அயோத்தி விவகாரத்தில் அரசியல் - காங்., மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு Dinamalar
பதிவு செய்த நாள் :
அயோத்தி விவகாரத்தில் அரசியல்
காங்., மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புதுடில்லி : ''ராமர் கோவில் விவகாரத்தை, அரசியல் பிரச்னையாக்குவதாக, எங்களை குறை கூறி வந்த காங்கிரஸ், தற்போது அயோத்தி விவகாரத்தை, அரசியல் பிரச்னையாக்க முயற்சிக்கிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

காங்கிரஸ், Congress, நரேந்திர மோடி,Narendra modi,அயோத்தி, Ayodhya, ராமர் கோவில், Ram Temple, முதல்வர் யோகி ஆதித்யநாத், Chief Minister Yogi Adityanath, பா.ஜ அரசு ,BJP Government, உச்ச நீதிமன்றம் ,Supreme Court, சன்னி முஸ்லிம் வக்ப் வாரியம், Sunni Muslim Waqf Board, கபில் சிபல், Kapil Sibal,அமித் ஷா , Amit Shah, குஜராத் சட்டசபை தேர்தல்,Gujarat assembly election, ஆனந்த் சர்மா, Anand Sharma, அருண் ஜெட்லி,Arun Jaitley, மோடி, Modi,


உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., அரசு உள்ளது. இங்குள்ள அயோத் தியில், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது.நேற்று முன்தினம், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சன்னி முஸ்லிம் வக்ப் வாரியம் சார்பில் ஆஜரான, காங்., மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான, கபில் சிபல்,

'வழக்கின் விசாரணை, 2019 லோக்சபா தேர்தலுக்கு பின், ஒத்தி வைக்க வேண்டும்' என, வலியுறுத்தினார். ஆனால் அதை, உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.

'இது தொடர்பாக, காங்., பதிலளிக்க வேண்டும்'என, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா கூறியிருந்தார். இந்நிலையில், குஜராத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலையொட்டி நடந்த பிரசாரத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:ராமர் கோவில் விவகாரத்தை, பா.ஜ., அரசியல் பிரச்னையாக்குகிறது என, காங்., குற்றஞ்சாட்டியது. ஆனால், காங்., - எம்.பி.,யான, கபில் சிபல், உச்ச நீதிமன்றத்தில், அந்த பிரச்னை குறித்து வாதம் செய்துள்ளார். அவர் வாதம் செய்வதை, நாங்கள் எதிர்க்கவில்லை.

அதே நேரத்தில், 2019 லோக்சபா தேர்தலுக்கு பின், வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்எனக் கூறுவது சரியா; அவர், ஏன் ராமர் கோவிலுக்கும், தேர்தலுக்கும் முடிச்சு போடுகிறார்... ராமர் கோவில் பிரச்னையை, அரசியலுடன் இணைத்து, காங்., பேசி வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

இதை, காங்., ராஜ்யசபா துணைத் தலைவர், ஆனந்த் சர்மா மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:வழக்கு தொடர்பாக, கபில் சிபல் வாதிட்டுள்ளார். அதற்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்போம் என்ற, கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான, அருண் ஜெட்லி, போபால் விஷவாயு கசிவுக்கு காரணமாக, டவ் கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்காக வாதிட்டுள்ளார். இது போல, பா.ஜ.,வில் பலர் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (6)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Snake Babu - Salem,இந்தியா
07-டிச-201714:02:30 IST Report Abuse

Snake Babuஅய்யா தற்போது எல்லாமே அரசியல் தான், சொல் ஒன்று செயல் வேறு, இதுக்கு அந்த கட்சி இந்த கட்சி என்றில்லை. எல்லாருமே ஒட்டு பொறுக்கிகள் தான். என்ன தற்போது பிஜேபி ரொம்ப யோக்யம் என்று பேசுகிறது. அதுதான் தற்போதைய எரிச்சல். வழக்கமாக ஏமாறும் மக்களில் ஒருவனாக. நன்றி வாழ்க வளமுடன்.

Rate this:
senthilkumar - tamilnadu,இந்தியா
07-டிச-201712:32:33 IST Report Abuse

senthilkumarஓட்டுக்கு உளறல் தெளிவாக தெரிகிறது

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
07-டிச-201709:18:38 IST Report Abuse

balakrishnanராமர் கோவில் இவர்களுக்கு ஒரு அடையாளத்தை தந்தது

Rate this:
Mariappa T - INDORE,இந்தியா
07-டிச-201700:38:50 IST Report Abuse

Mariappa Tமோடி ஜி நீங்களும் வடிவேலா மாறியது எப்போ? நாங்கள் அப்போவே சொன்னோம் குஜராத் போவாதீங்க போவாதீங்க என்று பலமுறை சொன்னோமே கேக்காமல் இப்போ இப்படி புலம்புகிறீர்களே. சின்ன பிள்ளைக்கும் கூட தெரியும் பிஜேபி தேர்தல் சமயத்தில் அயோத்தியை கைல் எடுக்கும் என. செய் இல்லை சாவு என்கிற நிலைமை வந்து விட்டது. அதற்க்காக இப்படியா காங்கிரஸ் மேல் பழி போடுவது.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
07-டிச-201700:24:57 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்அயோத்தி பிரச்சினையில் காங்கிரஸ் அரசியல் பண்ணா, காவி காங்கிரஸ் தங்களின் வழக்கப்படி வன்முறை அரசியல் பண்றாங்க. அவ்வளவு தான்..

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
07-டிச-201700:21:49 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்இன்னொரு கலர் தொப்பி..

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement