லவ் ஜிகாத்: ராஜஸ்தானில் கூலி தொழிலாளி எரித்து கொலை| Dinamalar

லவ் ஜிகாத்: ராஜஸ்தானில் கூலி தொழிலாளி எரித்து கொலை

Added : டிச 07, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
லவ் ஜிகாத், கூலி தொழிலாளி, எரித்து கொலை

உதய்ப்பூர்: லவ் ஜிகாத்தில் ஈடுபட்டதாக, ராஜஸ்தானில் கூலி தொழிலாளி ஒருவர் கோடாரியால் வெட்டி, தீ வைத்து எரிக்கப்பட்டார். இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில போலீசார் கூறுகையில், உதய்ப்பூர் மாவட்டம் ராஜ்நகர் பகுதியில் பாதி எரிந்த நிலையில் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தொடர்ந்து போலீசார் மோப்ப நாயுடன் சென்று விசாரணை நடத்தினர். அதில் கொல்லப்பட்டவர் மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தை சேர்ந்த அப்ரசுல் என்பதும், அவர் கூலி தொழிலாளி என்பதும் தெரியவந்தது. சம்பவ இடத்தில், கோடாரி ஒன்றும், இரு சக்கர வாகனமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவியது. அதில், அப்ரசுலை, சம்புலால் ரேகர் என்பவர் அழைத்து வந்து, கோடாரியால் வெட்டி, மண்ணெண்ணை ஊற்றி எரித்தது தெரியவந்தது. அப்போது, லவ் ஜிகாத் குறித்து சம்புலால் ரேகர் கத்தியதும் பதிவாகியிருந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
சம்பவத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sarathi - indland,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
08-டிச-201709:10:23 IST Report Abuse
sarathi லவ் ஜிகாத்தை ஒழித்து கட்டினால்தான் இந்த மாதிரி சம்பவங்கள் நடக்காது
Rate this:
Share this comment
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
15-டிச-201713:41:47 IST Report Abuse
Sitaramen Varadarajanஜிஹாத்தை கற்பித்தவனும், பரப்புகிறவனும், அமுல்படுத்துகிறவனும் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். மனித கொலைகளை இறைவன் பெயரில் படுத்துவதாக ....ஐயோ ஐயோ. ஐயோ. இந்த கும்பலுக்கும் மொத்தமாக உலக நாடுகள் அனைத்தும் இணைந்து ஒரு முடிவு எடுக்க வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
MaRan - chennai,இந்தியா
07-டிச-201717:52:42 IST Report Abuse
MaRan திருந்தவே மாட்டார்கள் வட இந்தியர்கள்
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
07-டிச-201716:37:19 IST Report Abuse
Cheran Perumal இதற்கு காரணமானவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
VIJAIANC -  ( Posted via: Dinamalar Android App )
07-டிச-201716:13:04 IST Report Abuse
VIJAIANC Not sure if that guy was involved in love jihad,even if it was true only legal action should be taken,this is very barbaric
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை