ஆர்.கே.நகரில் 59 பேர் போட்டி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆர்.கே.நகரில் 59 பேர் போட்டி

Added : டிச 07, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஒரு பெண் உட்பட, 59 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், வேட்பு மனு தாக்கல், நவ., 27ல் துவங்கி, டிச., 4ல் நிறைவடைந்தது. 145 வேட்பு மனுக்கள் வரப்பெற்றன.
டிச., 5ல் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது. நடிகர் விஷால், ஜெ., அண்ணன் மகள் தீபா உட்பட, 73 பேரின் மனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்பு மனுக்களை வாபஸ் பெற, நேற்று கடைசி நாள். சுயேச்சை வேட்பாளர்கள், 13 பேர், வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இறுதியாக, ஒரு பெண் உட்பட, 59 வேட்பாளர்கள், களத்தில் உள்ளனர். அ.தி.மு.க., வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க., வேட்பாளர் மருதுகணேஷ், பா.ஜ., வேட்பாளர் கரு.நாகராஜன், சசிகலா அக்கா மகன் தினகரன் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. இவர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டு, நேற்றிரவு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை