'சாபம்' தீர்ந்தது; வாரிசு பிறந்தது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'சாபம்' தீர்ந்தது; வாரிசு பிறந்தது

Added : டிச 07, 2017 | கருத்துகள் (32)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மைசூர் மன்னர்,king of Mysore,  400 ஆண்டு சாபம், 400 year old curse,ஆண் குழந்தை, male child, மன்னர் யாதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ வாடியார், king Yadhuvir Krishnathatha Samaraja Wadiyar, விஜயநகர சாம்ராஜ்யம்,Vijayanagara Samrajya,  திருமலைராஜா, Thirumalairaja, ராஜா உடையார், Raja Udayar, அலமேலம்மா, Alamelamma,காவிரி ஆறு,Cauvery River,  தற்கொலை, Suicide, ஜெயசாமராஜேந்திர உடையார், Jayachamarajendra Wodeyar,

பெங்களூரு: மைசூரு மன்னர் குடும்பத்தின் மீதான 400 ஆண்டுகால, 'சாபம்' முடிவுக்கு வந்துள்ளது. தற்போதைய மன்னர் யாதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ வாடியாருக்கு ஆண் வாரிசு பிறந்துள்ளது.


400 ஆண்டுகளுக்கு முன்...

கடந்த, 1612ம் ஆண்டு மைசூரை, விஜயநகர சாம்ராஜ்யத்தை சேர்ந்த திருமலைராஜாவிடம் இருந்து, ராஜா உடையார் என்பவர் கைப்பற்றினார். ராஜ நகைகளுடன் தப்பிய திருமலராஜாவின் மனைவி அலமேலம்மா, காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் உடையார் பரம்பரைக்கு ஒரு சாபம் அளித்தார். ' தலக்காடு மண்ணாக போகட்டும்; காவிரியில் இருக்கும் மலங்கி நீர்ச்சுழிகளால் சூழட்டும்; மைசூரின் உடையார்களுக்கு வாரிசு இல்லாமல் போகட்டும்' என்பது அவரது சாபம். மைசூர் பகுதியில் கடந்த, 400 ஆண்டுகளுக்கு மேல் இந்த சாபம் மீது நம்பிக்கை உள்ளது. அதற்கு ஏற்றவாறு மைசூர் உடையார் மன்னர் குடும்பத்தில் வாரிசு சிக்கலும் இருந்து வருகிறது.


தத்தெடுக்கப்பட்ட புதிய மன்னர்


நாடு சுதந்திரம் பெற்ற போது மைசூர் மாகாண மன்னராக இருந்தவர் ஜெயசாமராஜேந்திர உடையார். வாரிசு இல்லாததால் அவர் கண்டதத்த நரசிம்ம உடையாரை தனது மகனாக தத்தெடுத்தார். அவர், 1974ம் ஆண்டு மன்னராக முடி சூட்டப்பட்டார். கந்ததத்தா நரசிம்மராஜ உடையார் கடந்த, 2013ம் ஆண்டு காலமானார். அவருக்கு நேரடி ஆண் வாரிசு இல்லை. எனவே, அவரது மூத்த சகோதரி காயத்ரி தேவியின் பேரன் யதுவீர கோபாலராஜே அர்ஸ்,23 என்பவர் அடுத்த வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மைசூரின், 27 வது மன்னராக முடிசூட்டப்பட்ட அவருக்கு யதுவீர கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையார் என புதிய பெயர் சூட்டப்பட்டது. அவருக்கும் ராஜ்காட் மன்னர் குடும்பத்தை சேர்ந்த திரிஷாதேவி என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன், 27 ம்தேதி திருமணம் நடந்தது. பெங்களூருவில் உள்ள கிளவுட்நைன் மருத்துவமனையில், திரிஷா தேவிக்கு நேற்று இரவு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதன் மூலம், மன்னர் குடும்பத்தின் மீதான 400 ஆண்டுகால சாபம் முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasamy - chingola,ஜாம்பியா
13-டிச-201715:21:05 IST Report Abuse
ramasamy சாபங்களை பற்றி அறிய "shapit " என்ற ஹிந்தி படம் பார்க்கவும். அதில் நம்பும்படியாக தர்க்க ரீதியான விளக்கங்கள் வைத்துள்ளார் படத்தின் இயக்குனர். இது மன்னர் குடும்பம் மட்டுமல்ல. பல குடும்பங்களில் உண்டு. மன்னர் குடும்பம் என்பதால் செய்தியாக வருகிறது. நல்ல மனம், செயல் பாடுகள் உள்ளவர்களுக்கு சாபம் கிடைக்கும் வாய்ப்பு குறைவு. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது பொது விதி. சாபம் கடவுள்களைக் கூட விட்டு வைத்ததில்லை என்பது புராண உண்மை.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
08-டிச-201702:52:06 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> VAALKA VALAMUTAN NOYINRI HEALTHYAAGA VALARANUM NANNAAIRUKKANUM
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
08-டிச-201702:51:29 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) நாநூறு ஆண்டுகள் என்பது பதினாறு தலைமுறைகள். அதுவரை ஆண் வாரிசு இல்லாமல் இருந்தது சாபமாக கூட இருந்திருக்கலாம். சாபம் முடிவுக்கு வந்து ஆண் குழந்தை பிறந்ததற்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X