓட்டையும் அவருக்கு போட்டுவிடுங்க சாமி....

Rate this:
bala - toronto,கனடா
05-டிச-201706:39:39 IST Report Abuse

bala50 ஆண்டுகளாய் வாயால் வடை சுடுகிறார்கள் .... இறந்த ஒவ்வொரு குடுப்பத் தலைவனுக்கும் யார் பதில் சொல்வது? இவர்களை நம்பி கொண்டு ஒரு கூட்டம்......

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
05-டிச-201707:58:49 IST Report Abuse

தேச நேசன் அவரே காஞ்ச கருவாடுபோல ஆகிவிட்டார் மீனவரைப் பாத்து என்ன செய்யப்போகிறார் ?...

Rate this:
Raj Pu - mumbai,இந்தியா
05-டிச-201719:01:28 IST Report Abuse

Raj Puஅது தான் உங்கள் ஆட்கள் போலி காளைகள் போல உள்ளார்களே இவர்களாவாது வடை சுடுவார்களா என்று பார்த்தால் ஒரு முக்கால் முனகல் கூட இல்லையே...

Rate this:
Shanu - Mumbai,இந்தியா
05-டிச-201702:15:51 IST Report Abuse

Shanuஇஸ்ரோ எத்தனையோ ராக்கெட்டுகளை விடுகின்றன. புயல் பத்தி முன்னறிவிப்பு வரவில்லை. சவூதி அரேபியா மற்ற நாடுகளிடமிருந்து சாட்டிலைட் தகவலை பெறுகிறது. சில நாட்களுக்கு முன் சவுதியில் மழை வந்தது. அந்த மழை பத்தி ஒரு வாரத்திற்கு முன் சொல்லி விட்டார்கள். அந்த சமயத்தில் கடுமையான வெயில். அடுத்த வாரம் பெரிய மழை வர போகிறது என்பது வேடிக்கையாக இருந்தது. ஆனால் , அவர்கள் சொன்னது போல் குறித்த நாளில் விடியற்காலம் 5 மணிக்கு இடியுடன் கூடிய பெரிய மழை. இது தான் உண்மையான வாளினை அறிக்கை. நம் நாட்டில், எத்தனையோ சாட்டிலைட் விடுகிறார்கள். அதை எதற்கு விடுகிறார்கள். நாட்டில் உள்ள பணத்தை தான் வீணடிக்கிறார்கள்.

Rate this:
dhandapani - Tiruppur,இந்தியா
05-டிச-201709:33:04 IST Report Abuse

dhandapaniநமது ஊரில் சொன்னால் யாரும் கேட்கமாட்டார்கள் புயல் இருக்கு மீனவர்கள் கவனம் என்று பலதடவை அறிவிப்புகள் செய்தது வானிலை மையம்...

Rate this:
Raj Pu - mumbai,இந்தியா
05-டிச-201719:02:45 IST Report Abuse

Raj Puபரவாயில்லையா உங்களுக்கு மட்டும் தனி அறிவிப்பு, பிறகு ஏன் இதைப்பற்றி விசாரணை செய்யப்படும் என்று மத்திய அரசு கூறியது, ஓ இதுவும் மக்களை ஏமாற்றத்தானா...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement