சர்ச்சையில் சிக்கிய கபில் சிபல்| Dinamalar

சர்ச்சையில் சிக்கிய கபில் சிபல்

Added : டிச 07, 2017 | கருத்துகள் (38)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ராமர் கோவில், Raman Temple,சுப்ரீம் கோர்ட், Supreme Court, சன்னி வக்ப் போர்டு, Sunny Wakf Board, வழக்கறிஞர் கபில்சிபல்,Advocate Kapil Sibal,  அயோத்தி , Ayodhya, 2019 லோக்சபா தேர்தல்,2019 Lok Sabha Elections, பிரதமர் மோடி, Prime Minister Modi,காங்கிரஸ்,Congress,  குஜராத் சட்டசபை தேர்தல்,Gujarat Assembly Elections, ஹாஜி மெக்பூப் , Haji McGuub

புதுடில்லி: 'அயோத்தி ராமர் கோவில் வழக்கை 2019 லோக்சபா தேர்தல் காலம் வரை தள்ளி வைக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில் காங்., மூத்த தலைவரும், பிரபல வழக்கறிஞருமான கபில் சிபில் வாதாடியது ஏற்புடையது அல்ல என சன்னி வக்ப் போர்டு கருத்து தெரிவித்துள்ளது.


சுப்ரீம் கோர்ட்டில் வாதம்

சுப்ரீம் கோர்ட்டில், ராமர் கோவில் வழக்கு நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சன்னி வக்ப் போர்டு சார்பில் ஆஜரான கபில் சிபல், 'இந்த வழக்கை 2019 லோக்சபா தேர்தல் காலம் வரை தள்ளி வைக்க வேண்டும்' என, வாதாடினார். அவரது கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்து விட்டது. கபில் சிபல் இதுபோல் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, காங்கிரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ராமர் கோவில் விவகாரத்தை அரசியலுடன் தொடர்பு படுத்த வேண்டாம் எனவும் அவர் விமர்சனம் செய்தார். இது குறித்து காங்., தரப்பில், ' இது கட்சியின் கருத்து அல்ல. சன்னி வக்ப் போர்டு சார்பில் தான் கபில் சிபல் வாதாடி வருகிறார்' என,கூறப்பட்டது.


வக்ப் போர்டு மறுப்பு

ஆனால், இந்த கருத்தை சன்னி வக்ப் போர்டு மறுத்துள்ளது. அதன் உறுப்பினர் ஹாஜி மெக்பூப் கூறுகையில், '' கபில் சிபல் எங்கள் வழக்கறிஞர் தான். ஆனால், அவர் ஒரு அரசியல் கட்சியுடனும் தொடர்பில் உள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் அவர் வெளியிட்ட கருத்து தவறு. ராமர் கோவில் வழக்கில் விரைவில் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. கபில் சிபல் கருத்துக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை,'' என்றார். இதுப்பற்றி பிரதமர் மோடி கூறுகையில், '' ராமர் கோவில் விவகாரத்தில் விரைவில் தீர்வு ஏற்பட வேண்டும் என அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். ஆனால், காங்கிரசும், அதன் தலைவர்களும் இதை ஏற்க மறுக்கின்றனர்,'' என்றார்.Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
08-டிச-201705:50:04 IST Report Abuse
Subburamu Krishnaswamy ரெம்பவும் கீழ்த்தரமான அரசியலால் இந்தியா ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் கேடு விளைவிக்கிறார்கள். காங்கிரசில் தலைவர்கள் நிதானம் இழந்து செயல்படுகிறார்கள். ராகுலுடன் காங்கிரசின் குடும்ப அரசியல் முடிந்துவிடும்
Rate this:
Share this comment
Cancel
Gopalakrishnan - Kuzhumani,இந்தியா
07-டிச-201719:24:30 IST Report Abuse
Gopalakrishnan மணிசங்கரும் கபில்சிபலும் போதும் ...கட்டாயம் காங்கிரஸ் அனுபவிக்க போகிறது ....
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-டிச-201719:02:47 IST Report Abuse
Pasupathi Subbian சந்துல சிந்து பாடுவது என்பது இதுதான்.
Rate this:
Share this comment
Cancel
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
07-டிச-201718:53:43 IST Report Abuse
Srikanth Tamizanda.. நான் தான் கூறினேன், ஆனால் நான் கூறிய கருத்து என்னுதில்லை.. எத்தனையோ துரோகத்தை இந்த நாடும், இந்துக்களும் சந்தித்து விட்டனர், இதையும் அந்த லிஸ்ட்டு ல சேர்த்துக் கொள்ள வேண்டியது தான்..
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
07-டிச-201718:34:03 IST Report Abuse
Kasimani Baskaran சீரோ லாஸ் கபில் சிபலுக்கு பொய் சொல்வது எல்லாம் தண்ணீர்பட்ட பாடு...
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
07-டிச-201718:13:43 IST Report Abuse
Indhuindian பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த வக்கீல் பெருமானே உன்னை புரிந்துகொண்டது தெரிந்துகொண்டது நாட்டு மக்களே
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-டிச-201717:45:56 IST Report Abuse
J.V. Iyer முதல் கோணல் முற்றிலும் கோணல் என்றல்லவா இருக்கிறது கான்-கிரெஸ்ஸில் ஏன் எல்லா தலைவர்களும், பப்பு ராகுல்ஜீ மாதிரியே இருக்கிறார்கள்? பாவம், ஒரு நல்ல தலைவன் இல்லாமல் கான்-கிரேஸ் அழிந்து கொண்டிருக்கிறது. மகாத்மா காந்தி சுதந்திரம் கிடைத்த உடனேயே காங்கிரெஸ்ஸை கலைக்க வேண்டும் என்றார். அது இப்போதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மஹாத்மா காந்தியின் கனவு நனைவாக ராகுல்ஜீயும், பணப்பசி, கபில் சிபில் போன்றோர்கள் முயற்சிக்கிறார்கள். நடக்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
07-டிச-201717:45:42 IST Report Abuse
இடவை கண்ணன் கான் கிராஸ் கட்சி இந்து விரோத கட்சி என்று திரும்பவும் நிரூபித்துக் கொண்டே வருகிறது... சில லூசு இந்துக்கள் தான் இன்னமும் புரிந்து கொள்ளாமல் பெனாத்துகிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
07-டிச-201717:17:19 IST Report Abuse
Rpalnivelu இந்த மாட்டுகறி மாமிச கம்பெனி முதலாளிக்கு நம் நாடு, கலாச்சாரம் பற்றிய கவலையெல்லாம் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
07-டிச-201716:21:58 IST Report Abuse
Endrum Indian அப்போ இந்த மாதிரி காங்கிரஸ் வக்கீல் பசங்க தான் குட்டையை குழப்பிக்கிட்டே இருக்காங்களா???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை