கம்பீரமாக களம் புகுந்த விஷால்! வெளியேறினார் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கம்பீரமாக களம் புகுந்த விஷால்!
வெளியேறினார்

ஆழம் தெரியாமல், அரசியலில் காலை விட்ட, நடிகர் விஷால், ஆர்.கே.நகரை விட்டு வெளியேறினார்.

விஷால்,Vishal, ரஜினி, Rajini, கமல்ஹாசன், Kamal Hassan,ஆர்.கே.நகர் தேர்தல்,RK Nagar Election,ராஜேஷ் லக்கானி, Rajesh Lakhani,சுயேச்சை,  நடிகர் சங்கத் தேர்தல்,Actor Association Election,  தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ,Producers Association Election,  ஆப்பரேஷன் கெட் அவுட், Operation Get Out,சண்டக்கோழி, Sandakoli,

திரையுலகில், பெரும் ரசிகர் படையை பெற்றுள்ள ரஜினி, அரசியலில் இருக்கும் ஆபத்தை அறிந்து, 'நமக்கெதுக்கு பொல்லாப்பு' என, இமயமலை ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறார்.கமல்ஹாசனோ, புலி வருது கதையாக, கட்சி துவங்குவதாக அறிவித்து, புரியாத பாஷையில் பேசுவதும், எழுதுவதுமாக இருக்கிறார். இருந்த, 'உலக நாயகன்' பட்டத்தை இழந்து, 'டுவிட்டர்' நாயகனாக, கேலிக்கு ஆளாகி இருக்கிறார்.

ரசிகர் பலமுடைய ரஜினியும், கமலும், அரசியலில் காலை விட, உதறலில் இருக்கும் போது, 'சண்டக்கோழி' போல, திடுதிப்பென சிலுப்பிக் கொண்டு, ஆர்.கே.நகரில், ஆழம் தெரியாமல் காலை விட்டார், விஷால். சமீப காலமாக, 'பிளாப்' படங்களை வரிசையாக அடுக்கி வரும் விஷால், நடிகர் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் போல், அரசியலை அவ்வளவு லேசாக நினைத்து விட்டார். ஆர்.கே.நகரில், 200 பைக்குகளில், ரத, கஜ, துரக, பதாதிகளோடு, கம்பீரமாக வலம் வந்து, வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஆனானப்பட்ட ரஜினியே, பட விழாவில் மட்டும் அரசியல் பேசுவதோடு நிறுத்திக் கொள்ளும் போது, விஷாலின் அரசியல் ஆசையை கண்டு, தயாரிப்பாளர்கள் சிலர், 'அடப்பாவமே... இந்தாளுக்கு என்னாச்சு...' என, பரிதாபப்பட்டனர். அப்போதே, உஷாராயிருக்க வேண்டாமா! திரையுலக தேர்தல்கள் தந்த மமதையில், ஆர்.கே.நகரில் கொடி நாட்டலாம் என்று. சில சுள்ளான்களை நம்பி, ஜபர்தஸ்து காட்டினார்.

பைக்கில் இருந்து இறங்கியதும், 'தோரணை'யாக, தேர்தல் அலுவலகம் நுழைந்த விஷால், வரிசையில் நிற்காமல் நேராக, தேர்தல் அதிகாரியிடம் மனுவை நீட்டினார்.அங்கிருந்த சுயேச்சை வேட்பாளர்களோ, 'தம்பி, லைன்ல நில்லுப்பா...' என, 'சவுண்டு' விட்டு, அரசியலில், பால பாடத்தை கற்பித்தனர்; பல மணி நேரம், 'தேவுடு' காக்க வைத்தனர். அந்த நேரத்திலாவது, 'இதுக்கு, நாம சரிப்பட்டு வர மாட்டோம்' என, அவர் முடிவெடுத்திருக்க வேண்டாமா!

