கதறிய பெண்களால் கலங்கிய கவர்னர்! : குமரி மாவட்டத்தில் ஆய்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கதறிய பெண்களால் கலங்கிய கவர்னர்! : குமரி மாவட்டத்தில் ஆய்வு

Added : டிச 07, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
கதறிய பெண்களால் கலங்கிய கவர்னர்! : குமரி மாவட்டத்தில் ஆய்வு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில், 'ஒக்கி' புயல் பாதிப்புகளை பார்வையிட சென்ற கவர்னர் புரோஹித் காலில் விழுந்து பெண்கள் கதறியதை பார்த்து, அவரும் கலங்கினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், நேற்று முன்தினம் இரவு, கன்னியாகுமரி வந்தார். நேற்று காலை அவர், கன்னியாகுமரி பகவதி அம்மன், சுசீந்திரம் தாணுமாலையன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின், கன்னியாகுமரி திரும்பிய அவர், மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன், ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
பின், புயல் சேதங்களை பார்வையிடச் சென்றார். மணக்குடி, ராஜாக்கமங்கலம் வழியாக குளச்சல் வந்தார். இங்கு, காணாமல் போன சில மீனவர்களின் வீட்டுக்கு சென்ற போது, பெண்கள் கதறி அழுதனர்.
ஒரு பெண், கவர்னரின் காலில் விழுந்து கதறி அழுதார். அவருக்கு கவர்னர் கண் கலங்க ஆறுதல் கூறினார். மீனவர்களுக்கு உதவ தேவையான நடவடிக்கைகள் எடுப்பேன் என, உறுதியளித்தார்.
பின், தடிக்காரன்கோணம், தெரிசனங்கோப்பு, சுசீந்திரம், கற்காடு முதலிய இடங்களில், புயல் சேதங்களை, கவர்னர் பார்வையிட்டார்.
தொடர்ந்து, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வந்த அவர், விவேகானந்தர் மண்டபத்தை நிறுவிய ஏக்நாத் ரானடே சமாதியில், மலர் அஞ்சலி செலுத்தினார். படகில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சென்றார்.
விருந்தினர் மாளிகையில், மாலை, 4:00 மணி முதல், மக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.
கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன், புயல் நிவாரணப் பணி பற்றி ஆலோசனை நடத்தினார். மாலை, 5:15 மணிக்கு கார் மூலம் மதுரை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார்.

கேரளா போல நிவாரணம் : கவர்னரை சந்தித்த பின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: புயலில் சிக்கி, வேறு மாநில துறைமுகங்களில் கரை ஒதுங்கிய மீனவர்களுக்கு, தேவையான உதவிகளை செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக, மீனவர்கள் கடல் மார்க்கமாக, தங்கள் விசைப்படகுகளில் ஊர் திரும்ப, டீசல் உள்ளிட்ட வசதிகளை வழங்கவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தேன். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களையும் சந்தித்து, குறைகளை கேட்டறிந்தேன். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்களுக்கு போதிய ஏற்பாடுகள் சரவர செய்யப்படவில்லை. மாவட்டம் முழுவதும் சாய்ந்து கிடக்கும் மரங்கள், இதுவரை முழுமையாக அகற்றப்படவில்லை. புயல் சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியின் போது, மாவட்ட மக்களின் மனநிலை புரிந்து, அதிகாரிகள் செயல்பட வேண்டும். கேரள அரசு போல, தமிழக அரசும், புயலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில், ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கான கோரிக்கை குறித்து, தமிழக அரசிடம் ஆலோசித்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan S - Kancheepuram,இந்தியா
08-டிச-201707:06:20 IST Report Abuse
Giridharan S ஒரு கவர்னர் போய் புயல் பாதித்த இடங்களை பார்வை இடுகிறார் ஆனால் நம்ம முதல்வருக்கு பாவம் நேரம் இல்லை,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை