'உங்களை யார் ரயிலில் வர சொன்னது?' பயணியரை கடுப்படித்த டி.ஆர்.எம்.,| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'உங்களை யார் ரயிலில் வர சொன்னது?' பயணியரை கடுப்படித்த டி.ஆர்.எம்.,

Added : டிச 07, 2017 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

தஞ்சாவூர்: 'ரயில் தினமும் காலதாமதமாக வருகிறது' என, புகார் கூறிய பயணியரிடம், 'உங்களை யார் ரயிலுக்கு வரச் சொன்னது' என, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி, பொறுப்பற்ற முறையில் பேசினார்.

திருச்சியில் இருந்து காலை, 7:10 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை பயணியர் ரயில், தஞ்சாவூருக்கு காலை, 8:20க்கும், கும்பகோணத்துக்கு, 9:30க்கும், மயிலாடுதுறைக்கு, 10:00 மணிக்கும் செல்ல வேண்டும்.

அவதி: பூதலூர் பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்லும் நூற்றுக்கணக்கான மாணவர்கள், தினமும் இந்த ரயிலில் வருகின்றனர். சில மாதங்களாக இந்த ரயில், தஞ்சாவூருக்கு காலை, 9:00 மணிக்கு வருவதால், மாணவர்கள், குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கு, உழவன் விரைவு ரயில், பராமரிப்புக்காக இந்த நேரத்தில் இயக்கப்படுவதால், மயிலாடுதுறை பயணியர் ரயிலை, சோழகம்பட்டியில் நிறுத்தி விடுகின்றனர். இதனால், கும்பகோணம், மயிலாடுதுறை செல்லும் அனைத்து தரப்பினரும், இந்த ரயில் தினமும் தாமதம் ஆவதால், அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு, திருச்சி கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி நேற்று காலை ஆய்வுக்கு வந்தார். அவரிடம், ரயில் பயணியர், 'மயிலாடுதுறை ரயில் தாமதமாக வருவதால் ஏற்படும் அவஸ்தைகளை குறிப்பிட்டு, அதை குறித்த நேரத்தில் இயக்க வேண்டும்' என்றனர்.

அலட்சியம்: இதைக்கேட்ட கோட்ட மேலாளர், 'ரயில் காலதாமதமாக வந்தால், பஸ்சில் போக வேண்டியது தானே, உங்களை யார் ரயிலுக்கு வரச்சொன்னது' என, அலட்சியமாக பதில் கூறினார். இதனால், புகார் கூறிய அனைத்து பயணியர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், திருச்சி கோட்ட மேலாளரின் இந்த செயல் குறித்து, தெற்கு ரயில்வே மேலாளருக்கு பயணியர் புகார் அனுப்பி உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram -  ( Posted via: Dinamalar Android App )
07-டிச-201707:15:54 IST Report Abuse
Ram BSNL, தூர்தர்ஷன், போஸ்ட் அன்ட் டெலிகிராஃப், இதுபோன்ற அரசு அமைப்புக்கள் Boss கள் போன்ற அட்டிடியுட்டுடன் வாடிக்கையாளர்களை நடத்தியதால் தான் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டன். இந்த லிஸ்ட்டில் ஏர் இன்டியாவையும் சேர்த்துக் கொள்ளலாம். இதுபோன்று ரெயில்வேஸ்க்கும் செக் வைக்க ஒரு நல்ல யோசனை வேண்டும். அரசு அல்ல அரசு சார்ந்த கம்பெனியில் வேலைகிடைத்த உடனே இவர்களின் அட்டிட்யூட் மாறிவிடுவதால் கஸ்ட்டமர்களை ஈ கொசு போல நடத்துகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
07-டிச-201705:51:32 IST Report Abuse
அப்புஜி ரயில்ல போறதுக்கு ஆதார் கட்டாயம்னு உத்தரவு போடுங்க எசமான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை