Ariviyalmalar | ஆராய்ச்சி மலர்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

ஆராய்ச்சி மலர்

Added : டிச 07, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஆராய்ச்சி மலர்

மொபைல் பயன்பாடு பரவலாக ஆரம்பித்தகடந்த, 10 ஆண்டுகளில், நேருக்கு நேர் சந்திப்புகளில் ஏற்படும் மனநிறைவு பாதிக்கப்பட்டிருக்கிறதா? ஆம் என்கிறது, 'ஜர்னல்
ஆப் சோஷியல் சைக்காலஜி' இதழில் வெளிவந்துள்ள ஓர் ஆய்வு. பிறருடன் உணவருந்தும் போது மொபைலை அடிக்கடி பார்ப்பது, உணவையும் அந்த சந்திப்பையும் குறைத்து மதிப்பிடச் செய்கிறது என்றும், வெளியில் சிலர் கூடி பேசும்போது, ஒருவர் மொபைலை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தால், அந்த சந்திப்பால் எவருக்கும் மனநிறைவு கிடைப்பதில்லை என்றும், 400 பேர் மத்தியில் செய்யப்பட்ட இரு தனி ஆய்வுகள் தெரிவித்து உள்ளன.
பிறரை நேரில் சந்திக்கும்போது மொபைலை பார்ப்பது அநாகரிகம் மட்டுமல்ல, அதிருப்தி தரக்கூடியதும் கூட!

------------


ஒருவரது தனிப்பட்ட நம்பிக்கைகள், கொள்கைகளுக்கும், அறிவியல் பிரச்னைகள் மீதான பார்வைக்கும் தொடர்பு இருக்கிறதா? 'பெர்சனாலிட்டி அண்ட் சோஷியல் சைக்காலஜி புல்லெட்'டின்'ஆய்விதழில் வெளியான ஆய்வின் படி, ஒருவரது அரசியல் சார்பைப் பொறுத்து, பருவ நிலை மாறுதல் மீது அவநம்பிக்கை அல்லது நம்பிக்கை கொள்வார். ஒருவரது மத நம்பிக்கைகளைப் பொறுத்து, தடுப்பூசி மீதான நம்பிக்கை அல்லது அவநம்பிக்கை அமையும். ஆனால், ஒருவர் மரபணு திருத்தப்பட்ட உணவுகளை எதிர்ப்பதற்கும், அவரது அரசியல் அல்லது மத நம்பிக்கைக்கும் தொடர்பு இல்லை என, அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை