ஆர்கே நகரில் 59 பேர் போட்டி; விஷால் மனு தள்ளுபடி உறுதியானது| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆர்கே நகரில் 59 பேர் போட்டி; விஷால் மனு தள்ளுபடி உறுதியானது

Updated : டிச 07, 2017 | Added : டிச 07, 2017 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஆர்கே நகர் தேர்தல், RK Nagar Election,திமுக,DMK, அதிமுக,AIADMK,  வேட்பாளர்,Candidate,  மருதுகணேஷ், Marudhu ganesh, மதுசூதனன், Madhusudhanan,சுயேட்சை , தினகரன், Dinakaran, பா.ஜ, BJP, கரு.நாகராஜன், Karu Nagarajan, நடிகர் விஷால்,Actor Vishal, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா , Jayalalitha brother daughter Deepa, தேர்தல் ஆணையம், Election Commission,

சென்னை: ஆர்கே நகர் தேர்தலில், இறுதி வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்டது. 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இதில், விஷால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஆர்கே நகர் தேர்தல், டிச.,21ல் தேர்தல் நடக்க உள்ளது. திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன், சுயேட்சை வேட்பாளராக தினகரன், பா.ஜ.,வின் கரு.நாகராஜன், நடிகர் விஷால், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா உள்ளிட்ட பலர் ஆகியோர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு பரிசீலனையின் போது, தீபா, நடிகர் விஷால் உள்ளிட்ட 73 பேரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 72 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.
வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. அப்போது சுயேட்சை வேட்பாளர்கள் 13 பேர் தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்று கொண்டனர். இதனையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 59 பேர் தேர்தல் களத்தில் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.ஆர்.கே.நகரில் 59 பேர்

வேட்புமனு நிராகரிப்பு குறித்து தேர்தல் அதிகாரியிடம் விஷால் புகார் அளித்திருந்தார். தேர்தல் விதிப்படி, இன்று(டிச.,7) மதியத்திற்குள் ஆதாரத்துடன் தேர்தல் அலுவலரிடம் விளக்கமளித்தால், வேட்புமனு ஏற்று கொள்ள வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்து கையெழுத்திட்டதாக கூறப்படும் தீபன், சுமதி இருவரும் தேர்தல் அலுவலரிடம் நேரில் ஆஜராக விளக்கமளித்தனர். இறுதி வேட்பாளர் பட்டியலில் விஷாலின் பெயர் இடம்பெறவில்லை.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bairava - madurai,இந்தியா
08-டிச-201700:40:13 IST Report Abuse
bairava கடந்த முறை வாக்கியந்திரத்தில் தில்லுமுல்லு செய்து அதிமுக வெற்றிபெற்றதற்கு செய்த அதே செயலை பி ஜே பி செய்து வெற்றிபெறப்போகிறது தமிழன் வாயில் மண்ணு தான் .
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-டிச-201720:10:44 IST Report Abuse
முக்கண் மைந்தன் "விஷால் மனு தள்ளுபடி உறுதியானது" - தண்டயார்பேட்டெ சனங்க குடுத்து வெச்சது அவ்ளோதான்..... Next ட்டு எங்குனக்குள்ளயாவது மீட் பண்ணுவோம்....
Rate this:
Share this comment
Cancel
kuthubdeen - thiruvarur,இந்தியா
07-டிச-201718:53:36 IST Report Abuse
kuthubdeen விஷால் வேட்ப்புமனு நிராகரிக்க சதி நடந்ததாக சொல்லும் நண்பர்கள் அவர் தேர்தலில் நிற்க பின்னணியில் என்னவெல்லாம் சதி வேலை நடந்தது என்பதையும் யோசிக்கணும் ....ஆளும் கட்சி விரலை சூப்பிட்டா இருக்கும் .முக்கியமான எதிர் கட்சிகள் எல்லாம் தேர்தலில் நிற்குது அப்புறம் என்ன ?ஆளும் கட்சி பிடிக்கலைன்னா திமுக வுக்கு ஒட்டு போட்டுட்டு போங்க ...விசாலேதான் வேணுமாக்கும் .ஓட்ட பிரிச்சா திமுகவின் வெற்றி சுலபமாகும்னு நினச்சு இந்த வேல ...விஷாலுக்கு இனிதான் இருக்கு ஆப்பு ,,விரைவில் நடிகர்சங்க தலைவர் பதவியை விட்டு துரத்தி அடித்தாலும் ஆச்சரிய பட ஏதும் இல்ல .
Rate this:
Share this comment
Cancel
Vivaram Vignesh - Ayodhi,இந்தியா
07-டிச-201718:15:56 IST Report Abuse
Vivaram Vignesh விஷால் மனு தள்ளுபடி உறுதியானது என்று சொல்லுவதை விட மிரட்டப்பட்ட இருவர் மேற்கொண்டு தேர்தல் அதிகாரியிடம் கொடுக்கப்பட்ட காலவரையில் வந்து கையெழுத்து தங்கள் தான் போட்டது என உறுதி அளிக்கவில்லை என்பது தான் பொருத்தமாக இருக்கும். மிரட்டல் என்பது அதிமுகவிற்கு கைவந்த கலை. அதிமுகவும் அதை இயக்கும் பாழாய் போன பாஜகவும் இனி தமிழகத்தில் விலாசமின்றி தவிக்கும் என்பது உறுதி.
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
07-டிச-201718:11:54 IST Report Abuse
Indhuindian எப்படியும் கோர்ட்க்கு போக போகிறது. கோர்ட் எலெக்ஷனை ஸ்டே பண்ணாலும் பண்ணலாம். ஆகவே வேட்பாளர்கள் முடிச்சை அவிழ்ப்பதற்கு முன்னால் சிறிது யோசிக்கவும் அல்லது கோர்ட் ஆர்டர் வரும் வரைக்கும் அவசரப்படாமல் இருந்தால் நல்லது
Rate this:
Share this comment
Cancel
raja - Kanchipuram,இந்தியா
07-டிச-201717:57:50 IST Report Abuse
raja அரசு அதிகாரிகள் என்ற போர்வையில் எடுபிடிகள். கேவலம் இந்த மாதிரி சுய புத்தி இல்லாத ஜென்மங்கள் அதிகாரிகளாக பவனி வரும் நிலையில் நாடு இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
07-டிச-201717:55:12 IST Report Abuse
Tamilan இந்திய அரசியல் சட்டத்தின் காமெடி, நாடகங்களில் ஒன்று அரங்கேறியுள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Somiah M - chennai,இந்தியா
07-டிச-201717:51:05 IST Report Abuse
Somiah M தேர்தலில் போட்டி இடுவதற்கான விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் .போட்டி இடுவதற்காக தகுதிகளை மாற்றி அமைக்க வேண்டும் .ஜன நாயகத்தை கேலி கூத்தாக்குவது தடுக்கப் பட வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Kailash - Chennai,இந்தியா
07-டிச-201717:47:50 IST Report Abuse
Kailash விரைவில் இன்னொரு முறை தேர்தல் நடக்கும்... காரணம் அங்கு மிகவும் முதிர்ந்தவர் பல பேர் மறைமுக ஆதரவு பின்னணியில் வெற்றி பெறுவார். முதிர்ந்தவர் வேறு... சில மாதங்களில் திரும்பவும் பிளாஷ் நியூஸ் வரலாம்... ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகலாம்.... பிறகு வழக்கம் போல... சொத்து விபரங்களோடு ஆரோக்கியம் பற்றி மருத்துவர் சான்றிதழ் இணைக்கலாம் காரணம் அரசுக்கு தேவையில்லாமல் தேர்தல் செலவு அதிகரிக்கிறது மக்கள் பணம் வீணாக்குகிறது ....
Rate this:
Share this comment
Cancel
jaikrish - LONDON,யுனைடெட் கிங்டம்
07-டிச-201717:39:49 IST Report Abuse
jaikrish நடக்குமா நடக்காதா ?.ஜெயிக்கப் போவது யாரு...?.ஆருடம் சொல்வதில் தமிழிசை அக்காதான் வல்லவர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை