blind student | பார்வையற்ற பட்டதாரிகளின் கண்கள்...| Dinamalar

பார்வையற்ற பட்டதாரிகளின் கண்கள்...

Updated : டிச 05, 2017 | Added : டிச 05, 2017 | கருத்துகள் (1)
Advertisement

கர்ணா வித்யா நுாலக பெண்கள்..


பார்வையற்ற பட்டதாரிகளின் கண்கள்...
அறுபது எழுபது வயதான பெண்கள் சிலர் ஒன்றுகூடி பார்வையற்றவர்களுக்கு இலவசமாக செவிவழியாக கல்வி கற்றுத்தரும் நுாலகம் நடத்துகின்றனர்,இவர்கள் நடத்திவரும் நுாலகத்தால் இதுவரை 1100க்கும் அதிகமான பார்வையற்ற மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர்.


பார்வை இல்லாதவர்கள் பிளஸ் டூ வரை அவர்களுக்கான சிறப்பு பள்ளியில் படித்துவிடுவர்.கல்லுாரிக்கு வரும்போது எல்லோரும் படிக்கக்கூடிய பொதுவான கல்லுாரியில்தான் படிக்கவேண்டும்.

வகுப்பறையில் நடத்தப்படும் பாடங்களில் சந்தேகங்கள் வந்தால் நார்மலாக இருக்கும் மாணவர்கள் வீட்டிற்கு வந்து புத்தகங்களை எடுத்து படித்து சந்தேகம் தீர்த்து கொள்வர், ஒரு முறைக்கு பல முறை படித்து மனதில் பதியவைத்துக் கொள்வர்,ஆனால் பார்வை இல்லாத மாணவர்கள் புத்தகங்களை படிக்க முடியாத நிலை.

இதன் காரணமாக ஆங்காங்கே உள்ள பள்ளி வளாகத்தில் வாரக்கடைசி நாட்களில் அவர்களுக்கான புத்தகங்களை வாசித்து அவர்கள் மனதில் பதியவைக்கும் பல தொண்டுள்ளங்களை பார்த்து இருக்கலாம்.அப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்டவர்தான் ஷைலா விஸ்வநாதன்.
இவரது கணவர் விஸ்வநாதன் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் கோரமண்டல் அமைப்பின் உறுப்பினர், கிளப் சார்பாக பார்வையற்றவர்களுக்கு ஒரு உதவி செய்யும் திட்டம் இருக்கிறது என்று சொன்னபோது ஒரு ரீடிங் சென்டர் அமைத்துக் கொடுங்கள் மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து படித்துவிட்டு செல்லட்டும் என்று ஷைலா விடுத்த வேண்டுகோள்தான் கர்ணா வித்யா நுாலகமாக உருவெடுத்தது.

நுாலகம், ஆடியோ கேசட்டில் பாடங்களை பதிவு செய்துதரும் நுாலகமாகவும்,பின் எம்பி3 பார்மெட்டில் பாடங்களை பதிவு செய்துதரும் டிஜிட்டல் நுாலகமாகவும் இப்போது டெய்சி பார்மெட்டில் பாடங்களை இருந்த இடத்தில் இருந்தே நெட் மூலமாக கேட்பவர்களுக்கு வழங்கும் நுாலகமாகவும் மாறியுள்ளது.
ஷைலா விஸ்வநாதன் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார் முற்றிலும் இலவசமாக சேவை செய்யும் தொண்டுள்ளம் கொண்ட சாந்தி,சுலோச்சனா,பூர்ணிமா,முத்துலட்சுமி சங்கரன்,கீதா அனந்தநாராயணன்,

மாலதி,சுகன்யா,தாரா,மீனா ஆகியோர் உதவியுடன் நுாலகம் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது.இதில் பூர்ணிமாவைத் தவிர மற்றவர்கள் அறுபது எழுபது வயதைத் தாண்டியவர்கள்.
வாரத்தில் ஒரு நாள் தமிழ்நாடு ஆந்திரா,கேரளா,கர்நாடாகவில் இருந்தெல்லாம் மாணவர்கள் கனமான பாட புத்தகங்களுடன் வருவர், அவர்கள் தரும் புத்தகங்களை வாங்கிக்கொண்டு ஒரு காலக்கெடு கொடுத்து திரும்ப வரச்சொல்வர், அவர்கள் திரும்பவரும் போது புத்தகத்தையும் எம்பி3 பார்மெட்டில் உள்ள பாடத்தை சி.டி.,பென் டிரைவ்,மெமரி கார்டில் பதிவுசெய்து கொடுத்துவிடுவர்.இப்படி வரும் மாணவர்களில் பட்டம் படிப்பவர்கள் உயர்கல்வி படிப்பவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என்று பலரும் உண்டு.


வாங்கிய புத்தகங்களை இவர்கள் தங்களுக்குள் பிரித்து எடுத்துக் கொண்டு புத்தகங்களை வீட்டில் கொண்டு போய் படித்து பதிவு செய்து கொள்வர்.
இந்த பதிவு செய்வார்கள் என்ற இடத்தில்தான் இவர்களது சேவை மனப்பான்மை எங்கேயோ போய்விடுகிறது.அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து காற்றாடி ஒடினால் கூட அந்த சத்தம் தொந்திரவாக பதிவாகிவிடுமே என்று காற்றாடியைக்கூட நிறுத்திவிட்டு வீட்டில் உள்ளோர் எழுந்திருக்கும் நேரம் வரை பதிவு செய்வர்.

இப்போது டெய்சி பார்மெட்டிற்காக ரீடிங் சென்டரிலும் வந்து வேலை பார்க்கின்றனர்.பிஎட் படிக்கும் மாணவர்களுக்காக படம் வரைந்து ஓருவர் கோடு போட்டுக்கொண்டு இருக்கிறார்,ஒருவர் ஸ்கேனிங் செய்து கொண்டு இருக்கிறார் இப்படி ஆளாளுக்கு ரொம்பவே பிசியாக இருக்கின்றனர்.
அங்கு இருந்தவர்களிடம் பேச்சு கொடுத்த போது பார்வையற்ற மாணவ சமூகத்திற்கு உதவுவதால் எங்கள் பொழுதுகள் இப்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, முன் எப்போதும் இல்லாத அளவில் மனதில் திருப்தியும் சந்தோஷமும் நிரம்பிவழிகிறது என்கின்றனர்.

நுாலகம் ஆரம்பித்து கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் ஷைலா விஸ்வநாதன் இன்னும் உற்சாகம் அதிகம் வரப்பெற்றிருக்கிறார்.புரூப் ரீடிங் படிக்கக்கூடியவர்கள்,எம்எஸ் வேர்டு,டிடிபி தெரிந்தவர்கள்,தமிழ் டைப் அடிக்கத்தெரிந்தவர்கள் எங்களுக்கு தேவைப்படுகின்றனர், மேலும் புதிய கம்ப்யூட்டர், ஒரிஜினல் சாப்ட்வேர்,புத்தகங்கள் நன்கொடையாக கிடைத்தாலும் ஏற்றுக்கொண்டு இன்னும் அதிகளவில் பார்வையற்ற சமூகத்திற்கு உதவ விரும்புகிறோம் என்றார்.அவருடன் பேசுவதற்கான எண்:9381004365.
-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
23-டிச-201715:04:58 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ அவர்களுக்கான புத்தகங்களை வாசித்து அவர்கள் மனதில் பதியவைக்கும் பல தொண்டுள்ளங்களை பார்த்து இருக்கலாம்.அப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்டவர்தான் ஷைலா விஸ்வநாதன். //// ஆரியரா ? ஆரியர்களுக்குத் தொண்டுள்ளமா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை