தினகரனுக்கு ஆரத்தி எடுக்க ரூ.500; வாங்க மறுத்த ஆர்.கே.நகர் பெண்கள் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தினகரனுக்கு ஆரத்தி எடுக்க ரூ.500
வாங்க மறுத்த ஆர்.கே.நகர் பெண்கள்

ஓட்டுக்கு வழங்கிய, 4,000 ரூபாயை திருப்பி கேட்டதால், கோபத்தில் இருக்கும், ஆர்.கே.நகர் பெண்கள், 500 ரூபாய் தருவதாக கூறியும், தினகரனுக்கு ஆரத்தி எடுக்க மறுத்துள்ளனர்.

ஆர்.கே.நகர் தேர்தல் ,RK Nagar election, டி.டி.வி. தினகரன்,TTV Dinakaran, ஆர்.கே.நகர் பெண்கள்,RK Nagar women, இடைத்தேர்தல் ,  by-elections,  சசிகலா,Sasikala, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, தேர்தல் கமிஷன்,Election Commission, சுயேச்சை, தினகரன், Dinakaran,

சென்னை, ஆர்.கே.நகரில், ஏப்ரல் மாதம், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது, சசிகலா அணி சார்பில், தினகரன் போட்டியிட்டார். தினகரனுக்கு ஆதரவாக, முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் என, பலரும் தேர்தல் பணி செய்தனர்.

அந்த தேர்தலில் வெற்றி பெற்று, கட்சி, ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக, தினகரன் தரப்பு, அரசு இயந்திரங்களை பயன்படுத்தி, ஒரு ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வரை, பண பட்டுவாடா செய்தது. இதுதொடர்பாக எழுந்த புகாரால், தேர்தல் கமிஷன், இடைத்தேர்தலை ரத்து

செய்தது. பின், பன்னீரும், பழனிசாமியும் ஒன்றிணைந்து, சசிகலா, தினகரனை ஓரங்கட்டினர். எனவே, தினகரன் ஆதரவாளர்கள், ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு வழங்கிய பணத்தை, திரும்ப கேட்டு தொல்லை செய்துள்ளனர்.இதனால் பெண்கள், தினகரன் தரப்பு மீது, கோபத்தில் இருந்தனர்.

இந்நிலையில், 21ல், ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இப்போது, சுயேச்சையாக போட்டியிடும் தினகரனுக்கு, ஆரத்தி எடுக்குமாறு, பெண்களை சந்தித்து, அவரது ஆட்கள் கூறியுள்ளனர். அதற்கு, அந்த பெண்கள் மறுத்து உள்ளனர்.

இது குறித்து, ஆர்.கே.நகர் பகுதிவாசிகள் கூறியதாவது:இந்த தொகுதியில் உள்ள சூரியநாராயணா தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், தினகரன் போட்டியிட்ட, 'தொப்பி' சின்னத்திற்கு ஓட்டளிக்குமாறு கூறி, ஒரு ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வீதம் வழங்கினர்.

அவர்களை தேடி சென்று, யாரும் பணம் கேட்கவில்லை. அவர்களாக தான் வந்து, பணம் தந்தனர். சிலர், அந்த பணத்தை, வாங்க மறுத்தனர்.தேர்தல் ரத்தான சில நாட்களில், பணம் வழங்கியவர்கள் வந்து, ஓட்டு போட கொடுத்த பணத்தை தருமாறு, திரும்ப கேட்டனர். யாரும் தராததால், திட்டி விட்டு

Advertisement

சென்றனர்.தற்போது, தேர்தல் நடக்க இருப்பதால், சிலர், 'தினகரனுக்கு சின்னம் ஒதுக்கியதும், பிரசாரத்திற்கு வர உள்ளார்; அப்போது, அவருக்கு, ஆரத்தி எடுக்க வேண்டும்; 500 ரூபாய் தருகிறோம்' என, தெரிவித்தனர்.

ஏற்கனவே, 4,000 ரூபாயை திரும்ப கேட்டதுபோல், ஆரத்தி எடுக்க தருவதாக கூறும் பணத்தையும், திரும்பி கேட்க வாய்ப்புள்ளது.இதனால், அவர்கள் தரும் பணத்தை வேண்டாம் என்று கூறி, திருப்பி அனுப்பி விட்டோம். யாரிடமும் பணம் வாங்காமல், மனசாட்சிப்படி ஓட்டு போட உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.Navarajan - Coimbatore ,இந்தியா
09-டிச-201722:24:08 IST Report Abuse

A.Navarajanதினகரன் கூறியது போல் இப்போதுள்ள அரசியலில் யாரும் காந்தியின் பேரன் கிடையாது. எல்லோருமே கேடுகெட்டவர்கள் தான்.

Rate this:
Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா
08-டிச-201716:50:57 IST Report Abuse

Tamizhan kanchiமத்து கணேஷே ஆயிரம் கொடுக்காவொ இந்த ஐயா ரண்டாயிரமா கொடுத்தா தெனமும் ஆரத்தி.யெடுப்போம்லா..

Rate this:
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
07-டிச-201721:57:09 IST Report Abuse

BebetoT T V தினகரன் ஓட்டுக்கு 4000 Rs பணம் கொடுத்து ஒட்டு கேட்டதால் இந்த R K நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.. இதே TTV மறுபடியும் போட்டி இடுகிறார்.இவருக்கு வெட்கம் மானம் சூடு சொரணை கிடையாதா? கொலைகார குடும்பம்.

Rate this:
மேலும் 48 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X