இது போதாது என்பது போல், வேட்புமனு பரிசீலனை நடந்த, நேற்று முன்தினம், 'அரசியல் ஆப்பு' தயாராக இருப்பது தெரியாமல், பிரசாரத் திட்டத்தை, வீட்டில் வகுத்து கொண்டிருந்திருக்கிறார், பாவம்.கற்றுத் தந்த உடன்பிறப்புகளுக்கு, 'தண்ணி காட்டும்' அளவுக்கு வளர்ந்துள்ள ரத்தத்தின்

ரத்தங்கள், 'ஆப்பரேஷன் கெட் அவுட்' நடவடிக்கையை, கச்சிதமாக சாதித்தனர். விளைவு, விஷால் மனு தள்ளுபடியானது; விக்கித்து போனார்.

தொண்டை வரை அடைத்த துக்கத்தை மறைத்து, கொக்கரிக்க முடியாத சண்டக்கோழியாக, தன் அடிப்பொடிகளுடன் சாலையில் அமர்ந்தார். விடுவரா போலீசார்... ரோட்டோர திண்ணைக்கு, விஷால் வகையறாக்களை, 'தரதர'வென இழுத்து போட்டனர்!

பள்ளியில், 'டிரில்' மாஸ்டரிடம் அடி வாங்கிய, ஒண்ணாம் வகுப்பு குழந்தைபோல், அங்கிருந்து ஓடிப் போன விஷால், வீட்டுக்கு போய் சொந்தங்களை கூட்டி வருவதை போல், மொபைல் போனில், யாரோ சிலர் பேசியதை, ஆதாரமாக எடுத்துக் கொண்டு, தேர்தல் அலுவலகத்திற்கு ஓடோடி வந்தார்.

தேர்தல் அதிகாரி ஏதோ கூற, அதை, 'ஷூட்டிங் ஸ்பாட்'டில், உதவி டைரக்டர் சொல்வதை காது கொடுத்து கேட்காத நாயகன் போல், தவறாக புரிந்து, வெளியே வந்து, மனு ஏற்கப்பட்டதாக உளறி கொட்டினார்.

ஆனால், மகளிர் அணி நிர்வாகி ஒருவரின் மகளான, சுமதி மற்றும் பிரபல ரவுடியான, 'பாக்ஸர்' வடிவேலுவின் மகன், தீபன் ஆகியோரின் கையெழுத்து, போலியாக போடப்பட்டிருப்பதை, அ.தி.மு.க.,வினர், தேர்தல் அதிகாரியிடம் புட்டு வைத்தனர்.

அதனால், நடிகரின் மகிழ்ச்சி, அவரது சமீபகால திரைப்படங்கள், டப்பாவுக்கு திரும்பும் வேகத்தை மிஞ்சும் விதத்தில், 'புஸ்'ஸானது. தேர்தல் அதிகாரி, உண்மையை அறிந்து, விஷால் மனுவை தள்ளுபடி செய்தார்.

குச்சி மிட்டாய்க்கு, அழும் குழந்தையாக மாறிப் போன விஷால், 'ப்ளீஸ் சார்... மனுவை ஏத்துக்குங்க' என, தேம்பினார். இரவு, 11:00 மணியான நிலையில், தேர்தல் அதிகாரியோ, 'எந்த பக்குவமும் இல்லாத ஆளா இருக்காரே...' என, தனக்குள் புலம்பியபடி, கடையை பூட்டி நடையைக் கட்டினார்.

சண்டக்கோழியோ, அது புரியாமல், 'சுயேச்சை வேட்பாளரை, 'சப்போர்ட்' பண்ணி, அவரை ஜெயிக்க வைப்பேன்' என்றது. சுற்றி இருந்த மக்களோ, 'இதை, 50 வருஷமா, வேற வேற, 'டப்பிங் வாய்ஸ்'ல கேட்டுட்டு இருக்கோம்.

இந்த புள்ளைக்கி பாவம், படிவம் கூட, நிரப்ப தெரியல. இதுல, 'கிச்சுகிச்சு' வேற... வந்துட்டாரு, மக்களைக் காப்பாத்த' என, தலையில் அடித்தபடி, கலைந்து சென்றனர்.அடுத்த அரசியல் தளபதியாக, வீராப்புடன் தொகுதிக்கு வந்த விஷால், 'வட போச்சே...' என்ற வடிவேலு ரேஞ்சில்,வீட்டுக்கு நடையை கட்டினார்.

