டிரம்ப்பிற்கு ஐ.எஸ்., அல்கொய்தா எச்சரிக்கை Dinamalar
பதிவு செய்த நாள் :
டிரம்ப்பிற்கு ஐ.எஸ்., அல்கொய்தா எச்சரிக்கை

லண்டன் : இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு, ரத்தத்தில் குளிக்க செய்வோம் என அல்கொய்தா, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கங்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளன.

 அமெரிக்க அதிபர் டிரம்ப்,US President Trump, ஐ.எஸ் பயங்கரவாதம், IS Terrorism,அல்கொய்தா, Al Qaeda, இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம், Israel capital Jerusalem, வாஷிங்டன் வெள்ளை மாளிகை,Washington White House, டெல் அவிவ், Tel Aviv, அமெரிக்கா,USA, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, Israeli Prime Minister Benjamin Netanyahu, பாலஸ்தீன நிர்வாக தலைவர் மகமது அப்பாஸ்,Palestinian Executive Chairman Mahmud Abbas, எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி,Egypt President Abdel Batta El Sisi, ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா,Jordan King II Abdullah, சவுதி அரேபியா, Saudi Arabia, trump,


ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து, அது தொடர்பான அறிவிப்பை வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் நள்ளிரவில் வெளியிட்டார். மேலும் டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேமுக்கு அமெரிக்க துாதரகத்தை உடனடியாக மாற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சர்வதேச அளவில் இஸ்ரேலின் தலைநகராக

ஜெருசலேமை அங்கீகரிக்கிற முதல் உலக நாடாக அமெரிக்கா உள்ளது.

முன்னதாக இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, பாலஸ்தீன நிர்வாக தலைவர் மகமது அப்பாஸ், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி, ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா ஆகியோருடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிடுவதற்கு முன்பே அனைத்து அரபு நாடுகளும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் ஓரணியில் திரண்டன.

இது குறித்து பாலஸ்தீன நிர்வாக சர்வதேச விவகார ஆலோசகர் நஹில் கூறுகையில், ''இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம் என்று டிரம்ப் அறிவித்ததன் மூலம் அவர் ஒரு நேர்மையான மத்தியஸ்தராக செயல்பட முடியாது'' என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் ஆதரவு நாடான சவுதி அரேபியா, ''இது முஸ்லிம்களுக்கு ஆத்திரம்

Advertisement

ஏற்படுத்தும் செயலாக அமையும்'' என்று கருத்து தெரிவித்தது.
டிரம்பின் முடிவு குறித்து விவாதித்து முடிவு எடுக்க ஜோர்டான், அரபு நாடுகள் அவசர கூட்டத்தை நாளை கூட்டுகின்றன. டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடைய உருவப்படம், அமெரிக்க தேசியக்கொடியை எரித்து பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டிரம்ப் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இரத்தத்தில் குளிக்க செய்வோம் என அல்கொய்தா, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கங்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளன.


Advertisement

வாசகர் கருத்து (26)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
10-டிச-201706:43:19 IST Report Abuse

sridharankcஅடுத்த பஞ்சாயத்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுகும் ஆக இருக்கும.

Rate this:
Sulaiman Seit - Chennai,இந்தியா
08-டிச-201720:14:03 IST Report Abuse

Sulaiman Seitபதவியை பயன்படுத்தி டிரம்ப் பேசி இருப்பது ஒரு வகையில் தீவீரவாதமே.எனவே இவரை போன்ற தீவீரவாதிகளுக்கு தீவீரவாதிகளின் எச்சரிக்கை என்பது மிகைப்படுத்த தேவை இல்லாத விஷயம்.நல்லதை விதைத்தால் நல்லதை அறுவடை செய்யலாம்.தீயதை விதைத்தால் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அதற்கான கூலியை கொடுத்தே ஆகவேண்டும்.உலகம் அமைதியாக இருப்பதை விரும்பாத டிரம்பிற்கு எனது கண்டனங்களை பதிவிட்டு கொள்கிறேன்.

Rate this:
Pats - Coimbatore,இந்தியா
08-டிச-201716:33:58 IST Report Abuse

Patsபாலஸ்தீனம் என்பது சமீப காலத்துப் பெயர். முந்தைய வரலாற்றில் பாலஸ்தீன் என்று எதுவும் இல்லை (1940களில்தான் இந்தியா என்ற பெயர் பயன்பாட்டுக்கு வந்ததைப் போல). பாலஸ்தீனியர்கள் என்று இன்று அழைக்கப்படுபவர் எல்லோருமே அரபு-முஸ்லீம் இனத்தினர். அரபு படை எடுப்புகளின் மூலம் புது நிலங்களை ஆக்ரமித்தவர்களே (காஷ்மீர் முஸ்லிம்கள் போல). கூடவே கொஞ்சம் பழமைவாத கிறிஸ்தவர்களும் உள்ளனர். அல்-அக்ஸ்ஸா மசூதி அரபு படையெடுப்புகளின்போது கட்டப்பட்டதே. அதுவும் யூதர்களின் பழமையான கோவிலை இடித்து அதன் மீது கட்டப்பட்டது என்பது யூதர்கள் வாதம் (அயோத்தி ராமர் கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டது போல). உண்மையில் யூதர்களே ஜெருசலேமின் 4000 ஆண்டுக்கும் முந்தைய பூர்வ குடியினர். ரோமானிய (இத்தாலி), கிறிஸ்தவ (கிரீஸ்) ஒட்டாமன் (துருக்கி), அரேபிய (சிரியா/ஜோர்டான்/எகிப்து) படையெடுப்புகளால் யூதர்கள் நாடிழந்து நாடோடிகளாய் உலகம் முழுவதும் அடிமைகளாகவும், அகதிகளாகவும் திரிந்து, மீண்டுவந்து தங்களுடைய உரிமையை நிலைநாட்டினர். யூதர்களை வெளியேற்றி ஆக்ராமிப்பின்மூலம் இடையில் வந்து காலூன்றியவர்கள் இன்றைய பாலத்தீனிய அரபு-முஸ்லீம்கள். பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை மொத்தமாக 60-70 லட்சம். இன்றைய முஸ்லீம் நாடுகள் நினைத்தால் இவர்களுக்கு தாராளமாக நிலம் கொடுக்கலாம். துருக்கி, சிரியா, ஈராக், ஈரான், ஜோர்டான், அரேபியா, எகிப்து, அல்ஜீரியா, லிபியா, சூடான், மொராக்கோ, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பறந்து விரிந்து கிடக்கிறது இஸ்லாமியர்களுக்கான நிலம். முக்கியமாக பாலத்தீன அரபு-முஸ்லிம்களின் பூர்வீக நிலம் சிரியா, ஈராக், ஜோர்டான், அரேபியா பகுதிகள். பாலஸ்தீனியர்கள் வீம்புக்காககவும், அல்-அக்ஸா மசூதிக்காகவும் மிகச் சிறிய நிலப்பரப்பை சொந்தம் கொண்டாடி யூதர்களுடன் சண்டையிட்டு வருகின்றனர். மற்ற முஸ்லீம் நாடுகள் இஸ்லாமிய ஆதிக்க மற்றும் யூத, கிறிஸ்தவ எதிர்ப்பு மனோபாவத்துடன் பாலஸ்தீனியர்களை தூண்டிவிட்டு, ஆதரித்து வருகின்றனர்.

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X