ஆர்.கே.நகர் பிரசாரத்தில் தி.மு.க., வேட்பாளர்...  விரக்தி! Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள், பிரசார களத்திற்கு வராததால், தி.மு.க., வேட்பாளர், மருதுகணேஷ், விரக்தி அடைந்துள்ளார். தி.மு.க.,வுடன் கைகோர்த்த தலைவர்கள், வெறும் அறிவிப்போடு உறவை நிறுத்தியதால், ஒட்டுமொத்த, தி.மு.க.,வினரும் சோகம் அடைந்துள்ளனர்.

 தி.மு.க,DMK, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், RK Nagar By-election,மருதுகணேஷ், Maruthu ganesh,அ.தி.மு.க,AIADMK,  மதுசூதனன்,Madhusudhanan, பா.ஜ.,BJP, கரு.நாகராஜன், karu Nagarajan, சுயேச்சை, தினகரன் ,Dinakaran,  பன்னீர்செல்வம்,Panneerselvam,  பழனிசாமி, Palanisamy,  தேர்தல் கமிஷன், Election Commission, இரட்டை இலை, irattai ilai, திராவிட முன்னேற்றக் கழகம்,Dravida Munnetra Kazhagam, D.M.K,

சென்னை, ஆர்.கே.நகரில், வரும், 21ல் இடைத்தேர்தல் நடக்கிறது. அதில், தி.மு.க., சார்பில் மருதுகணேஷ்; அ.தி.மு.க., சார்பில் மதுசூதனன்; பா.ஜ., சார்பில் கரு.நாகராஜன்; சுயேச்சையாக தினகரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். பன்னீர்செல்வமும், பழனி சாமியும் ஒன்றிணைந்ததால், அவர்களுக்கு, தேர்தல் கமிஷன், இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது. இது, அ.தி.மு.க., தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதால், அவர்கள், தேர்தல் பணியில் சுறுசுறுப்பாக உள்ளனர்.

பழனிசாமி அரசு மீது, மக்களிடம் நிலவும் அதிருப்தியை சாதகமாக பயன்படுத்தி, இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கருதுகிறார். ஏப்., மாதம், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டபோது போட்டியிட்ட, மார்க்சிஸ்ட் கட்சியும், தேர்தலை புறக்கணித்த விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், தற்போது, தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்துள்ளன.

கட்டாயம்


தி.மு.க.,வை தொடர்ந்து விமர்சித்து வந்த, ம.தி.மு.க., வும், அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், ஏற்கனவே கூட்டணியில் இருந்த, காங்., முஸ்லிம் லீக் கட்சிகளுடன் சேர்த்து, தற்போது, தி.மு.க.,வின் கூட்டணி பலம் அதிகரித்துள்ளது. இதனால், தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம், ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது.

மருதுகணேஷ், தினமும், ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, ஓட்டு சேகரித்து வருகிறார். அவருடன், உள்ளூர் மற்றும் சென்னை உட்பட, பிற பகுதிகளில் இருந்து வந்துள்ள, தி.மு.க., தொண்டர்கள் மட்டுமே பிரசாரம் செய்கின்றனர்.

ஆனால், அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள, கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் வருவது இல்லை. இது குறித்து, ஆர்.கே. நகர் தி.மு.க.,வினர் கூறியதாவது:போலி வாக்காளர்கள் நீக்கம்; சொந்த ஓட்டு வங்கி; கூட்டணி கட்சிகளின் ஓட்டு; தினகரன் பிரிக்கும், அ.தி.மு.க., ஓட்டு ஆகியவை, தி.மு.க.,வின் வெற்றிக்கு சாதகமாக உள்ளன.

நம்பிக்கை


காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ., ம.தி.மு.க., மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளில் இருந்து, ஒரு கட்சிக்கு, மூன்று பேர் என்று, பிரசாரத்திற்கு வந்தால்கூட, ஒவ்வொரு பகுதியில் உள்ள, அவர்களின் ஆதரவாளர்களின் ஓட்டுகள், தி.மு.க.,வுக்கு கிடைக்கும்.
தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள், வேட்பாளருடன், தினமும் பிரசாரத் துவக்கத்தின்போது வருகின்றனர்; சிறிது நேரத்தில் காணாமல் போய் விடுகின்றனர். அவர்கள், தங்கள் கட்சி கொடிகளை, தி.மு.க., தொண்டர்களிடம் வழங்கி விட்டு செல்கின்றனர்.

அந்த கட்சிகளின் தலைவர்களும், தங்கள் கொடிகளை பார்த்து, தன் கட்சி தொண்டர்கள், பிரசாரத்தில் ஈடுபடுவதாக நினைத்து கொள்கின்றனர். தி.மு.க., தலைமையும், அதை நம்புகிறது.தி.மு.க.,விலும், மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகளும், முழு வீச்சில் பிரசாரம் செய்வதில்லை. நீண்ட நாட்களுக்கு பின், தி.மு.க.,வுக்கு கிடைத்துள்ள பலமான கூட்டணி, தலைவர்கள் மட்டத்தில் தான் உள்ளது.

விடுதலை சிறுத்தை மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், தொகுதியில் கணிசமான ஓட்டு வங்கி உள்ளது.எனவே, கூட்டணி தலைவர்கள் ஒன்றாக, பொதுக் கூட்டங்களில் தோன்றுவதற்கு பதில், பகுதிதோறும் பிரசாரம் செய்ய வேண்டும். தங்கள் தொண்டர்களையும், பிரசார பணிகளில் முடுக்கி விட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தேர்தல் அதிகாரி மாற்றம் தி.மு.க., கூட்டணி திட்டம்


நடிகர் விஷால், வேட்புமனு தள்ளுபடி செய்த விவகாரத்தில், தேர்தல் அதிகாரி மீது, .மு.க.,வுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஆளுங்கட்சி உத்தரவின்படி தான், வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக, தி.மு.க., தரப்பில் கருதப்படுகிறது.

Advertisement

எனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடப்பதற்கு முன், தேர்தல்அதிகாரியை மாற்ற வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள், நேற்று வலியுறுத்தியுள்ளன.எனவே, தேர்தல் அதிகாரியை மாற்றும் முயற்சியை, சட்டரீதியாக மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்த, டிச., 11ல், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் தலைமையில், கூட்டணிக் கட்சிகள் கூட்டம் நடக்கவுள்ளது.

இது குறித்து, ஸ்டாலின் அளித்த பேட்டி: டிச., 7ல், அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்த, ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மழை எச்சரிக்கை காரணமாக, அக்கூட்டம், டிச., 11க்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த கூட்டத்திற்கு பின், ஆர்.கே.நகரில் பிரசாரத்தை துவக்குவோம். தேர்தலை, தேர்தல் கமிஷன் நடுநிலையுடன் நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டணி கட்சிகள் கூட்டம் தி.மு.க., திடீர் ஒத்திவைப்பு


இன்று நடக்க இருந்த, தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் கூட்டம், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை மற்றும், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ காரணமாக, அக்கூட்டம், 11ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

ஆளுங்கட்சியின் சார்பில் தேர்தல் பிரசாரம் குறித்த ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 9ம் தேதி, ஆர்.கே.நகரில் தேர்தல் பணிமனை திறக்கப்பட உள்ளது. ஆனால், தி.மு.க., சார்பில், இந்த வேலைகள் எதுவும் துவங்கப்படவில்லை.

இதற்கிடையில், சென்னையில், இன்று நடக்கவிருந்த, தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டமும், 11க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதால், அக்கட்சியினர் சோகமடைந்துள்ளனர்.இது குறித்து, தி.மு.க.,வினர் கூறியதாவது:கடைசி நேரத்தில், ம.தி.மு.க., ஆதரவு அளித்துள்ளதால், அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோவும், கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என, தி.மு.க., தலைமை விரும்புகிறது.