தொடரும் அறியாமை


வேட்புமனு விவகாரத்தில், 'ரீல்' அறுந்த போதிலும், விஷாலின் அறியாமை, நேற்றும் தொடர்ந்தது. இம்முறை, ஜாகை மாறியது. தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானியிடம், சென்னை, தலைமைச் செயலகத்தில், தன் கதையை சொல்லி புலம்பிய விஷால்,

Advertisement

அதற்கான மனுவை கொடுத்தார். அவர் போன பின், மனுவை பார்த்த லக்கானிக்கு, தலை சுற்றியது.
சென்னை, கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் கமிஷனரின் பெயருக்கு, புகார் மனுவை, விஷால் எழுதியிருந்தார். அவர், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய அதிகாரி என்பது கூட, நடிகருக்கும், அவரது ஆட்களுக்கும் தெரியவில்லை. இவர் தான், அரசியலுக்குள் புகுந்து, நாட்டுக்கு நல்லது செய்ய போகிறாராம்!

அதுவே கமலாக இருந்திருந்தால்...!


வேட்புமனு விவகாரத்தில், நடிகர் விஷாலுக்கு ஏற்பட்ட அனுபவமே, இந்தளவுக்கு, என்றால், அதுவே கமல், மனு தாக்கல் செய்திருந்தால், மிகப்பெரிய நகைச்சுவை காட்சியாக, அது அமைந்திருக்கும் என்கின்றனர்.அதுபற்றி, சமூக வலைதளத்தில் இடம்பெற்ற பதிவு:விஷால் மற்றும் தீபா தாக்கல் செய்த மனுவுக்கே, தேர்தல் ஆணைய அதிகாரிகள் விழி பிதுங்கினா எப்படி?

கமல் மனுத் தாக்கல் செய்தால், எப்படி இருக்கும்; வேட்புமனு படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டிய விஷயங்களை, கமல் எப்படி அணுகியிருப்பார் என்பதற்கு, இதுவே சான்று.பெயர்: எம் பெயர் எதுவாக இருப்பினும், அதையே இவ்விடம் பூர்த்தி செய்ய, நான் எதற்கு? மை நிரப்பிய பேனா கொண்டு, மொய் எழுத வந்தவனல்ல நான்; மெய் எழுத வந்த முதல்வன் என, நீரே எழுதிக் கொள்ளக் கடவது.

நான் யாரென்பது, உமக்கு தெரியும் என்பதை, யாமறிவோம். சொத்து விபரம்: ஆண்டோர் மற்றும் ஆள்போரின் கணக்கறியா சிறுவனுக்கு தெரியாதா... நான் ஈன்ற சொத்து, ஸ்ருதியும், அக் ஷராவும், எம் தமிழ் நற்பணி இயக்க சகாக்களும் தான் என்று.

மதம்: நான் தொழுபவனா, இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு; அனைவரும் என் கேளிர். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

இப்படியொரு வேட்புமனுவை, கமல் கொடுத்திருந்தால், அந்த தேர்தல் அதிகாரி, என்ன கதிக்கு ஆளாகியிருப்பார் என, எண்ணிப் பார்க்கும்போது, விஷால் எவ்வளவோ பரவாயில்லை!
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SALEEM BASHA - RAS AL KHAIMAH-UAE,ஐக்கிய அரபு நாடுகள்
07-டிச-201719:41:18 IST Report Abuse

SALEEM BASHAஒரு மனிதனை தோல்வி தான் வெற்றியாளனாக மாற்றும் இனி இது போன்று தவறுகள் அடுத்த தேர்தலில் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும் இவ்வளவு பணம் வைத்துக்கொண்டிருக்கும் நபர் எவனோ ஒரு ரவுடியா கையெழுத்து போடவைப்பார்?

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-டிச-201719:34:47 IST Report Abuse

Pasupathi Subbianவிளம்பரம். நடிகர் சங்க தலைவர், தயாரிப்பாள சங்க தலைவர், இந்த பதவிகளை தக்கவைத்துக்கொள்ள இவர் போட்ட வேஷம் .

Rate this:
Indian - Chennai,இந்தியா
07-டிச-201718:05:56 IST Report Abuse

IndianEppa neenga adikiringada jalra BJP kku. Ungallku pudikkalana vachi seiringada.

