மீனவர்களி்ன் ரயில் மறியல் போராட்டம் வாபஸ்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீனவர்களி்ன் ரயில் மறியல் போராட்டம் வாபஸ்

Updated : டிச 08, 2017 | Added : டிச 07, 2017 | கருத்துகள் (36)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் ஒக்கி புயலால் மாயமான 1,150 க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்டுத்தரக் கோரி 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் இரு பிரிவாக சென்று குழித்துறையில் நடந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.


கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க வேண்டும். இறந்த மீனவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் வர வேண்டும். என மீனவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். போராட்டம் நீண்ட நேரமாக நடந்தது. இதனால், அந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் சேவை மாற்றிவிடப்பட்டன.
இன்று மதியம் ரயில் மறியலில் ஈடுபடுவதற்காக சுமார் 5000 பேர் பேரணியாக சென்றனர். இவர்களை சின்னத்துறை பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தியதால், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலில் தத்தளிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்டுத்தரக் கோரி மீனவ சங்கங்களைச் சேர்ந்த மக்கள் ஊர்வலமாக சென்றனர். இதனால் பாதுகாப்பிற்காக 200 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குழித்துறை ரயில் நிலையத்திற்கு செல்வதற்காக சுமார் 8 கி.மீ., மீனவ மக்கள் பேரணியாக சென்று. தொடர்ந்து இரவு 12 மணி வரை ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை தோல்வி

இந்நிலையில் குமரி மாவட்ட கலெக்டர் இரவு பேராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் போது கலெக்டருடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாமல் போராட்டகாரர்கள் முழக்கங்களை எழுப்பினர். பேச்சுவார்த்தை நடந்ததையெடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.


இரவிலும் தொடர்கிறது


மதியம் துவங்கிய போராட்டம் 11 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து இரவில் போராட்டம் நிறைவு பெற்றது. மீனவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nalam Virumbi - Chennai,இந்தியா
08-டிச-201709:32:23 IST Report Abuse
Nalam Virumbi குறைந்த தாழ்வழுத்தம் என்று அறிவித்ததும் கடலில் செல்லாமல் இருப்பது நல்லது. ரிஸ்க் எடுக்க வேண்டாம். இந்த பெரும் கடல் சூழலில் மாட்டிக்கொண்டால் மீட்பது அரிது. மீனவர்கள் தங்களுக்குள் ஒரு அமைப்பு ஏற்படுத்தி, (அரசியல் சார்பற்ற) அதன் அட்வைஸ் பிடி கடலில் இறங்குதல் நலம்.
Rate this:
Share this comment
Cancel
Hari Krishnan - Coimbatore,இந்தியா
08-டிச-201706:36:10 IST Report Abuse
Hari Krishnan நடந்தது வெறும் மீனவ மக்களின் போராட்டம் என்று சொல்லிவிட முடியாது.. பல கிறிஸ்தவ NGO க்களின் பணப்பரிமாற்றத்துக்கு வந்த தடையால் ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடு தான் இந்த பாதிரியார்கள் முன் நின்று நடத்தின போராட்டம்.. பணத்தை வைத்து மதம் மாற்றம் செய்து வந்தவர்களின் பிழைப்பில் கைவைத்ததின் விளைவே இது... இயற்க்கை பேரிடரை காரணம் காட்டி நடத்தி முடிக்கப்பெட்டது.. இவர்களின் போலி வேஷங்களுக்கு இரையாக மீனவமக்களை பயன்படுத்துவது..இப்போது மட்டுமல்ல..கூடன்குளத்தில அணுமின் நிலையத்திற்க்கெதிரான போராட்டத்திலேயே ஆரம்பிக்கப்பெட்டது ..உதயகுமார் வெறும் கருவி மட்டுமே..நாட்டின் வளர்ச்சித்திட்டங்களுக்கெதிரான போராட்டத்தை கிறிஸ்தவ நாடுகள் இவர்கள் மூலமாக அரங்கேற்றுகிறார்கள்..
Rate this:
Share this comment
Cancel
Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்
07-டிச-201723:01:14 IST Report Abuse
Sambasivam Chinnakkannu இது மீனவர்களுக்கான போராட்டம்போல் தெரியவில்லை ,,,, பாதிரியார்களும் ,,, சமூக விரோதிகளும் களத்தில் இறங்கி ,,என்ன என்ன எல்லாமோ ,,,நடக்கிறது ,,,சமூக விரோதிகளை அரசு என்கவுண்டர் செய்யவேண்டிய நேரம் ஜல்லிக்கட்டு பிரச்சினையில் இருந்து தொடங்கி இருக்க வேண்டும் ,,,இன்று அதிக துடிப்புடன் செயல்படும் இவற்களின் வீடியோ ஆதாரத்தை கையில் எடுத்து அரசு கலையெடுக்கவேண்டும் ,,,உண்மையாக பாதிக்கப்பட்ட ,,பாவப்பட்ட மீனவர்களுக்கு அரசு உடனடியாக உதவவேண்டிய கடமை உள்ளது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும் ,,
Rate this:
Share this comment
Mariappa T - INDORE,இந்தியா
08-டிச-201700:20:58 IST Report Abuse
Mariappa Tகாஸ்மிர்ல செய்யமுடியாத துப்பாக்கி சூடு குமரி மக்களிடம் செய்ய என்ன துணிவு இந்த சாம்பசிவத்துக்கு. இந்திய உப்ப தின்னுபுட்டு வேறுநாட்டவனுக்கு வேலை செய்யும் அடிமைக்கு என்ன தெரியும் இந்தியனின் உணர்வு. பேரு பாரத்தால் சிவம் ஆனால் அன்பு இல்லை அன்பு என்ற வேடமடிந்த காவி பாவாடை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X