ஆர்.கே நகர்: நடிகர் விஷால் வேட்புமனு நிராகரிப்பு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆர்.கே நகர்: நடிகர் விஷால் வேட்புமனு நிராகரிப்பு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Updated : டிச 05, 2017 | Added : டிச 05, 2017 | கருத்துகள் (182)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
நடிகர் விஷால்,Actor Vishal, வேட்பு மனு, nomination,ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்,RK Nagar by election, தேர்தல் அதிகாரி வேலுச்சாமி, Electoral officer Velusamy, அதிமுக,AIADMK,  திமுக,DMK,  ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா,Jayalalitha brother daughter Deepa, வேட்பு மனு  நிராகரிப்பு, Rejection of nomination, தேர்தல்,election, தீபா, Deepa,

சென்னை: ஆர்.கே., நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


மிரட்டல் வந்தது: விஷால் திடுக்

தன்னை முன்மொழிந்த நபர்களுக்கு மிரட்டல் வந்துள்ளதாகவும், இது தொடர்பாக தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்தாகவும், நடிகர் விஷால் திடுக் தகவலை வெளியிட்டுள்ளார். மனு தள்ளுபடி செய்யப்பட்டதும் நடிகர் விஷால் தண்டையார்பேட்டை அலுவலகம் வந்தார். மனு தள்ளுபடி தொடர்பாக காரசாரமாக தேர்தல் அதிகாரியுடன் விவாதித்தார். தொடர்ந்து அவர் தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடத்த துவங்கியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விஷால் கைது செய்யப்பட்டார்.


விஷால் வேட்பு மனு ஏற்புமனு தள்ளுபடி ஏன் ?


வேட்புமனு தாக்கல் செய்த, நடிகர் விஷாலின் மனுவில் தொகுதியை சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும். இதில் முன்மொழியாத முகவரியில் தவறான 2 நபர்கள் பெயர் இடம் பெற்றுள்ளன. இது உண்மைக்கு புறம்பானது என கண்டறியப்பட்டது.இதனையடுத்து மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அறிவித்தார். முன்னதாக விஷாலின் மனுவில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததாக அதிமுக, திமுக தரப்பில் தேர்தல் அதிகாரியிடம் வாதிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.மீண்டும் முறையீடு


சாலை மறியலில் இருந்து விஷால் அப்புறப்படுத்தப்பட்ட பின்பு விஷால் மீண்டும் தேர்தல் அலுவலரிடம் முறையிட்டார். இதனையடுத்து இரவு 8.30 மணியளவில் மனு ஏற்கப்பட்டதாக செய்தியாளர்களுக்கு விஷால் பேட்டியளித்தார்.நிராகரிப்பு:


இந்நிலையில் நீண்ட ஆலோசனைக்கு பின் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் வேலுச்சாமி அதிகாரபூர்வமாக அறிவித்தார். விஷால் தந்த ஆடியோ ஆதாரத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியாது என தேர்தல் அலுவலர் விளக்கமளித்துள்ளார்.


சுயேட்சையை வெற்றி பெற வைப்பேன்:

மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின் செய்தியாளர்களிடம் விஷால் தெரிவித்ததாவது: வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அலுவலகர் கூறிய வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. அங்கிருந்து நான் கிளம்பிய பின் மீண்டும் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்தது அதிர்ச்சி அளிக்கிறது. திரைப்படத்தில் வரும் காட்சிகள் போல் திருப்பங்கள் நிகழ்ந்தது. மக்களுக்கு நல்லது செய்ய வந்தால் இது தான் கதியா. என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவளித்து அவரை வெற்றி பெற வைப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (182)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nachimuthu - mettur,இந்தியா
08-டிச-201714:32:51 IST Report Abuse
Nachimuthu விஷாலை எத்தனியா நாளைக்குத்தான் பெரிய மனிதன் ஆக்குவீர்கள்
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
08-டிச-201705:51:30 IST Report Abuse
Subburamu Krishnaswamy Great escape to Vishaal
Rate this:
Share this comment
Cancel
Prem Kumar - Bangalore,இந்தியா
07-டிச-201719:59:52 IST Report Abuse
Prem Kumar விஷால் வேட்பு மனு நிராகரிப்பிற்கு வழக்கம் போல் "அறிக்கை தலைவர்கள்" அறிக்கைகளை வெளியிட்டு தங்களது தி.மு.க.பக்தியை அதன் தலைவர்களுக்கு உறுதி படுத்துவதில் முந்த பார்க்கிறார்கள். நடந்த உண்மை என்னவெனில், விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொள்வதாக எப்போதுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கவே இல்லை . விஷால் தான் இத்தகைய அறிவிப்பை அதிகாரிகளை சந்தித்தபின் தன்னிச்சையாக வெளியே வந்து கூறினார். ஆங்கில நாளிதழ்களில் கூட அவரது வேட்பு மனு ஏற்பு "nomination papers kept in abeyance" என தெளிவாக்கியுள்ளது.இதற்கு சரியான பொருத்தமான தமிழாக்கம் என்னவெனில் "வேட்பு மனு நிராகரிப்பு தாற்காலிக நிறுத்தி வைப்பு" என்பதுதான். எனவே அறிக்கைகளை வெளியிட பத்திரிக்கைகள் இருக்கின்றன என்பதற்காக அரசாங்க அதிகாரிகள் மீது முறையற்ற வகையில் தாக்குதல் நடத்துவது தவறு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X