Rate this:
Kovai kaliyana raman. Abu dhabi. - Abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
07-டிச-201718:00:30 IST Report Abuse

Kovai kaliyana raman. Abu dhabi.100 % correct ..

Rate this:
Arasan - Thamizhnadu,இந்தியா
07-டிச-201717:45:37 IST Report Abuse

Arasanஎன் நினைவு தெரிந்த நாளில் இருந்து மலர் படிக்கிறேன் > 30years. இப்படி ஒரு ஆப்பு கட்டுரை நான் படித்ததில்லை. நேற்றும் அதன் முன்னாலும் விசைகள் அடித்த கூத்தை பற்றி அவ்வளவாக கேள்வி கேட்காத மற்ற ஊடகத்தை எண்ணி கடும் கோபம் வந்தது. முடிந்தவரை என் கோபத்தை இணையத்தில் கருத்துக்களாக சொன்னேன். ஆனால், அணைத்து மக்களையும் சென்றடையும் விதத்தில் தங்கள் எழுதிய அற்புதமான பதிவு ஒரு பாடம், அரசியலில் பணம் புகழ் பதவி வேண்டும் என எண்ணி ஒரு தகுதியும் இல்லாமல் வரும் அணைத்து நபர்களுக்கும் தான். இருக்கும் கழிசடைகளை எப்படி துரத்த போகிறோமா என எண்ணி வரும் வேளையில் புது விளம்பர விரும்பிகள் இனி புக கூடாது. ..... .... ..... சில அற்புத வாக்கியங்கள் மேலுள்ளதிலிருந்து ,,, ''திரையுலக தேர்தல்கள் தந்த மமதையில், ஆர்.கே.நகரில் கொடி நாட்டலாம் என்று''..... ''கொக்கரிக்க முடியாத சண்டக்கோழியாக, தன் அடிப்பொடிகளுடன் சாலையில் அமர்ந்தார்.'' ...''பள்ளியில், 'டிரில்' மாஸ்டரிடம் அடி வாங்கிய, ஒண்ணாம் வகுப்பு குழந்தைபோல், அங்கிருந்து ஓடிப் போன விஷால்''.....''குச்சி மிட்டாய்க்கு, அழும் குழந்தையாக மாறிப் போன விஷால், 'ப்ளீஸ் சார்... மனுவை ஏத்துக்குங்க' என, தேம்பினார்''.....மாஸ்டர் கிளாஸ் >''தேர்தல் அதிகாரியோ, கடையை பூட்டி நடையைக் கட்டினார்''. ...... ''அடுத்த அரசியல் தளபதியாக, வீராப்புடன் தொகுதிக்கு வந்த விஷால், 'வட போச்சே...' என்ற வடிவேலு ரேஞ்சில்,வீட்டுக்கு நடையை கட்டினார்''.... .... அதையே சமயம் கமலின் உதாரண வேட்புமனு என்னை பலமாக சிரிக்க வைத்து இன்று பூரிப்படையச்செய்தது.....

Rate this:
07-டிச-201717:31:22 IST Report Abuse

NanjanMohanNeeyum umathu katturaiyum. Semi yeppo full aga porriyo

Rate this:
A.V. senthilkumar - Jeddah,சவுதி அரேபியா
07-டிச-201716:58:45 IST Report Abuse

A.V. senthilkumarஅப்பா இனி தேர்தல் களம் கொஞ்சம் அமைதியா போகும்

Rate this:
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
07-டிச-201714:18:03 IST Report Abuse

பஞ்ச்மணிகேப்புல ஒலக நாயகனுக்கு ஒரு டச் குடத்தீங்க பாருங்க சூப்பரப்பு

Rate this:
Needhi Devathai - Sydney,ஆஸ்திரேலியா
07-டிச-201713:49:07 IST Report Abuse

Needhi DevathaiNeenga ean ippadi kevalama vimarsanam panreenga.

Rate this:
suresh - Chennai,இந்தியா
07-டிச-201713:48:28 IST Report Abuse

sureshஜனநாயக நாட்டில் எவரும் தேர்தலில் பங்கு பெறலாம்.

Rate this:
மேலும் 47 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement