கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்

Added : டிச 07, 2017 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கும்பமேளா,திருவிழா,யுனெஸ்கோ,அங்கீகாரம்

புதுடில்லி : நாட்டின் முக்கிய நீர் நிலைகளில் கொண்டாடப்படும், கும்பமேளா திருவிழாவுக்கு, 'யுனெஸ்கோ'வின் பாரம்பரிய, கலாசார அங்கீகாரம் கிடைத்துள்ளது.

வட மாநிலங்களில் உள்ள அலகாபாத், ஹரித்துவார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் நகரங்களில் உள்ள நதிக்கரையில், கும்பமேளா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உலகின் பல நாடுகளைச் சேர்ந்தோர் இதில் பங்கேற்று, நீர்நிலைகளில் புனித நீராடுவர்.

நீண்ட காலமாக நடந்து வரும் கும்பமேளா நிகழ்ச்சிக்கு, சர்வதேச கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான, 'யுனெஸ்கோ' அங்கீகாரம் கிடைத்துள்ளது. மனித குலத்தின் குறிப்பிடத்தக்க பாரம்பரிய கலாசார நிகழ்ச்சியாக, கும்பமேளாவை, யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

இது குறித்து, மத்திய கலாசார அமைச்சர் மகேஷ் சர்மா, ''கும்பமேளா திருவிழாவுக்கு, யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்,'' என, தெரிவித்து உள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
08-டிச-201707:48:48 IST Report Abuse
Subramanian Arunachalam இந்த அங்கீகாரத்தால் இந்தியாவிற்கோ அல்லது நம் நாட்டு மக்களுக்கோ என்ன பயன். எனக்கு தெரிந்து இந்த மாதிரி அங்கீகாரத்தால் எந்த வித உபயோகமும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
08-டிச-201706:45:37 IST Report Abuse
Rajendra Bupathi சரி இந்த விழாவின் நோக்கம்தான் என்ன? யாராவது சொல்லுங்களேன்?
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
08-டிச-201702:31:13 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) யூனஸ்க்கோவிற்கு நன்றி
Rate this:
Share this comment
Cancel
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
08-டிச-201702:27:45 IST Report Abuse
Jaya Prakash அவன் அங்ககரித்தால் என்ன...இல்லனாலும் என்ன....கும்பமேளா நம்முடைய திருவிழா... இந்திய நாட்டின் திருவிழா....
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
08-டிச-201700:12:56 IST Report Abuse
Kuppuswamykesavan கங்கை நதியின் மீது பக்தி உள்ள அதே தீவிர ஈடுபாடு, அந்த நதியை தூய்மையாக பேணி பாதுகாப்பதிலும் இருந்துவிட்டால், இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கூட, கங்கை நதி வணங்கதக்க, வழிபாடு செய்யதக்க உகந்த இடமாக, இருக்கும்தானே?. இதை, அங்கு சென்று நீராடும் அனைத்து இந்தியர்களும், தங்கள் மனதில் நினைத்து, அதற்கு ஏற்ப செயல்படும்தானே?.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை