Poll Of Opinion Polls Shows BJP Winning Gujarat Again, But By Smaller Margin | குஜராத்தில் ஆட்சி யாருக்கு: பரபரப்பு கருத்து கணிப்புகள்| Dinamalar

குஜராத்தில் ஆட்சி யாருக்கு: பரபரப்பு கருத்து கணிப்புகள்

Updated : டிச 07, 2017 | Added : டிச 07, 2017 | கருத்துகள் (163)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
குஜராத்தில் ஆட்சி யாருக்கு: பரபரப்பு கருத்து கணிப்புகள்

புதுடில்லி: குஜராத்தில் பாஜ மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்புகள் வாயிலாக தெரியவருகிறது. குஜராத் சட்டசபைக்கு வரும் 9 மற்றும் 14ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பா.ஜ. , காங். கட்சிகும்இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது
யார் ஆட்சியை பிடிப்பர் என்ற கேள்விக்கு மூன்று விதமான கருதது கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் மீண்டும் பா.ஜ. வே ஆட்சி பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.
அதன் விவரம்:

குஜராத் யாருக்கு?

இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு
மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பா.ஜ. 106 முதல் 116 இடங்களையும், காங்., 63 முதல் 73 இடங்களில் வெற்றி பெறும் எனவும் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
டைம்ஸ்நெவ் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு
பா.ஜ. 111 இடங்களிலும் காங். 68 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவந்துள்ளது.
ஏபி.பி-சி - சி.எஸ்.டி. எஸ். வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு விவரம்:
பா.ஜ. 105 முதல் 106 இடங்களிலும், காங். 73 முதல் 74 இடங்களிலும் வெற்றி பெறும். இவ்வாறு அந்த கருத்து கணிப்பு வாயிலாக தெரிவருகிறது. இந்த கருத்து கணிப்புகள் வாயிலாக பா.ஜ.வின் வாக்கு சதவீதம் குறைந்து வருவதை எடுத்துக் காட்டுகிறது
பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா , இந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ. வரலாறு காணாத வகையில் 150 இடங்களை பிடிக்கும் என தெரிவித்துள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு பா.ஜ. 127 இடங்களை பிடித்து சாதனை படைத்தது குறிப்பிடதக்கது. இந்த முறை காங். வெற்றி கனியை பறிக்க தீவிரம் காட்டிவருகிறது. தனது குடும்பத்தினர் அனைவரும் சிவபக்தர்கள் என கூறி குஜராத்தில் கோயில் கோயிலாக சென்று வரும் ராகுலின் பக்தி வேடம் இந்த தேர்தலில் எடுபடுமா என்பது ஓட்டு எண்ணிக்கையின் போது தெரியவரும்.

Advertisement


வாசகர் கருத்து (163)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா
12-டிச-201710:40:24 IST Report Abuse
K E MUKUNDARAJAN ஐயையோ, நம்ம திராவிட சமுதாயத்துக்கு வடக்கதியானை குறை கூறியே காலம் தள்ளவேண்டும் என்ற கோட்பாடு உள்ளது, மிக மிக பரிதாபம் . நம் கண்ணுக்கு நல்லதெல்லாம் தெரியாது. குறுக்கு வழியில் சம்பாதிப்பதற்கு தடை போட்டால் நன்றாக கூவுவார்கள். லோக்கல் காங்கிரஸ் காரனும் நன்கு தாளம் போடுவான் . நன்றாக டெல்லி சென்று சுருட்டிக்கொண்டு வந்து அவர்களையே கலாய்க்கும் சமுதாயம் நம்முடையது. வைகோ, அன்புமணி,ராஜா,கனி,பாலு, தம்பிதுரை, அம்மா மற்றும் மாறன் சகோதரர்கள் நன்றாக சாப்பிட்டு ஏப்பம் விட்டு வந்த பிறகும் நமக்கு ஹிந்தியையும் வடக்கர்களையும் டபாய்ப்பதே வேலை. ஒன்று தெரிந்து கொள்ளுங்கள், வடக்கன் இல்லாவிட்டால் நமக்கு காபி டிபன் சோறு கிடையாது. எல்லா ஹோட்டலிலும் அவன்தான் சமைக்கிறான், சர்விங் செய்கிறான், துடைக்கிறான். ஈவினிங்ல பஜ்ஜி போண்டா விட்டுட்டு சாட் ஐட்டத்துக்கு ஏன் அலையறீங்க. மொதல்ல மத்தவனை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். இப்படியே போனா கொஞ்ச நாளிலே நாம் இங்கே காணாம போயிடுவோம்.
Rate this:
Share this comment
Cancel
gunasekaran - COIMBATORE,இந்தியா
10-டிச-201720:09:51 IST Report Abuse
gunasekaran இத்தனை நாட்கள் எங்கே சென்றது இவர்கள் பக்தி இது வேஷம் மக்கள் நம்பமாட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
Registen - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
10-டிச-201716:34:20 IST Report Abuse
Registen பிஜேபி இங்கு செய்ததெல்லாம் போதும்.
Rate this:
Share this comment
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
13-டிச-201718:17:30 IST Report Abuse
Sitaramen Varadarajanதிரு Registen - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள் அவர்களே.........ஆவிகளின் பாவாடைகளும் அமைதி மார்க்க பரம சாதுக்களும் செய்யும் வேலை ..ஜெகஜால கில்லாடி வேலைகள். நாடு விட்டு நாடு வந்து, பாரத நாட்டை வன்முறை கொண்டு சுரண்டி, கொள்ளையடித்த கும்பலை......மத சார்பின்மை என்ற போர்வையில் வைத்து ஒட்டு வங்கிக்காக பயன் படுத்தி , பதவி வெறி பிடித்து அலைந்த கான் கிராஸ் கும்பலை பற்றி எழுதப்படவேண்டிய விமர்சனம் இது......மாற்றி எழுதி விட்டீர் நண்பரே.........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X