ஆனால், கன்னியாகுமரி, தென்காசி போன்ற இடங்களில், வைகோ பங்கேற்கும் நிகழ்ச்சிகள் இருப்பதால், இப்போது வர முடியாது என்றும், 11ம் தேதிக்கு தள்ளி வைக்கும்படியும் கூறியுள்ளார்.அதோடு, புயல் எச்சரிக்கை விடப்பட்டிருந்ததால், சென்னையில் மழை கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வைகோ வருகை மற்றும் மழை எச்சரிக்கை காரணமாக, இன்றைய கூட்டம் ரத்து செய்யப்பட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திராவிடன் - chennai ,இந்தியா
07-டிச-201722:52:32 IST Report Abuse

திராவிடன்மெகா கூட்டணி ஐயோ பாவம் இவ்வளவு நாள் காங்கிரஸ் மட்டும் தான் தி மு க தோளில் சவாரி செய்தது இப்போ பல கட்சிகளுக்கு வாய்ப்பு

Rate this:
balasubramanian - coimbatore,இந்தியா
07-டிச-201721:07:59 IST Report Abuse

balasubramanianதோழமைக்கட்சிக்கு எந்த ஆதாயமும் இல்லாதபோது அவர்கள் பிரச்சாரத்திற்கு வருவார்கள் என்று எதிர் பார்க்கக்கூடாது .திமுக தொண்டர்கள் முழு வீச்சில் உழைத்தால் திமுகவின் வெற்றி நிச்சயம்.

Rate this:
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
07-டிச-201718:14:32 IST Report Abuse

நந்தினி திவ்ய பாரதிமுதல்லா வச்ச எலெக்சனுக்கு தள்ளிபோட்ட பிறகு இவிங்ளாம் அப்டீ போயி போட்டாங்கலாமா. செகண்ட் தடவையா அபிருமா எலெக்சன்னு அப்டின்னு சொன்ன பிறகுதா சேவையா சர்வீஸ் பண்ண வந்துருக்கங்கலாமா. நடுவூளா காணாமலே போயி போயிட்டாங்கலாமா அல்லாருமே.

Rate this:
Jeeva - virudhunagar,இந்தியா
07-டிச-201718:09:23 IST Report Abuse

Jeeva dmk waste

Rate this:
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-டிச-201717:53:08 IST Report Abuse

Sriram VPeople should not allow DMK to win this election, we still remember how DMK was looting people with corrupt politicians and officials

Rate this:
Sanjay - Chennai,இந்தியா
07-டிச-201717:52:42 IST Report Abuse

Sanjayசுடலை பாவம்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
07-டிச-201717:13:14 IST Report Abuse

Endrum Indianமருது கணேஷ் வெற்றி பெற்றால் ஈ.வி.எம் பற்றி வாயே திறக்காது இந்த தி.மு.க. தோல்வியுற்றால் ஈ.வி.எம். மோடியின் ஆணையின் படி மாற்றி அமைக்கப்பட்டது, தி,.மு.க பட்டன் அழுத்தினால் கூட அதில் அ.தி.மு.க 1 வோட்டு, பி.ஜெ.பி 2 வோட்டு வருகின்றது என்று விளக்கம் தருவார்கள்.

Rate this:
Prem - chennai,இந்தியா
07-டிச-201717:10:24 IST Report Abuse

PremKootani aatharavu mattum vechi onnum panna mudiyathu makkal balam tha mukiyam

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
07-டிச-201717:09:00 IST Report Abuse

Endrum Indianகவலை வேண்டாம் மருது கணேஷ், வெற்றி தோல்வி வாழ்க்கையில் சகஜம் என்று உணர்.

Rate this:
RENETO - Chennai,இந்தியா
07-டிச-201717:04:19 IST Report Abuse

RENETONeenga thorka porenu therinchu than yarume unaku support panna mattranga.. unga total katchiye oolal & fraud katchi thana

Rate this:
மேலும் 84 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement