ஜெ., மரண விசாரணை: தீபாவுக்கு, 'சம்மன்' Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., மரண விசாரணை
தீபாவுக்கு, 'சம்மன்'

சென்னை : ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில் ஆஜராகும்படி, ஜெ., அண்ணன் மகள், தீபாவுக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க,A.D.M.K, ஜெயலலிதா, Jayalalithaa,விசாரணை கமிஷன்,Investigation Commission,  ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, Jayalalitha daughter daughter Deepa, நீதிபதி ஆறுமுகசாமி, judge Arumugasamy, உயர் நீதிமன்றம்,Supreme Court, டாக்டர் சரவணன்,Dr. Saravanan,  மாதவன் ,Madhavan, தேர்தல் கமிஷன்,Election Commission,  ஜெயலலிதா கைரேகை ,  Jayalalitha fingerprint,

ஜெ., மரணத்தில் மறைந்துள்ள சந்தேகங்கள் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது.

விளக்கம்


இந்த விசாரணை கமிஷன் முன், இதுவரை, தி.மு.க., மருத்துவ அணித் தலைவர், டாக்டர் சரவணன், முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குனர், விமலா... ராஜிவ் காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர்,

நாராயணபாபு, மயக்கவியல் துறை பேராசிரியர், கலா, உதவி பேராசிரியர், முத்துச்செல்வன் ஆகியோர் ஆஜராகி, விளக்கம் அளித்துள்ளனர்.இந்த விசாரணையில், அரசு டாக்டர் டிட்டோ, தீபா கணவர், மாதவன் ஆகியோர், நேற்று ஆஜராகி விளக்கம்அளித்தனர். அதைத் தொடர்ந்து, 13ம் தேதி காலை, 10:30 மணிக்கு ஆஜராகும்படி, தீபாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

விசாரணை குறித்து, மாதவன் கூறியதாவது: சென்னையில், 2016 செப்., 21ல், விமான நிலையம் - சின்னமலை இடையே, மெட்ரோ ரயில் திட்டத்தை, முதல்வர் ஜெ., துவக்கி வைத்தார். அதன்பின், ஜெ., வெளியே வரவில்லை; அதிகாரிகளையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு, அப்போதே ஏதோ நடந்திருக்க கூடும் என, சந்தேகம் எழுகிறது.

நீதிபதி, வைத்திலிங்கம் கூட,'ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது' என, தெரிவித்துஇருந்தார்.அந்த விபரங்களை விசாரணையின் போது, நீதிபதி ஆறுமுகசாமியிடம், நான் குறிப்பிட்டேன். மீண்டும், 15ம் தேதி ஆஜராக உத்தரவிட்டு உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

அரசு டாக்டர் இன்று ஆஜர்
திருப்பரங்குன்றம், தஞ்சை, அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிகள் தேர்தலில் போட்டியிட்ட, அ.தி.மு.க., வேட்பாளர்களுக்காக, தேர்தல் கமிஷனில் அளித்த படிவங்களில், ஜெ., கைரேகை பதிவு செய்யப்பட்டது. தன் முன்னிலையில் தான் கைரேகை பதிவு செய்யப்பட்டதாக, அரசு மருத்துவர், பாலாஜி சாட்சியம் அளித்திருந்தார். இதன்படி, விசாரணை கமிஷன் முன் ஆஜராகும்படி, பாலாஜிக்கு, சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அவர், இன்று ஆஜராகிறார்.


Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
07-டிச-201706:09:57 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>ennaadi neeyum unsin aththaikkuthunaiyaa poporiyaa enjay

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-டிச-201700:28:55 IST Report Abuse

தமிழ்வேல் பாலாஜி சொல்றத நாங்க தெரிஞ்சிக்கலாமா ?

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X