ஆந்திராவை நோக்கி நகரும் காற்றழுத்த மண்டலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆந்திராவை நோக்கி நகரும் காற்றழுத்த மண்டலம்

Added : டிச 07, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சென்னை வானிலை ஆய்வு மையம், குறைந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலம், ஆந்திரா, தமிழ்நாடு

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு ஆந்திரா, ஒடிசா கடற்கரை பகுதியை நோக்கி நகர்ந்து செல்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது:


மீனவருக்கு எச்சரிக்கை

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நிலை கொண்டிருந்த குறைந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலம் வடதிசையில் நகர்ந்து மசூலிப்பட்டினம் அருகே நிலை கொண்டுள்ளது. டிச., 9ம் தேதி வடக்கு ஆந்திரா, ஒடிசா கடற்கரையை நோக்கி அது நகர தொடங்கும். மீனவர்கள் 8, 9ம் தேதிகளில் கடலுக்குள் செல்ல வேண்டாம்.


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகரில், 11 செ.மீ., மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில், 6 செ.மீ., சிவகாசியில், 5 செ.மீ., பாளையங்கோட்டையில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது. அடுத்த, 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்ய கூடும். சென்னையில் மேக மூட்டத்துடன் காணப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.






Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Chennai,இந்தியா
07-டிச-201716:58:53 IST Report Abuse
Ram அய்யா சாகர் புயலே, கொஞ்சம் தமிழ்நாட்டுப்பக்கம் திரும்பி பார்த்துவிட்டு போ. எங்கள் டிவி மீடியாக்களுக்கு அடுத்த 10 நாட்களுக்கு சரக்கு இல்லை. ஒக்கி புயல் நியூஸயே எத்தனை நாள் ஓட்டறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை