ஆதார் இணைப்புக்கான காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிக்க அரசு தயார் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஆதார் இணைப்புக்கான காலக்கெடு
மார்ச் 31 வரை நீட்டிக்க அரசு தயார்

புதுடில்லி : 'பல்வேறு சமூக நலத் திட்டங்கள், மானியங்களைப் பெறுவதற்காக, ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை, 2018, மார்ச், 31 வரை நீட்டிக்கத் தயாராக உள்ளோம்' என, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆதார் அட்டை,Aadhaar card, உச்ச நீதிமன்றம்,Supreme Court,  மத்திய அரசு, Central Government,மொபைல் எண்,Mobile Number,  வங்கிக் கணக்கு, Bank Account, நீதிபதி தீபக் மிஸ்ரா,Judge Deepak Mishra,  அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால்,Attorney General KK Venugopal, ஆதார்,Aadhaar, பான் கார்டு, Pan Card,'மொபைல் போன் எண், வங்கிக் கணக்கு போன்றவற்றுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். 'பல்வேறு சமூக நலத் திட்டங்கள், மானியங்கள் பெறுவதற்கும் ஆதார் குறிப்பிடுவது கட்டாயம்' என்பது போன்ற மத்திய அரசின் உத்தரவுகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

ஆதார் தொடர்பான வழக்கில், 'தனிநபர் சுதந்திரம், ஒருவரது அடிப்படை உரிமை' என, ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு, சமீபத்தில் தீர்ப்பு அளித்திருந்தது.

'ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளையும், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரிக்கும்' என, உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால் கூறியதாவது:

பல்வேறு சமூக நல திட்டங்களைப் பெறுவதற்காக ஆதார் எண்ணைக் குறிப்பிடுவதற்கான காலக்கெடுவை, 2018 மார்ச், 31 வரை நீட்டிக்க, மத்திய அரசு தயாராக உள்ளது. அதே நேரத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, 2018 பிப்., 6ம் தேதி என்பதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

ஆதார் எண் இல்லாதவர்கள், அதை பெறுவதற்கு அவகாசம் அளிக்கும் வகையில், அவர்கள் மீது, 2018 மார்ச், 31 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, இந்த வழக்குகளை விசாரிக்கும், அரசியலமைப்பு சட்ட அமர்வு, அடுத்த வாரத்தில் அமைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

பான் கார்டு, மொபைலுக்கான காலக்கெடுவில் மாற்றமில்லை


ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: வங்கிக் கணக்கு, பான் கார்டு மற்றும் மொபைல் எண்களுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான உத்தரவுக்கு, நீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை. அந்த உத்தரவு சட்டப்பூர்வமானது; நடைமுறையில் உள்ளது. அதன்படி, வங்கிக் கணக்கு மற்றும் பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, டிச., 31ல் முடிகிறது. மொபைல் எண்ணுடன், ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு, 2018, பிப்., 6ம் தேதியோடு முடிகிறது. இந்தக் காலக்கெடுவில் எந்த மாற்றமும் இல்லை.


Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) அரசாங்கம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்...மேலும் இ-சேவை மையங்களில் ஆதாரை இணைக்கும் பணி விரைந்து முடிக்க படும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்...

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
08-டிச-201703:47:08 IST Report Abuse

Kasimani Baskaranதொய்வில்லாமல் இதை செய்யவேண்டும்...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X