தேர்தல் ரத்தாகலாம்: ஸ்டாலின் சந்தேகம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தேர்தல் ரத்தாகலாம்:
ஸ்டாலின் சந்தேகம்

சென்னை : ''சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை, மீண்டும் ரத்து செய்ய வாய்ப்புள்ளது,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க, D.M.K,ஸ்டாலின்,Stalin, ஆர்.கே.நகர் தேர்தல்,RK Nagar election, கவர்னர்  பன்வாரிலால் புரோஹித்,Governor Banwarilal Purohit,  திருநெல்வேலி,  Tirunelveli, கன்னியாகுமரி,Kanyakumari,  சட்டசபை,Assembly, அ.தி.மு.க., AIADMK,


கொளத்துாரில், ஸ்டாலின், நேற்று அளித்த பேட்டி: கடந்த முறை, தி.மு.க., வெற்றிப் பெற போகிறது என்பதால், 89 கோடி ரூபாய் பட்டுவாடா விவகாரத்தை, அடிப்படையாக வைத்து, ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்தினர். இப்போதும், அதுபோல நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால், தி.மு.க., மிகப்பெரிய வெற்றி பெறக்கூடிய நிலை, இப்போதும் உருவாகியிருக்கிறது.

கவர்னர், திருநெல்வேலியில் ஆய்வு நடத்தியிருக்கிறார்; கன்னியாகுமரிக்கும் செல்கிறார். அரசியல் சட்ட விதிகளின்படி பார்த்தால், கவர்னர் ஆய்வு நடத்துவதற்கோ

அல்லது மாவட்டவாரியாக சென்று, மக்கள் பணிகளை கவனிப்பதற்கோ, அதிகாரமும், உரிமையும் இல்லை. அ.தி.மு.க., ஆட்சி, உடனே பெரும்பான்மையை நிரூபிக்க, சட்டசபையைக் கூட்டும் பணியை, கவர்னர் செய்தால், எல்லாரும் அவரை பாராட்டுவர். இவ்வாறு அவர் கூறினார்.

கவர்னருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


'மாவட்டங்களில், அரசு பணிகளை ஆய்வு செய்வதை, கவர்னர் கைவிடவில்லை என்றால், அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை தொடர்ந்து, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், கவர்னர், பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்திருப்பது, வெளிப்படையான அரசியல். 'அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுவேன்; வெளிப்படையான நிர்வாகத்திற்கு வித்திடுவேன்' என, வாக்குறுதி அளித்து, பதவியேற்ற கவர்னர், தற்போது, மத்திய அரசின் திட்டங்களுக்குத் துாதுவராக செயல்படுகிறார்.

Advertisement

கவர்னருக்குரிய வரம்புகளை, இன்னும், அவர் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை, இது எடுத்துக்காட்டுகிறதா அல்லது எல்லை வரம்புகள் தெரிந்திருந்தும், தமிழகத்தில், பா.ஜ.,விற்கு நற்பெயரை திரட்ட வேண்டும் என, கருதுகிறாரா என்ற, கேள்வி எழுகிறது. மாவட்டங்களில், ஆய்வு செய்யும் அரசியல் பணியை, கவர்னர் உடனே கைவிட வேண்டும்.

இனிமேலும், மாநில சுயாட்சி கொள்கையையும், கூட்டாட்சி தத்துவத்தையும், வலுவிழக்க செய்ய முயன்றால், கவர்னர் ஆய்வுக்குச் செல்லும் மாவட்டங்களில், தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Attianna - Coimbatore,இந்தியா
09-டிச-201714:53:07 IST Report Abuse

Natarajan Attiannaஎன்னையா இது அஷ்ட கோணத்தில் மூஞ்சி,

Rate this:

ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) பணப்பட்டுவாடா அனைத்தும் முடிந்த பின்னர் தேர்தலை மீண்டும் ரத்து செய்ய வேண்டும்...மீண்டும் ஒருமுறை தேர்தல் அறிவிக்க பட்டு மீண்டும் முதலில் இருந்து நடத்த வேண்டும்...எத்தனை முறைதான் இவர்கள் பணம் பட்டுவாடா செயகிறார்கள் என்று பார்க்க வேண்டும்...கொள்ளையடித்த பணத்தையெல்லாம் இந்த மாதிரியான வழியிலாவது செலவு செய்ய வெளியே எடுக்க வைக்க வேண்டும்...

Rate this:
Gopalakrishnan - Kuzhumani,இந்தியா
08-டிச-201718:21:42 IST Report Abuse

Gopalakrishnanகுடு குடு குடு குடு .... சன்குழுமத்தில் இருந்து 300 கோடி மாதாமாதம் 300 கோடி லவுடரோம் ....குடு குடு குடு குடு

Rate this:
skandh - chennai,இந்தியா
08-டிச-201718:17:36 IST Report Abuse

skandhமத்திய அரசு ஸ்வாட்ச் பாரத் வரியை விலக்கிக்கொண்டு. ஒவ்வொரு மாகாணத்திலும் எத்தனை மாவட்டமிருக்கிறதோ அத்தனை கவர்னரை போடட்டும். அந்த கவர்னர்கள் மாவட்டம் தோரும் சென்று துடைப்பத்தால் பெருக்குவார்கள் மக்களுக்கும் சிக்கனமாகும் உறும் சுத்தமாகும். பி ஜெபிக்காரர்களுக்கும் வேலை கிடைக்கும்.பி ஜெ பியின் திட்டங்களும் நிறைவேறும் நல்ல யோசனையா?

Rate this:
Jeeva - virudhunagar,இந்தியா
08-டிச-201717:58:47 IST Report Abuse

Jeeva unaku vera velaai illaiya ?

Rate this:
Prem - chennai,இந்தியா
08-டிச-201717:21:19 IST Report Abuse

PremNeenga panra panapattuvada nalaiyae therdhal nikka vaaipu iruku

Rate this:
RENETO - Chennai,இந்தியா
08-டிச-201716:57:11 IST Report Abuse

RENETOstalin yen ipdi payapaduraru... oru velai tholvi payathula ipdilam olaritte irukkuraro...????

Rate this:
Sarathi_Ganesh - Delhi,இந்தியா
08-டிச-201716:52:31 IST Report Abuse

Sarathi_Ganeshneenga epdiyum win panna maatttaga sudalin..

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
08-டிச-201715:58:43 IST Report Abuse

Endrum Indianசுடாலினைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கின்றது, ஏதோ ஒரு உளறல் உளறவேண்டுமே என்று சொல்வது போல இருக்கின்றது இது.

Rate this:
Anand - chennai,இந்தியா
08-டிச-201713:16:50 IST Report Abuse

Anandதோல்வி உறுதி. ஆதலால் ஏதாவது செய்து தேர்தலை நிறுத்தவேண்டும் என்கிற தோனியில் பேசுகிறார். திருமங்கலம் பார்முலா இவர்களுக்கே வேட்டு வைக்கிறது, முன்வினை....................

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement