புயல் ஆபத்தில் தப்பியது சென்னை - 9 துறைமுகங்களுக்கு எச்சரிக்கை Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
புயல் ஆபத்தில் தப்பியது சென்னை
9 துறைமுகங்களுக்கு எச்சரிக்கை

'வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், தமிழகத்திற்கு புயல் ஆபத்து இல்லை' என, வானிலை மையம் கூறிஉள்ளது. ஆனால், ஒன்பது துறைமுகங்களில், புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

 புயல்,Storm, கனமழை, Heavy rain,வானிலை மையம்,Meteorological Center, வங்கக் கடல், Bengal Sea, துறைமுகம்,harbor, அந்தமான்,Andaman,  காற்றழுத்த தாழ்வு மண்டலம் , Atmospheric inferior zone, ஒக்கி புயல், okki storm, ஆந்திரா ,Andhra Pradesh, ஒடிசா,Odisha, மீனவர்கள்,fishermen, Weather, சென்னை,Chennai,

வங்கக் கடலில், அந்தமான் அருகே, நவ., 28ல் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நவ., 30ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என, கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்திய பெருங்கடலில், இலங்கை அருகே, திடீரென புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, 'ஒக்கி' புயலாக மாறியது. அதனால், அந்தமான் அருகில் இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அதே இடத்தில் நீடித்து வந்தது.

ஒக்கி புயல், நேற்று முன்தினம் கரையை கடந்த நிலையில், இந்த காற்றழுத்த பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று வலுவடைந்தது.

இது நாளை, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என, கணிக்கப்பட்டுள்ளது.இது, நேற்று மாலை நிலவரப்படி, சென்னைக்கு கிழக்கே, 800 கி.மீ., துாரத்திலும், ஆந்திராவின்மசூலிப்பட்டினத்துக்கு தென் கிழக்கில், 1,000 கி.மீ., துாரத்திலும் மையம் கொண்டிருந்தது. இந்த மண்டலம், இன்று முதல், ஆந்திரா மற்றும் ஒடிசாவுக்கு இடையே, கடற்கரையை நோக்கிநகரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலச்சந்திரன் கூறியதாவது:காற்றழுத்த தாழ்வு மண்டலம், வட மேற்கு திசையில், ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும். கரையை நெருங்கும்போது, வலுவிழக்கும். அதனால், தமிழகத்திற்கு புயல் ஆபத்து எதுவும் இல்லை. சென்னையில், சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, சென்னை, கடலுார், நாகை, காட்டுப்பள்ளி, பாம்பன், எண்ணுார், துாத்துக்குடி, காரைக்கால், புதுச்சேரி ஆகிய ஒன்பது துறைமுகங்களில், ஒன்றாம் எண்புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் மற்றும் குளச்சல் துறைமுகங்களுக்கு, எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழகம், புதுச்சேரியில் வடக்கு கடலோர பகுதிகளில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.ஆந்திரா மற்றும் ஒடிசாவின் தெற்கு கடலோர மாவட்டங்களுக்கு, கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும்போது, கடல் சீற்றமாக காணப்படும். வட கிழக்கில் இருந்து, தமிழகம், புதுச்சேரி கடற்பகுதியில், 55 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும்.எனவே, மீனவர்கள், நாளை வரை, வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதிக்கு, மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது. கடலுக்குள் இருக்கும் மீனவர்களும், உடனடியாக கரைக்கு திரும்ப, வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand K - chennai,இந்தியா
07-டிச-201710:13:28 IST Report Abuse

Anand K2015 எற்பட்ட புயல், வெள்ளம் சென்னை வாசிகள் குறிப்பாக தாம்பரம் , போரூர் அசோக் நகர் திநகர் சைதாப்பேட்டை கோட்டுர்புரம் வாழ்ந்த மக்கள் தன் வாழ்நாளில் சம்பாதித்த அனைத்தும் இழந்தனர் ஆனால் உறவினர் மற்றும் மாமன் மச்சான் நன்பர்கள் செய்த உதவியினால் மீண்டனர் பின் 2016 வந்த வார்தா புயலால் மிண்டும் பாதிப்புக்கு உள்ளனார் ஆக மீண்டும், ஒரு புயலை தாக்கு பிடிக்க 2017 மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு அவரவர் சொந்த ஊருக்கு பயணமாவது நல்லது. குறிப்பாக சுய தொழில் செய்தவர் அதிகம் பாதிப்புக்கு தள்ள பட்டனர் வெலைக்கு செல்பவர்க்கு சம்பளம் வந்து விட்டது சுய தொழில் செய்தவர் பலர் வாழ்க்கை கேள்வி குறியானாது

Rate this:
பிரேமானந்தா சாமியார் - perth,ஆஸ்திரேலியா
07-டிச-201708:48:39 IST Report Abuse

பிரேமானந்தா சாமியார் அரசுக்கு தான் அக்கறை இல்லை ...நாமளாவது சென்னையை சற்று வெள்ளபெருகில் இருந்து விடுவித்து வைப்போம் என்று புயலே சென்னைவாசிகள் மீது பாவம் பார்த்து /நினைத்து வேறு பக்கம் சென்றுவிட்டது போல

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
07-டிச-201704:39:31 IST Report Abuse

Kasimani Baskaranவருடக்கடைசியில் புயல் வருவது இப்பொழுது சர்வ சாதாரணமாகிவிட்டது...

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X