'நண்பேன்டா' என விவசாய பணிக்கு 'மாடாக' தோள் கொடுத்த நண்பர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'நண்பேன்டா' என விவசாய பணிக்கு 'மாடாக' தோள் கொடுத்த நண்பர்கள்

Updated : டிச 05, 2017 | Added : டிச 04, 2017 | கருத்துகள் (8)
Advertisement
சோழவந்தான், Sholavandan, உழவு மாடுகள்,cattle,  இயந்திரங்கள்,Machines,  விவசாயம், Agriculture, விவசாயி, farmers,  இளைய தலைமுறை, younger generations, நெல் நடவு,rice plantations,  மக்கா சோளம்,maize , கடலை,

சோழவந்தான் : உழவு மாடுகள் கிடைக்காததால், மாடுகள் செய்ய வேண்டிய பரம்படிக்கும் விவசாயபணியைமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இளையதலை முறையினர் சேர்ந்து செய்தனர்.

விவசாய பணிகளுக்கு டிராக்டர் உள்ளிட்ட இயந்திரங்கள் வருகையால், தமிழகத்தில் பல பகுதிகளில் உழவு மாடுகளை வைத்து பராமரிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து போனது.நெல் நடவு, மக்கா சோளம், கடலை உள்ளிட்ட பயறுவகை பயிர்கள் நடவுக்கு உழவு மாடுகளை வைத்து மேற்கொள்ளப்படும்


விவசாய பணிகள்

இயந்திரங்கள் மூலம் செய்வதைவிட சிறப்பாக இருக்கும்.இந்நிலையில் உழவு மாடுகளுக்கு தட்டுப்பாடு உள்ளதால், மாடுகளுக்கு பதில் மனிதர்களே பரம்படிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

சோழவந்தான், நாச்சிகுளம் அருகே நரிமேடு கிராமத்தை சேர்ந்த கார்த்தி,22, பி.காம்., பட்டதாரி. தந்தையை இழந்த இவர் தனது ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலத்தில் மாடுகளுக்கு பதில் நண்பர்களுடன் பரம்படிக்கும் பணிகளை மேற்கொண்டார்.கார்த்தி கூறியதாவது: தற்போது பெரியாறு பாசனத்தால் எங்கள் பகுதி முழுவதும் விவசாய பணி நடக்கிறது.

இதனால் பரம்படிக்க, மாடு வைத்திருப்பவர்கள் 'பிசி'யாக உள்ளனர்.பல ஏக்கர் நிலம் வைத்துள்ள பெரிய விவசாயிகளுக்கு, மாடுகளை பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர். மிக குறைந்தளவு நிலத்திற்கு வர தயக்கம் காட்டினர். இரண்டு ஆண்டுகள் தரிசாக கிடந்த நிலம் என்பதால் விவசாய பணிக்கு கூடுதலாக செலவு செய்துஉள்ளோம்.

நாற்று நடவு பணிகளுக்கு ஆட்கள் வருவதற்குள் நிலத்தை தயார்படுத்தவேண்டும். எனவே உழவு மாடுகளுக்காக காத்திருக்காமல் நண்பர்களுடன் சேர்ந்து வீட்டில் இருந்த 'ரீப்பர்' கட்டையில் கயிற்றை கட்டி நாங்களே மாடுகளாக மாறி பரம்படித்தோம், என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ushadevan -  ( Posted via: Dinamalar Android App )
05-டிச-201712:16:56 IST Report Abuse
ushadevan இந்த நண்பர்களை எத்தனை பாராட்டனாலும் தகும் என்றாலும் உழைப்பில் ஆர்வம் கொண்ட இந்த மாணவர்களுக்கு அரசாங்கமும் ஊக்கம் தரும் விதமாக உதவ வேண்டும். விவசாயிகளின் நண்பன் என்ற கமல் போன்றோரும் உதவி என்க்ரேஜ் பண்ணலாம். எனிவே இந்த நட்பு செல்வங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
P SIVASAKTHI NAYAGAN - UDUMALPET,இந்தியா
05-டிச-201711:53:29 IST Report Abuse
P SIVASAKTHI NAYAGAN இப்படி மாடு மாதிரி வேலை செய்தால், இந்த நாட்டில் அவர்களையும் கொன்று மாமிசமாய் சாப்பிடும் உரிமையுள்ளதாய் கூறி கொன்று விடுவார்கள். விவிசாயி படும் கஷ்டத்தை அறியாத மக்களுக்கு இப்படி உழைப்பது முட்டாள்தனம். நஷ்டம் வரும் இந்த தொழிலை விட்டுவிட்டு வேறு வேலை செய்து பிழைக்கலாம். வேண்டுமானால் , வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துகொள்ளலாம் என்று கூறும் நகரத்தான்கள், வெளிநாட்டிலேயே இறக்குமதி (பிச்சை) எடுத்துக்கொள்ளட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Thennuran - Chennai,இந்தியா
05-டிச-201711:51:09 IST Report Abuse
Thennuran கண்களில் கண்ணீர் வருகிறது. வாழ்த்துக்கள் இளைஞர்களே ...................
Rate this:
Share this comment
Cancel
Sasi - Madurai,இந்தியா
05-டிச-201711:23:19 IST Report Abuse
Sasi இவர்கள் மாதிரி மனிதர்கள் இருக்கும் வரை விவசாயம் அழியாது..... மாணவ நண்பர்களுக்கு எனது ஆதரவும் வாழ்த்துக்களும்....
Rate this:
Share this comment
Cancel
Rajasekaran CJ - bangalore,இந்தியா
05-டிச-201710:45:06 IST Report Abuse
Rajasekaran CJ வாழ்த்துக்கள் .விவசாயத்தை விடாமுயற்சியுடன் செய்ய முடிவு செய்ததற்கு பாராட்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
05-டிச-201710:40:50 IST Report Abuse
Loganathan Kuttuva மாடு மாதிரி மாணவர்கள் உழைக்கிறார்கள்.நிச்சயமாக இவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
05-டிச-201707:07:13 IST Report Abuse
IndiraBthane இவர்கள் படித்த இளைஞர்களாக இருப்பதால் விற்பனை மின்னணு சந்தை மூலம் செய்தால் லாபம் கிடைக்கும் .அதாவதுஇந்தியாவின் எந்த பகுதியில் அதிக விலை கிடைக்கிறதோ அங்கு விற்க வேண்டும்.முயற்சி செய்ய வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
SabaNatesan -  ( Posted via: Dinamalar Android App )
05-டிச-201706:06:09 IST Report Abuse
SabaNatesan Best of Luck. God Bless you.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை