Ariviyalmalar | மென்மையான 'ரோபோ'க்களின் அசுர பலம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மென்மையான 'ரோபோ'க்களின் அசுர பலம்!

Added : டிச 07, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மென்மையான 'ரோபோ'க்களின் அசுர பலம்!, Ariviyalmalar

'ரோபோ'க்களின் கரங்கள் உலோகத்தால் ஆனவை என்பதால், அவை அசுர பலம் கொண்டவையாகவே இருக்கின்றன. ஆனால், தினசரி வாழ்வில் பல பொருட்களை மென்மையாகக் கையாள வேண்டும். இதை மனதில் கொண்டு, மென்மையான ரோபோக்களையும் விஞ்ஞானிகள் வடிவமைத்து வருகின்றனர். ஆனால், இத்தகைய ரோபோக்களின் கரங்களுக்கு போதிய பலம் இருப்பதில்லை. இந்த குறையை தீர்க்க, அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையம் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், புதிய வகை அணுகுமுறையை உருவாக்கி உள்ளனர்.ஜப்பானிய காகிதம் மடிக்கும் கலையான, 'ஓரிகேமி'யை அடிப்
படையாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ள புதிய வகை ரோபோ கரங்கள் மற்றும் விரல்களில், தசைகளாக செயல்படுவதற்கு காற்று அல்லது திரவத்தை நிரப்பும் பைகள் பொருத்தப்பட்டுள்ளன.சும்மா இருக்கும் நிலையில் இந்தப் பைகள் வெற்றிடமாக்கப்படும். பொருட்களை பற்றுவது,
துாக்குவது போன்றவற்றுக்கு பைகளில் திரவம் அல்லது காற்று நிரப்பப்படும். இந்த முறையில் இக்கரங்களை விட, 1,000 மடங்கு எடையை துாக்க முடியும் என, விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை