கலப்பு திருமண மானியம் பெற வருமான உச்ச வரம்பு... நீக்கம்! தலித்தை திருமணம் செய்தால் ரூ.2.5 லட்சம் கிடைக்கும் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
நீக்கம்!
கலப்பு திருமண மானியம் பெற வருமான உச்ச வரம்பு...
தலித்தை திருமணம் செய்தால் ரூ.2.5 லட்சம் கிடைக்கும்

புதுடில்லி : ஜாதி பிரச்னையை ஒழிக்கவும், கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கவும், தலித்தை திருமணம் செய்யும் கலப்பு மணத்துக்கு வழங்கப்படும், மானியத்துக்கான வருமான உச்ச வரம்பை, மத்திய அரசு நீக்கியுள்ளது. இவ்வாறு கலப்பு மணம் புரிவோருக்கு, மத்திய அரசு, 2.5 லட்சம் ரூபாயை மானியமாக வழங்குகிறது.

 உச்ச நீதிமன்றம், Supreme Court, கலப்பு திருமணம்,  தலித் திருமணம் , Dalit marriage, மத்திய அரசு,Central government, டாக்டர் அம்பேத்கர் கலப்பு திருமணம் ,Dr. Ambedkar mixed marriage, ஹிந்து திருமணச் சட்டம், Hindu Marriage Act,

கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில், 2013ல் கொண்டு வரப்பட்ட, டாக்டர் அம்பேத்கர் கலப்பு திருமணம் மூலமான சமூக ஒற்றுமை திட்டத்தில், 2.5 லட்சம் ரூபாய் மானியத்தை, மத்திய அரசு வழங்குகிறது. இதில், மணப்பெண் அல்லது மணமகனில் யாராவது ஒருவர், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

உத்தரவு


இந்த மானியத்தை பெறுவதற்கான வருமான உச்ச வரம்பு, 5 லட்சம் ரூபாயாக இருந்தது. ஆண்டுக்கு, 500 பேருக்காவது இந்த மானியத்தை வழங்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.கலப்பு மணம் புரியும் தைரியமான முடிவு எடுப்பதை கவுரவிக்கவும், அவர்கள் திருமண வாழ்க்கைக்கு உதவும் வகையிலும், இந்த மானியம் வழங்கப்படுகிறது.

முதல் திருமணத்துக்கு மட்டுமே இது வழங்கப்படுகிறது. மேலும், ஹிந்து திருமணச் சட்டத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

இதற்காக, திருமணமாகி ஓராண்டுக்குள் விண்ணப்பிக்கலாம். தற்போது, இந்த திட்டத்துக்கான வருமான உச்ச வரம்பை, மத்திய சமூக நீதித் துறை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பல்வேறு மாநிலங்களில், கலப்பு மணம் புரிவோருக்கான நிதியுதவிக்கு, எந்த வருமான உச்ச வரம்பும் கிடையாது. ஆண்டுக்கு குறைந்தபட்சம், 500 பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2014 - 15ல், ஐந்து பேருக்கு மட்டுமே நிதி அளிக்கப்பட்டது.

கடந்த, 2015 - 16ல், 522 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில், 72 பேருக்கு வழங்கப்பட்டது. 2016 - 17ல், 736 விண்ணப்பங்களில், 45 பேருக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் இதுவரை பெறப்பட்ட, 409 விண்ணப்பங்களில், 74 பேருக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

பரிந்துரை


குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றாததாலும், போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், குறைந்த எண்ணிக்கை உள்ளவர்களுக்கே, இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.மேலும், வருமான உச்ச வரம்பு ஒரு தடையாக இருப்பதாகவும் கூறப்பட்டது. அதையடுத்து, இந்த நிதியைப் பெறுவதற்கான வருமான உச்ச வரம்பு நீக்கப்பட்டுள்ளது.


ஏமாற்றுவதை தடுக்க, தம்பதியரின் ஆதார் எண்ணும், வங்கிக் கணக்கு எண்ணும் சமர்ப்பிக்க வேண்டும். ஹிந்து திருமணச் சட்டத்தில் பதிவுசெய்தவர்களுக்கு மட்டும் இந்த நிதி வழங்கப்படும். சிறப்பு திருமண சட்டத்தில் பதிவு செய்திருந்தால் வழங்கப்படாது. மேலும், அவர்களுடைய விண்ணப்பத்தை, எம்.பி., அல்லது, எம்.எல்.ஏ., அல்லது மாவட்ட கலெக்டர்பரிந்துரைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

11 சதவீத கலப்பு மணம்


நாட்டில், கலப்பு திருமணம் குறித்த முழுமையான புள்ளி விபரங்கள், ஏதும் தற்போதைக்கு இல்லை. சமூக, பொருளாதார மற்றும் ஜாதி ரீதியில், மத்திய அரசு எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், ஜாதி ரீதியிலான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.


ஒரு ஜாதியில் அல்லது உட்பிரிவுகளில் மட்டும் திருமணம் செய்வதை தவிர்க்கும் வகையிலேயே, கலப்பு மணத்துக்கு நிதி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.'ஜாதி மற்றும் ஒரே ஜாதியில் திருமணம் என்பது ஒன்று தான். கலப்பு மணம் மூலமே, ஜாதிகளை ஒழிக்க முடியும்' என, சட்டமேதை அம்பேத்கர் கூறியதன் அடிப்படையில், கலப்பு மணம் ஊக்கு விக்கப்படுகிறது.

சில ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின்படி, மொத்த மக்கள் தொகையில், 11 சதவீதமே, கலப்பு திருமணமாக அமைந்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மேகாலயா, தமிழகம் ஆகிய மாநிலங்களில், 95 சதவீத திருமணங்கள், அந்தந்த ஜாதிக்குள்ளாகவே நடக்கிறது. பஞ்சாப், சிக்கிம்,கோவா, கேரளாவில், இது, 80 சதவீதமாக உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திராவிடன் - chennai ,இந்தியா
07-டிச-201723:04:02 IST Report Abuse

திராவிடன்தலித்துகள் பிற ஜாதியினரை மனிதாபிமானத்தோடு நடத்தட்டும் அரசு அலுவலங்களில் 60-70% பேர் இவர்கள் தான்

Rate this:
appaavi - aandipatti,இந்தியா
07-டிச-201719:18:36 IST Report Abuse

appaaviஉடனே விவாகரத்து செய்தால் / விட்டு விட்டு ஓடினால் என்ன தண்டனை என்பதையும் கூற வேண்டும்....

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
07-டிச-201717:03:57 IST Report Abuse

Endrum Indianதலித்தை திருமணம் செய்தால் ரூ. 2 .5 லட்சம் முஸ்லிமை திருமணம் செய்தால் சிரியா, ஏமன் நாட்டுக்கு குடியுரிமை (கேரளாவில் இது பிரபலம்).

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X