ஆதாருடன் இணைக்க வேண்டிய 'ஆறு' Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'ஆறு'
ஆதாருடன் இணைக்க வேண்டிய 'ஆறு'

மோடி தலைமையிலான மத்திய அரசு, பல்வேறு நல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இவறறின் பலனைப் பெறுவதற்கு ஆதார் எண்களை இணைப்பதை கட்டாயமாக்கி உள்ளது. முறைகேடுகளை தடுப்பதற்காக இப்படி செய்யப்படுவதாக அரசு சார்பில் கூறப்படுகிறது.வங்கிக்கணக்கு, பான் கார்டு, இன்சூரன்ஸ் பாலிசி, மியூச்சுவல் பண்ட், தபால் துறை திட்டங்கள், அலைபேசி எண் ஆகிய ஆறு சேவைகளை ஆதார் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கான கடைசி தேதியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி இணைப்பது?

பான் கார்டு: ஆதாருடன் பான் கார்டை இணைக்க https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarPrelogin.html என்ற இணையதளத்தில் பான்கார்டு, ஆதார் விவரங்களை உள்ளீடு செய்து இணைக்கலாம்.கடைசி தேதி : 2017 டிச., 31 நடவடிக்கை : வருமான வரி தாக்கல் செய்ய இயலாது

வங்கிக்கணக்குகணக்கு வைத்திருக்கும் வங்கியில் ஆதார் எண்ணை வழங்கி இணைக்கலாம் அல்லது இன்டர்நெட் பேங்கிங்,மொபைல் பேங்கி்ங் மூலம் ஆதார் அப்டேட் லிங்கை கிளிக் செய்து இணைக்கலாம்.கடைசி தேதி : 2017 டிச., 31 நடவடிக்கை : கணக்கு முடக்கப்படும்
மியூச்சுவல் பண்ட்சி.ஏ.எம்.எஸ் மற்றும் கார்வி கம்ப்யூட்டர்ஷேர் இணையதளங்கள், உங்கள் மியூச்சுவல் பண்ட் கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உதவுகிறது.கடைசி தேதி : 2017 டிச., 31 நடவடிக்கை : கணக்குகள் நிறுத்தப்படும்
இன்சூரன்ஸ் பாலிசிஇன்சூரன்ஸ் பாலிசிகளை இணைப்பதற்கு அந்தந்த நிறுவன கிளைகளுக்கு நேரடியாக சென்று, பாலிசி எண், பிறந்த தேதி, ஆதார் எண் வழங்கி இணைக்கலாம்.

Advertisement

எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., இன்சூரன்ஸ், மேக்ஸ் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் 'ஆன்லைன்' மூலம் இணைப்பதற்கு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.கடைசி தேதி : 2017 டிச., 31 நடவடிக்கை : காப்பீட்டு திட்டங்களை தொடர முடியாது
தபால் திட்டங்கள்தபால் நிலையங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள், ஆதாரை இணைப்பதற்கு, இந்தியா போஸ்ட் இணையதளத்தில் அதற்குரிய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, கணக்கு வைத்திருக்கும் கிளையில் வழங்குவதன் மூலம் இணைக்கலாம்.கடைசி தேதி : 2017 டிச., 31 நடவடிக்கை : கணக்கு முடக்கப்படும்

அலைபேசி எண்தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு சென்று, அலைபேசி எண்ணுடன் ஆதாரை இணைக்கலாம்.கடைசி தேதி : 2018 பிப்., 6நடவடிக்கை : அலைபேசி எண் செயலிழக்கப்படும்.

Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram KV - Bangalore,இந்தியா
07-டிச-201710:47:50 IST Report Abuse

Ram KVGovernment of India has started in correct direction towards digitalization after 65+ years now only. It is to be given sufficient time. We were crying for so many years. If someone has started to do in the right direction, we are blaming them in many ways.We have to start in realistic way without biased approach.If you are looking the GOI steps, it is master plan and doing in a step by step procedure.We will wait and have to wait as we were not doing anything , almost, for last 70 years.

Rate this:
Rajayogan Palanichamy - Virudhunagar,இந்தியா
05-டிச-201721:57:08 IST Report Abuse

Rajayogan Palanichamyஇந்தியர் யாவருக்கும் பிறந்தவுடனேயே வழங்க வேண்டிய ஒன்று இந்திய பிரஜைக்கான அட்டை அதில் எந்த வித சொத்தோ வருமானம் இல்லாதவர்களுக்கு மட்டும், அதாரம் தேவை படுவோர்கள்மட்டும் தனது பிரஜை அட்டையை அதாரம் தேவைக்கு பதிந்து கொண்டு அரசாங்க இலவசங்களையும் சலுகைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும். வருமானவரி, சொத்துவரி கட்டும் யாருக்கும் அரசாங்க சலுகைகள் மக்கள் வரிப்பணத்தில் கொடுத்தால் அது தேவையற்ற ஒன்று

Rate this:
ranjit - cleveland,யூ.எஸ்.ஏ
05-டிச-201721:20:21 IST Report Abuse

ranjitஎல்லாம் சரி தொழு நோய் உள்ளவர்களுக்கு என்ன மாற்று வைத்திருக்கிறது ...எவருக்காவது தெரியுமா ? பகிருங்கள் இங்கே...

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X