'தொப்பி' போனாலும் தினகரன் 'அமோகம்' Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'தொப்பி' போனாலும்
தினகரன் 'அமோகம்'

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சுயேச்சையாக போட்டியிடும் தினகரனுக்கு, 'தொப்பி' கிடைக்காத நிலையில், அவரது ஆதரவு கும்பல், தெருவுக்கு தெரு, பணம் பட்டுவாடா செய்வதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

டி.டி.வி. தினகரன், TTV Dinakaran,தொப்பி, Hat, குக்கர், cooker,பணப்பட்டுவாடா, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், RK Nagar by election, சுயேச்சை, அ.தி.மு.க.,AIADMK, சசிகலா, Sasikala,வாக்காளர்கள், Voters, தினகரன், Dinakaran,


சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், ஏப்ரலில், இடைத்தேர்தல் நடக்க இருந்தது. அப்போது, அ.தி.மு.க., பிளவால், சசிகலா அணி சார்பில் போட்டிட்ட, தினகரனுக்கு, 'தொப்பி' சின்னம் கிடைத்தது. இந்த தொகுதியில், வரும், 21ல், இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த முறை, அ.தி.மு.க., அணிகள் இணைந்த நிலையில், கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தினகரன், சுயேச்சையாக போட்டியிடுகிறார். மீண்டும் தொப்பி சின்னம் கோரினார். ஆனால், 'பிரஷர் குக்கர்' சின்னமே கிடைத்தது.

தொப்பி போனாலும், தொடர்ந்து, 'கெத்து' காட்டி வரும் தினகரன் தரப்பினர், முன் போல், தெருத்தெருவாக பணத்தை வாரி வழங்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார். தொகுதியில் குவிந்துள்ள பிற மாவட்ட ஆட்கள், தண்டையார்பேட்டை பகுதிகளில், வீடு வீடாக சென்றனர்.

ஓட்டுக்களை உறுதி படுத்தும் வகையில், வாக்காளர் அட்டை நகல், அவர்களின் மொபைல் போன் எண்களையும் பெற்றனர்.

'மொபைல் போனில் அழைப்பு வரும்; சொல்லும் இடத்திற்கு வந்துவிடுங்கள்' எனக்கூறி செல்கின்றனர். இதனால், இந்த முறை, 2 கிராம் தங்கம் கிடைக்குமா, பணம் கிடைக்குமா என, தெரியாமல், வாக்காளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

'தொப்பி' பறிபோனது ஏன்?


கடந்த முறை அறிவிக்கப்பட்ட தேர்தலின்போது, 'தொப்பி' சின்னத்தில் போட்டியிட்ட தினகரன், பணத்தை வாரி இறைத்ததால் அந்த சின்னம் மக்களிடம் பிரபலமானது. இதனால், 29 சுயேச்சைகள் தொப்பி சின்னத்தை பெற முட்டி மோதினர்.

தேர்தல் கமிஷனில் பதிவு பெற்ற கட்சிகளான, நமது கொங்கு முன்னேற்ற கழக வேட்பாளர் ரமேஷ், தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் ரவி இருவரும் தொப்பி சின்னத்தை கேட்டிருந்தனர். விதிமுறைப்படி பதிவு பெற்ற கட்சி வேட்பாளர்களுக்குத்தான் சின்னத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். அதன்படி ரமேஷ், ரவி இருவரும், தொப்பி சின்னம் கேட்டதால் குலுக்கல் நடந்தது. இதில் ரமேஷிற்கு தொப்பி சின்னம் கிடைத்தது.

தொப்பி சின்னத்திற்கு அடுத்ததாக, கிரிக்கெட் மட்டை, விசில் ஆகிய சின்னங்களை ஒதுக்க தினகரன் கோரியிருந்தார்.

Advertisement

அவற்றையும் வேறு வேட்பாளர்கள், தட்டிச் சென்றனர். இறுதியாக தினகரனுக்கு, 'பிரஷர் குக்கர்' சின்னம் ஒதுக்கப்பட்டது.

இது குறித்து தினகரன் கூறுகையில், ''நான் ஏற்கனவே, 'எந்த சின்னம் கொடுத்தாலும் நிற்பேன்' என கூறியிருந்தேன். வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் என்பதுபோல், என் எதிரிகளையும், துரோகிகளையும், 'பிளட் பிரஷர்' ஏற்ற, 'பிரஷர் குக்கர்' சின்னத்தில் நிற்கிறேன்,'' என்றார்.

'ஓட்டுகளை பிரிப்போம்'

'தொப்பி' சின்னம் பெற்ற, நமது கொங்கு முன்னேற்ற கழக வேட்பாளர் ரமேஷ் கூறுகையில், ''நாங்கள் யாரையும் போட்டியாளராக நினைக்கவில்லை. ஏற்கனவே எங்கள் கட்சி சார்பில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம். தொப்பி சின்னம் கிடைத்துள்ளதால், ஓட்டுகளை பிரிப்போம்; இது, தாக்கத்தை ஏற்படுத்தும்,'' என்றார்.- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) ஆசைப்பட்டது கிடைக்க வில்லை என்றால் என்ன...கிடைத்ததை வைத்து முயற்சிக்க வேண்டியதுதான்...எனக்கு தெரிந்த வரையில் தி.மு.க வெற்றி பெரும்...

Rate this:
Amma_Priyan - Bangalore,இந்தியா
08-டிச-201723:31:59 IST Report Abuse

Amma_Priyanசமையல்காரன் போலவே உள்ளது

Rate this:
Devanand Louis - Bangalore,இந்தியா
08-டிச-201721:13:19 IST Report Abuse

Devanand LouisIT ரைடுஎன்ற சின்னம் இருந்தால் இவனுக்கு கொடுக்கலாம்

Rate this:
jagan - Chennai,இந்தியா
08-டிச-201719:05:20 IST Report Abuse

jaganகுக்கர் இங்கிலீஸ் வார்த்தையே , எப்பிடி தமிழில் சின்னத்தை சொல்வார்?

Rate this:
jagan - Chennai,இந்தியா
08-டிச-201719:03:52 IST Report Abuse

jaganசூட்கேஸ் சின்னம் யாருக்கும் இல்லையா?

Rate this:
Jeeva - virudhunagar,இந்தியா
08-டிச-201718:01:07 IST Report Abuse

Jeeva COOKER LA VARUM UNAKU SATHAAM NEE VENAM ENGALUKKU NITHAM

Rate this:
08-டிச-201717:43:00 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்எந்த சின்னம் கொடுத்தாலும் அந்த பொருளை வாங்கி மக்களிடம் சேர்க்கிறார்கள். தேர்தல் ஆணையம் ஒரு கார் , மோட்டார் சைக்கிள் சின்னம் கொடுத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

Rate this:
Prem - chennai,இந்தியா
08-டிச-201717:22:23 IST Report Abuse

PremTTV endha chinnathula pottiyittalum avaruku tholvi mattum than minjum

Rate this:
RENETO - Chennai,இந்தியா
08-டிச-201716:57:59 IST Report Abuse

RENETOTTV enna saeithalum tholvi 100% confirm

Rate this:
Sarathi_Ganesh - Delhi,இந்தியா
08-டிச-201716:53:13 IST Report Abuse

Sarathi_Ganeshintha TTV kosu tholla thaanga mudila...

Rate this:
மேலும் 63 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement