தமிழ் கட்டாயம்: பள்ளி கல்வியில் குழப்பம் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழ் கட்டாயம்:
பள்ளி கல்வியில் குழப்பம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், பிற மொழி மாணவர்களுக்கு, தமிழ் பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டதில், இந்த ஆண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் கட்டாயம்: பள்ளி கல்வியில் குழப்பம்


தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தமிழ் வழி, ஆங்கில வழி மற்றும் பிற மொழி மாணவர்களுக்கு, அவர்களின் தாய்மொழிகளில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, ஹிந்தி மற்றும் அரபிக் போன்ற மொழிகளிலும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில், 10ம் வகுப்பு வரை, தமிழ் பாடம் கட்டாயம் என்ற சட்டம், 2006ல்அமலுக்கு வந்தது. அப்போது முதல், பிற மொழி மாணவர்களுக்கு, ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என, ஒவ்வொரு வகுப்புக்கும், படிப்படியாக, தமிழ் அறிமுகம் செய்யப்பட்டது.

உத்தரவு


இதையடுத்து, 2006ல், ஒன்றாம் வகுப்பு படித்தவர்கள், 2016ல், 10ம் வகுப்பு தேர்வை எழுதினர். அவர்களுக்கு, மொழி பாடத்தில் தமிழை கட்டாயமாக எழுத,பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.அதனால், பிற மொழி பாட மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெயரளவில் அறிமுகம் செய்யப்பட்ட, தமிழ் கட்டாயம் என்ற சட்டத்தில், முறையாக தமிழ் பயிற்றுவிக்கப்படவில்லை என, புகார் எழுந்தது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவில், அந்த மாணவர்களுக்கு, தமிழ் பாடம் எழுதுவதில் விலக்கு அளிக்கப்பட்டது.இந்நிலையில், இந்த ஆண்டும், பிற மொழி மாணவர்கள், 10ம் வகுப்பில், தமிழை கட்டாய பாடமாக எழுத உத்தரவிடப்பட்டு உள்ளது. இதில், சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும், தமிழில் தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டுஉள்ளது.
வேலை மற்றும் வணிக ரீதியாக, பிற மாநிலங்களில் இருந்து, குடும்பத்துடன் தமிழகத்துக்கு வந்த, அரசு மற்றும் தனியார் துறையினரின் பிள்ளைகள்,

Advertisement

ஒன்பது அல்லது, 10ம் வகுப்பில், தமிழகத்தில் சேர்ந்திருந்தால், அவர்கள் மட்டும், தமிழ் தேர்வு எழுத விலக்கு தரப்பட்டு உள்ளது.சிறப்பு மதிப்பெண்இந்த அறிவிப்பால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. எட்டு, ஏழு, ஆறு என, மற்ற வகுப்புகளில் சேர்ந்த, பிற மொழியினர் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுத்து, 10ம் வகுப்பில், தமிழ் தேர்வு யாருக்கு கட்டாயம்; ஒன்பதாம் வகுப்புக்கு கீழ் சேர்ந்த மாணவர்களுக்கு விலக்கு உண்டா...இல்லையென்றால், அவர்களுக்கு தமிழ் பாட தேர்வில், சிறப்பு மதிப்பெண்கள் அளிக்கப்படுமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

- நமது நிருபர் -

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand K - chennai,இந்தியா
11-டிச-201711:22:17 IST Report Abuse

Anand Kபள்ளி கல்வி குழப்பம் மாணவர்களுக்கு 2011 முதல் ஸ்மார்ட் கார்ட் வழங்க படும் என EMIS பணி பள்ளி மூலம் வருடம் தோறும் ஆன்லைன் மற்றும் ஆப் லைன் என்ட்ரி என பள்ளிகள் மூலம் நடைபெற்றது அதற்கு ஒவ்வொரு பள்ளியும் பல ஆயிரம் செலவு செய்தது அது மட்டும் இன்றி வருடம் தோறும் போட்டோ எடுக்க ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு வருடம் 50 ரூபாய் என கடந்த ஆறு ஆண்டுகளாக செலவு செய்து விள்ளனர். 2016 முதல் EMIS சரியாக வேலை செய்ய முடிந்தது அதற்கு முன் EMIS வேலையானால் பள்ளிக்கு பெரும் வேலை ஏன் எனில் வருடம் தோறும் ஆன்லைன் மற்றும் ஆப் லைன் என தனி தனியா செய்ய வேண்டி இருந்தது ஒவ்வொரு என்ட்ரிக்கும் 100 ரூபாய் செலவு செய்யபட்டு உள்ளது

Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
05-டிச-201720:35:28 IST Report Abuse

BoochiMarunthuகர்நாடகாவில் அனைவரும் கன்னடம் கட்டாயமாக படிக்க வேண்டும் . இது பிஜேபி ஆட்சியில் தான் கொண்டு வந்தார்கள் . தேசியம் பேசுபவர்கள் ஏன் அங்கு போய் கேட்பது இல்லை ? தமிழை மட்டும் மட்டம் தட்டி வைக்கும் காரணம் தமிழ் சமஸ்கிருதத்தை விட பழமையானது . இது அவர்களுக்கு உறுத்துகிறது .

Rate this:
- Kumbakonam,இந்தியா
05-டிச-201710:36:26 IST Report Abuse

 தமிழ் கட்டாயமாக்கப்பட வேண்டும்,தமிழ் நாட்டில் அஞ்சல் அலுவகங்களில் தமிழே தெரியாத வட மாநிலத்தவர் வேலை செய்கிறார்கள். இது எப்படி சாத்தியம் அவர்கள் தேர்வாணையத்தில் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்று வந்தவர்களாம் . இன்னும் தமிழ் நாட்டில் கிராமப்புற பள்ளிகளுக்கு கூட ஹிந்தி பேசுவோர் ஆசிரியராக நியமிக்கப்படலாம் .... விழித்துக்கொள்ளுங்கள்

Rate this:
தேச நேசன் - Chennai,இந்தியா
05-டிச-201707:11:06 IST Report Abuse

தேச நேசன் மற்றமொழிகளைப் படித்தால் எளிதில் நூறு சதவீதம் வாங்கிவிடலாம் என்ற நினவில்தான் பலர் தமிழையே தவிர்க்கின்றனர். எனவே நாம் செய்யவேண்டியது மற்றமொழிபடங்களிலும் தமிழில் இருப்பதுபோல் இலக்கணப் பகுதியை கடுமையாக ஆக்குவதுதான் மார்க் வாங்க முடியாது எனத்தெரிந்தால் தானாகவே தமிழுக்கு மாறுவர் அதோடு அரசு வேலைக்கான தேர்வுகளில் தமிழ் முக்கியத்துவம் பெறவேண்டும்

Rate this:
DR TE PARTHASARATHY - chennai,இந்தியா
05-டிச-201705:32:04 IST Report Abuse

DR TE PARTHASARATHYமுதல் வகுப்பு ஆரம்பித்து தாய் மொழி பயிலும் மாணவர் அதே மொழியில் 10 வகுப்பு மற்ற மேல் வகுப்புகள் பயில வைப்பு அளிக்கவேண்டும்.சீனாவில் கூட பிற மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.கனடாவில் தமிழ் பயில்வது ஊக்குவிக்கப்படுகிறது.சிங்கப்பூரில் பிறமொழிகள் வரவேற்கப்படுகின்றன.இத்தகு மனப்பான்மை தமிழக அரசுக்கு பெருமை சேர்க்கும்.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
05-டிச-201704:15:49 IST Report Abuse

Kasimani Baskaranநீதிமன்றம்தான் குழப்பங்களை செய்வது போல தோன்றுகிறது...

Rate this:
JAYARAMAN - CHENNAI,இந்தியா
05-டிச-201703:46:36 IST Report Abuse

JAYARAMANEducation is only for improving our knowledge. If you force, it will be painful only to the students. Students are going to different states, because their parent's jobs are like that. Just by completing education, nobody is guaranteed of a job. So, let the students enjoy education. Language should not be a barrier.

Rate this:
Subramaniam - Prague,செக் குடியரசு
05-டிச-201703:00:52 IST Report Abuse

Subramaniamதமிழ் நாட்டில் தமிழும் ஆங்கிலமும் தடை செய்யப்பட வேண்டும்.ஹிந்தி தெலுங்கு மலையாளம் கட்டாய மொழியாக வர வேண்டும். தொடர்ந்து தமிழ் நாடு சுரண்டப்பட்டு அடிமை மாநிலமாக மாற வேண்டும்.

Rate this:
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
05-டிச-201702:36:36 IST Report Abuse

கும்புடுறேன் சாமிகம்ப ராமாயணம் எழுதினது சேக்கிழார்ன்னு முதல்வர் பேசியபோதே தெரிஞ்சுருச்சு இந்த ஆட்ச்சில தமிழ் எப்படி இருக்கும்ன்னு

Rate this:
Raj Pu - mumbai,இந்தியா
05-டிச-201718:56:28 IST Report Abuse

Raj Puகம்ப ராமாயணம் வந்ததால் தமிழை விட சமஸ்கிருதம் உயர்வு என்று காட்டத்தான்...

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
05-டிச-201701:43:05 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்இதே நிலைப்பாட்டை நீட் தேர்வுக்கு ஏண்டா எடுக்கலை நொன்னைங்களா? பெயரளவுக்கு சட்டமாம், தமிழை படிக்கமாட்டார்களாம். ஓடிப்போயிடுங்க அப்போ.

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement