காலமானார் விளம்பரம் கொடுத்து காணாமல் போனவர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

காலமானார் விளம்பரம் கொடுத்து காணாமல் போனவர்

Updated : டிச 07, 2017 | Added : டிச 07, 2017 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கேரளா,Kerala, முதியவர் தனிமை,Elderly isolation, காலமானார் விளம்பரம், Died Advertising, ஜோசப் மெலுகுனல், Joseph Melugunal, மலையாள மனோரமா,Malayalam Manorama,  போலீஸ், Police,

கோட்டையம்: கேரளாவில், தனிமையில் தவித்து வந்த முதியவர் ஒருவர், தனக்கு தானே பத்திரிகையில், 'காலமானார்' விளம்பரம் கொடுத்து விட்டு காணாமல் போய் விட்டார். போலீசார் அவரை தேடி கண்டுபிடித்து மீட்டனர்.


உறவினர்கள் அதிர்ச்சி

கேரள மாநிலம், கன்னூர் மாவட்டம், தாலிபரம்பா என்ற இடத்தை சேர்ந்தவர் ஜோசப் மெலுகுனல்,75. தனியாக தங்கி வந்த இவர் கடந்த நவ., 21ம் தேதி கதுதுருத்தி என்ற இடத்தில் நடந்த உறவினர் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். அதன் பிறகு, நவ., 29ம் தேதி அவரது 'காலமானார்' விளம்பரம் பத்திரிகைகளில் வெளியானது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால், அங்கு யாரும் இல்லை. எனவே, போலீசில் புகார் கொடுத்தனர். விசாரணையில் இறங்கிய போலீசார் கோட்டயத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்த ஜோசப்பை கண்டுபிடித்தனர். உறவினர்கள் நடந்த விஷயம் குறித்து கேட்டது அதிர்ச்சி அடைந்தனர்.


பாரமாக இருக்க விரும்பவில்லை

போலீசாரிடம் ஜோசப் கூறுகையில், '' தனிமையில் வசித்து வந்த எனது உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வந்தது. மற்றவர்களுக்கு பாரமாக இருக்க விரும்பாததால், பத்திரிகையில் எனது, 'காலமானார்' விளம்பரத்தை வெளியிட வைத்தேன். அதன் பிறகு எனது வாழ்க்கையை முடித்து கொள்ள முடிவு செய்தேன். நவ., 29ம் தேதிக்கு பிறகு கர்நாடகா சென்றேன். அங்கு சில நாட்கள் தங்கிய பிறகு கோட்டயம் வந்தேன். தனித்து வாழ்வது சிரமமாக உள்ளது,'' என்றார். அவரை பத்திரமாக உறவினர்களுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தை மலையாள மனோரமா நாளிதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
08-டிச-201702:48:23 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> THANIMAI KODUMAI ENRUPALARUM ELUTHAREENGKA EVLOPERUNGKA THANNAPERRAVAALAI OLD AGE HOME KU ANUPPAAMAL IRUKKEENGKA KOODAVE IRUNTHAAL INIMAI ENRU ENNUVOR EVLO PERUNGKA MANAIVI THAAN THANPILLAIKAL ENRU ENNUVORETHAAN ADHIKAM ULAKILE IN USA ALSO MANY OLD AGE HOMES ARE THERE ENBADHUM UNMAI ALL LADIES ARE GOOD TILL THEY BECOME A INLAW ENRU SOLLUVAANGALE THATS TRUE
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
07-டிச-201720:39:11 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> தனிமை ரொம்பவே கொடுமை அதிலும் முதுமையே தனிமை இருக்கே எப்போது தான் மரணம் வருமோ என்று பயந்தே வாழும் நிலை இருக்கே மாபெரும் கொடிய கொடூரம் தான் இவர் இப்படி செய்யாமல் முதியோர் இல்லம் லே தங்களாமே அவா நன்னா பாத்துக்குவாங்க நெறைய முதியவர்கள் இருப்பாங்க பேச தன மனநிலைகளை பகிந்துகொள்ள என்று நேரத்துக்கு உணவு கிட்டும் மேலும் மெடிக்கல் வசதிகள் பொழுதுபோக்குகள் உள்ள பல ஹோம்ஸ் இருக்குங்க வசதி உள்ளவராயின் ரிச் கம்யூனிட்டி லிவிங் ஹோம்ஸ் கூட இருக்கே , இவர் கிரிஸ்துவர் அவாளும் இதுபோல நெறைய சேவைகளுடன் கூடிய ஹோம்ஸ் நடத்துறாங்க , ஐயா பிறப்பும் இறப்பும் நம்மக்களிலே இல்லேங்க அதனால் ப்ளீஸ் இந்தமாதிரி இல்லம்களிலே தங்கவும்
Rate this:
Share this comment
Cancel
ravichandran - avudayarkoil,இந்தியா
07-டிச-201719:38:17 IST Report Abuse
ravichandran பாலகிருஷ்ணன் என்கிற ஒருவர் இந்த பகுதில் கருத்து எழுதுறார் பாருங்க பாவம் அவர் நல்ல மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது மோடியையும் பா ஜா கா வையும் ரொம்ப வெறுக்கிறார் ஆனா மோடியும் பா ஜா காவும் வெற்றி மேல் வெற்றி பெற்று வருகிறார்கள் எதை எடுத்தாலும் மதவாதம் மதவாதம்னு பொலம்புறார் ஆனா தீவிர வாதத்தை மறந்துடுறார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X