'ஸ்மார்ட்' மீட்டருக்கு ரூ.750 கோடி கோட்டை விட்டதா மின் வாரியம்? Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ரூ.750 கோடி
'ஸ்மார்ட்' மீட்டருக்கு ரூ.750 கோடி
கோட்டை விட்டதா மின் வாரியம்?

மத்திய அரசு, 'ஸ்மார்ட்' மீட்டர் திட்டத்திற்கு நிதி வழங்குவதாக தெரிவித்தும், அதற்கான விரிவான திட்ட அறிக்கையை, மின் வாரியம் சமர்ப்பிக்காதது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்மார்ட் மீட்டர்,Smart Meters, மின் வாரியம், Electricity Board, மத்திய அரசு, Central Government, எஸ்.எம்.எஸ்.,SMS, மத்திய மின் துறை அமைச்சகம்,Central Ministry of Power, தமிழ்நாடு மின் வாரியம், Tamil Nadu Electricity Board,


மத்திய அரசு, வீடுகளில் மின் பயன்பாட்டை துல்லியமாக கணக்கிட, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்தும்படி, மாநில மின் வாரியங்களை வலியுறுத்தி வருகிறது.

இத்திட்டத்தில், மின் பயன்பாட்டை கணக்கிட, ஊழியர்கள், நேரில் செல்ல தேவையில்லை.மீட்டரில் பொருத்தப்படும் தொலை தொடர்பு வசதி வாயிலாக, தானாகவே மின் பயன்பாடு விபரம், மின் வாரிய, 'சர்வரில்' பதிவாகும். அந்த விபரம், எஸ்.எம்.எஸ்., வாயிலாக, நுகர்வோருக்கு தெரிவிக்கப்படும்.

பகிர்ந்தளிக்க முடிவு

நகரங்களில், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த, மத்திய மின் துறை அமைச்சகம், 750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அதை, அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்க முடிவு செய்தது.
அந்தநிதியை பெற, ஸ்மார்ட் மீட்டர் தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை, நவ., 25க்குள் சமர்ப்பிக்கும்படி, மாநில மின் வாரியங்களுக்கு, மத்திய மின் துறை அமைச்சகம் கடிதம் எழுதியது.

திட்ட அறிக்கை

ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, ராஜஸ்தான், பீஹார், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள், அத்திட்டத்திற்காக, 1,746 கோடி ரூபாய் மதிப்பிற்கு, விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்து உள்ளன.
ஆனால், தமிழ்நாடு மின் வாரியம், அந்த அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என, தெரிகிறது.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மத்திய அரசு,விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க, காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்புள்ளது. அதற்குள், அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும்' என்றார்.

Advertisement

புயலை காட்டி, 'எஸ்கேப்?'


மத்திய அரசு, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு, விரிவான அறிக்கை தரும்படி, தமிழகம் உட்பட, அனைத்து மாநில மின் வாரியங்களுக்கும், நவ., 3ல் கடிதம் அனுப்பியது. அதில், திட்டத்தின்நோக்கம், நிதி ஒதுக்குவதில் யாருக்கு முன்னுரிமை உள்ளிட்ட விபரங்கள் விரிவாக இருந்தன.மின் வாரியங்கள், விரிவான அறிக்கையை, ஒருங்கிணைந்த மின் திட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்படி தெரிவிக்கப்பட்டது. டிச., துவக்கத்தில் தான், கன்னியாகுமரியில் புயல் வீசியது. எனவே, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு நிதி வாங்க முயற்சிக்காததற்கு, புயலை காரணம் காட்ட முடியாது.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-டிச-201711:40:00 IST Report Abuse

a.thirumalaiஎப்பப் பாத்தாலும் கருத்து சொல்ல முடியாது

Rate this:
Rajalakshmi - Kuwait City,குவைத்
07-டிச-201709:46:13 IST Report Abuse

Rajalakshmiஅமெரிக்கா நாட்டினர் பலர் இந்த ஸ்மார்ட் மீட்டர் என்பவை நமது ஆரோக்கியத்தை பெரிதும் பாதிப்பதாக எச்சரிக்கை செய்து வருகின்றனர். ஆகையால் அவசரப்படாமல் இருப்பதே நல்லது.

Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-டிச-201703:54:47 IST Report Abuse

J.V. Iyerஎன்ன செய்வது, தமிழகத்தின் தலை விதி தகுதி இல்லாதவர்கள் எல்லாம் பணம் கொடுத்து வேலையில் அமர்வதால் வந்த வினை. இவர்களுக்கு அரசியில் செல்வாக்கு இருந்தால் கேட்கவே வேண்டாம். லஞ்சத்தை ஒழித்தால் தான் மக்களுக்கு நல்வாழ்வு.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
07-டிச-201701:36:52 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்வட போச்சே.. பிரச்சினை இது தானா, இல்லை கமிஷன் மொத்தமாக டெல்லிக்கு போவதால் இதிலே நம்ம 45% கமிஷன் களவாணிகள் இன்ட்ரெஸ்ட் காட்டலியா?

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement