'சீன எல்லைக்குள் அத்துமீறவில்லை': இந்திய ராணுவம் விளக்கம் Dinamalar
பதிவு செய்த நாள் :
'சீன எல்லைக்குள் அத்துமீறவில்லை'
இந்திய ராணுவம் விளக்கம்

புதுடில்லி : 'ஆளில்லா விமானம், அத்துமீறி சீன எல்லைக்குள் நுழைந்ததாக கூறுவது தவறு. பயிற்சியில் இருந்த விமானம், சீன எல்லைக்குள் தவறுதலாக நுழைந்து விட்டது என்ற தகவலை, சீனாவுக்கே நாம் தான் தெரிவித்தோம்' என, ராணுவம் கூறி உள்ளது.


Image
'இந்திய ராணுவத்தின், 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா விமானம், சீன எல்லைக்குள்

நுழைந்துள்ளது. இது, அத்துமீறிய செயல்' என, சீனா குற்றஞ்சாட்டி உள்ளது.
ஆனால், எந்த பகுதியில் அந்த விமானம் பறந்தது என்ற தகவல் தெரிவிக்கப் படவில்லை. இந்த பிரச்னை குறித்து, மத்திய அரசு, எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே, ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சீன எல்லைக்குள், அத்துமீறியதாக கூறப்படும் ஆளில்லா விமானம், பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, தவறுதலாக சீன எல்லைக்குள் நுழைந்துள்ளது.

Advertisement

நம் எல்லையை, இறையாண்மையை மதிப்பது போல், மற்ற நாடுகளின் இறையாண்மையையும் மதிக்கிறோம். அதனால் தான், இந்த சம்பவம் குறித்து, சீனாவுக்கு தகவல் தெரிவித்தோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement